தமிழ் (மொழி) அறிவோம்
நசை
08022023
தாகம் வேட்கை என பல பொருட்கள் கொண்ட ஒரு
இராண்டில் ஓன்று குறில் மற்றது நெடில்
ஒன்று வல்லினம் மற்றது மெல்லினம்
அந்தச் சொல் எது?
விடை
வள்ளுவன்பாரதி என பலரும் பயன்படுத்திய அந்தச் சொல்
நசை
நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் – குறு 37/1
(உன்மீது) விருப்பம் மிகவும் உடைய தலைவர் (உன்பால்) அன்புசெய்தலும் செய்வார்
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை
(அதிகாரம்:நல்குரவு குறள் எண்:1043)
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால் அவனுடைய பழைமையான குடிப் பண்பையும் புகழையும் ஒருசேரக் கெடுக்கும்.
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,-(நல்லதோர் வீணை செய்தே ------பாரதி )
இந்த நசை எனும் சொல் சங்க இலக்க்யத்தில் நீர் வேட்கை , தாகத்தைக் குறிக்கும் விதமாக
நீர்நசை என்று வருகிறது
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை வேனிற் குன்றத்து வெவ் வரைக் கவாஅன் நிலம் செல, செல்லாக் கயந் தலைக் குழவி===========(நற்றிணை 171)
தலைவன் பொருள் தேடிப்போவது ,அவனோடு போகாது பிர்வுத் துயரில் வாடும் தலைவி இவர்கள் பற்றிய அழகிய பாடல்
( முனைவர் ஆபத்துக்காத்த
பிள்ளையின் கட்டுரையில் இருந்து )
விடை அளிக்க முயற்சித்த சகோ
கிரசன்ட் ஷேக், தல்லத், சிராஜுதீன், ஷர்மதா
அனைவருக்கும் நன்றி
ஆசை, அவா, காமி , என வந்த விடைகள் எதிலும்
குறில் நெடில் , வல்லினம் மெல்லினம் அமையவவில்லை
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௮௦௨௨௦௨௩
08022023புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment