திருமறை குரான்
பிஸ்மில்லாஹ்
10022023
பிஸ்மில்லாஹ்
என்ற சொல் திருமறையில் எத்தனை முறை வருகிறது ?
விடை
114 முறை
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக்
முதல் சரியான விடை
ஹசன் அலி
தல்லத்
ஷர்மதா
ரவி ராஜ் சிறப்புப் பாராட்டு
சரியான விடை அனுப்பியதோடு குரானுக்கும் 19 என்ற எண்ணுக்கும் உள்ள ஒரு கணிதத் தொடர்பை சுட்டிக்காட்டியுள்ளார் ( ஏ-டு 114 /19 மீதம் 0)
இது அவரது ஆர்வம் , தேடுதலுக்கு ஒரு எடுத்துகா ட்டாக விளங்குகிறது
(இந்தக் கணிதத் தொடர்பு பற்றிய ஆராய்ச்சி கருத்து வேறுபாட்டுக்குட்பட்டது )
விளக்கம்
உண்ணுவது , உடுப்பது போன்ற எல்லா செயல்களும் இறைவனின் திருப்பெயராலேயே துவங்கப்பட வேண்டும் என்கிறது இஸ்லாம்
அந்த வகையில் திருமறையில் உள்ள சூராக்கள் எனப்படும்
114 பகு திகளும்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மாநிர்ரஹீம் (அளவற்ற அருளாளனும் நிகற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் )
என்றே துவங்குகின்றன
இதில் விதிவிலக்கு சூரா 9 அத்தவ்பா மட்டுமே
இதற்கு பல வித காரணங்களும் விளக்கங்களும் சொல்லபடுகின்றன
குரான் என்பது முழுக்க முழுக்க இறைவன் படைப்பு .
நபி பெருமான் மூலமாக இறக்கி வைக்கப்பட்டது .
வஹி எனும் இறைசெய்தி இறங்கும்போது நபி பெருமான் ஒரு இறைஞான மயக்க நிலையில் இருப்பார்கள்
அவர்கள் வாய் முனுமுனு ப்பதை அருகில் உள்ள நபித் தோழர்கள் மனனம் செய்து கொள்வதோடு கையில் கிடைத்த
தாள் , துணி, மரப்பட்டை எதிலாவது எழுதிக் கொள்வார்கள்
இப்படி பதிவு செய்யப்பட்ட குரான் தொகுக்கபட்டு எந்த வித மாற்றமும் இன்றி 14 நூற்றாண்டு களாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது
சூராஹ் 9 இறங்கியபோது நபி பெருமான் பிஸ்மில்லா என்று சொல்லவில்லை எனவே அது பதிவு செய்யப்படவில்லை
இறைவன் மட்டுமே அறிவான் காரணத்தை
இறங்கியதை , மாற்ற, திருத்த முடியாது
சூராஹ் அந் நம்ல் (27) இதில் பிஸ்மில்லா துவக்கத்திலும் பின்பு
வசனம் 30 என இரண்டு தடவை வருகிறது
அதனால் மொத்தம் 114 தடவை
(சில நிறுவனங்களுக்குப் பெயர்
பிஸ்மி என்று இருக்கிறது
இது சரியா ? )
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
18 ரஜப்(7) 1444
10022023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment