தமிழ்
(மொழி)அறிவோம்
01032023
சென்ற தமிழ் பதிவில்
"கொக்கொக்க கூம்பும்"
என்று துவங்கும் குறள் பார்த்தோம்
இதே போல கருத்து வரும் சங்கத் தமிழ் பாடல் ஒன்று இருக்கிறது
பாடல்,
வரிகள் எவை?
விடை
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா மடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு.
தன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து “இவர் அறிவில்லாதவர்” என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கவும் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் கொக்கு பெரிய மீன்வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது வலிமை உடையவரின் அடக்கம் என உணர்ந்துகொள்ள வேண்டும்
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடிய மூதுரை (வாக்குண்டாம்)பாடல்16
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பாடி பீர்
முதல் சரியான விடை
கரம்
தல்லத்
ஹசன் அலி
கணேச சுப்பிரமணியம்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் சிந்திப்போம்
01032023 புதன்
சர்புதீன் பீ