திரு மறை குரான்
(3:11)
-04112022 வெள்ளி
இது குரானின் எந்தப்பகுதியில் வருகிறது ?
விடை
சூராஹ் 3 ஆலு இம்ரான் வசனம் 11
“(இவர்களின் கதி ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார் இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் நிலைமை போன்றுதான்.
(அவர்கள்) நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள். எனவே, இறைவன் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்தான்.
இறைவன் த ண்டிப்பதில் கடுமையானவன்.”
இதற்குப் பெரிய விளக்கம் ஏதும் தேவை இல்லை
பணம், பதவி தரும் போதையில் மதி மயங்கி தவறு செய்கிறோம் என்ற குற்ற உணர்வே இல்லாமல் கண்டதேகா ட்சி ,கொண்டதே கோலம் என ஆடித் திரியும் அனைவருக்கும் பொருந்தும் எச்சரிக்கை
இது போன்ற வசனங்கள் குர்ஆனில் பல இடங்களில் வருகின்றன
சரியான விடை எழுதி
வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி- - முதல் சரியான விடை (8:52, 54 என்பது அவர் விடை )
ஷர்மதா
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
09 ரபியுல் ஆகிர்1444
04112022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment