திருமறை குரான்
17:1 இஸ்ரா ,மிராஜ்
18112022 வெள்ளி
எதைக் குறிக்கிறது ?
விடை
சூராஹ் 17 அல் இஸ்ரா(இரவுப்பயணம் )/பனு இஸ்ராயில் –(இஸ்ராயிலின் மக்கள் வசனம் 1
புனித அல் ஹராம் வணக்கத் தலத்தில் இருந்து அக்ஸா வணக்கத்தலம் வரை தன் அடியானை
தன் சான்றுகளிலிருந்து (பலவற்றை) காண்பிப்பதற்காக அவரை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அந்ததப்புனித தளத்தைச் சுற்றி அருள் வளம் புரிந்தோம்
. நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.(17:1)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் – முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஹசன் அலி
தல்லத்
விளக்கம்
மிராஜ் என்றும் இஸ்ரா என்றும் அறியப்பட்ட இரவுப் பயண நிகழ்வு இந்த வசனத்தில் மிகச் சுருக்கமாக சொல்லாப்டுகிறது
இந்தப்யணம் பற்றி வேறு எதுவும் குர்ஆனில் சொல்லப்படவில்லை
ஆனால் மிக நம்பிக்கைக்கு உரிய உமர், அலி, அபு ஹுரைராஹ் போன்றோர் இது பற்றி மிக விரிவாக எடுத்துச் ஸொல்லியிருக்கிறார்கள்
அதை முடிந்த அளவு சுருக்கமாக இங்கே தர முயற்சி செய்கிறேன்
“இது நடந்தது கி பி 621 ஆம் ஆண்டு
மக்காவில் உள்ள புனித ஹராமில் இருந்து ஜெருசேலத்தில் உள்ள அல் அக்சா (பைத்துல் முகத்தஸ் ) வுக்கு இரவோடு இரவாக வானவர் தலைவன் ஜிப்ரயில் நபி பெருமானை புராக் வாகனத்தில் அழைத்துச் சென்றது இஸ்ரா (இரவில் அழைத்துச் செல்லுதல் ) என்றும்
அக்ஸாவில் இருந்து விண்ணுலகிற்கு நபி அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டது மிராஜ் என்றும் சொல்லப்டுகிறது
இது உடல் பயணமும், ஆன்மீகப் பயணமும் இணைந்த ஒரு நிகழ்வு
விண்வெளிப் பயணத்தின் பல நிலைகளில் சில நபி மார்களை சந்தித்த நபி பெருமான் அவர்களுக்கு நிறைவாக இறைவனை நேரில் பார்க்கும் அரிய வாய்ய்பு கிடைத்தது
அங்கு நபி அவர்கள் இறைவனுக்கு வணக்கம் கூறியதும் அதற்கு மறுமொழியாக இறைவன் நபியை வாழ்த்தியதையும் அந்த வாழ்த்தின் பயனை நபி அவர்கள் தம்மைபின் பற்றி இறைவழி நடப்பவர்களுக்கு பகிர்ந்தளிதத்தையும் அதுவே தொழுகையில் ஓதப்படும் அத்தஹியாத்து என்பதையும் முன்பு ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்
இறைவனோடு நபிகளின் சந்திப்பின் போதுதான் ஐந்து வேளைத் தொழுகை கட்டாயமாக்கப்பட்டது
மேலும் நபி அவர்களுக்கு சுவர்க்கம் , நரகம் இரண்டும் காட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது
அல் ஹராமில் இருந்து பைத்துல் முகத்தஸ்
பைத்துல் முகதஸில் இருந்து விண்ணுலகம் சென்று திரும்ப அல் ஹசாம் சென்றது எல்லாம் ஒரே இரவில் நிகழ்ந்தது என்று சொல்லப்படுகிறது
முதலில் சொன்னனபடி குர்ஆன்
நபி பெருமான் ஹரமிலிருந்து பைத்குல் முகத்தஸ் வரை சென்றது ( அல் இஸ்ரா) பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது
எனவே மிராஜ் எனும் விண்வெளிப்பயணம் பற்றி வேறு பட்ட கருத்துக்கள் நிறைய முன் வைக்கபடுகின்றன
குறிப்பாக எப்படி விண்வெளிக்கு ஒரு மனிதன் போக முடியும் என்று ஐயம், வினா எழுப்புகிறார்கள்
இறைவனின் படைப்பாகிய மனிதன் நிலவுக்குச் சென்று திரும்பி விட்டான்
அடுத்து செவ்வாய் கோளுக்குச் செல்ல முயற்சி
இறைவனின் அருளால்தான் இவை எல்லாம் நிகழ்கின்றன
வானையும் மண்ணையும் கோள்களையும் ,விண் மீன்களையும் வானத்துக்கும் பூமிக்கும் இடையில் உள்ள அனைத்தையும் படைத்து அவை அனைத்தின் மேலும் ஆட்சி அதிகாரம் கொண்ட இறைவனுக்கு தன் அருள் பெற்ற தூதரை விண்வெளிக்கு அழைத்துச் சென்று திரும்ப வைப்பது செயற்கரிய ஒன்றா என்ன !?
(Source Wikipedia, Towards understanding Quran )
இறைவன் நாடினால், நாளை முத்திரையில் சிந்திப்போம்
23ரபியுல் ஆஹிர்(4) 1444
18112022 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment