திரு மறை குரான்
16:77(தீர்ப்பு நாள் )
17022023
என்ற பொருள் கொண்ட வசனம் குர்ஆனில் எங்கு வருகிறது ?
விடை
சூராஹ் அந்நஹ்ல் தேனீக்கள்
.
16:77. மேலும், வானங்களிலும், பூமியிலும் உள்ள இரகசியம் இறைவனுக்கே க்கே உரியது; ஆகவே, (இறுதித் தீர்ப்புக்குரிய) வேளையின் நேரம் இமை கொட்டி விழிப்பது போல் அல்லது (அதைவிட) சமீபத்தில் இல்லாமலில்லை;
நிச்சயமாக இறைவன் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷிரீன் பாருக் ---முதல் சரியான விடை
தல்லத்
சிராஜுதீன்
ஷர்மதா
ஷேக் பீர்
சிறப்பு பாராட்டுகுரியவர்
சகோ கணேச சுப்பிரமணியம்
விளக்கம்
தேவை இல்லை என நினைக்கிறேன்
அண்மை துருக்கி நிகழ்வுகள் விடை, விளக்கம் எடுத்துக்காட்டாக விளங்குகின்றன
இருந்தாலும் சுருக்கமாக :
இறை எதிர்ப்பாளர்கள் நபி பெருமானை பலவகையிலும் பகடி செய்து துன்புறுத்துகிறாரகள்
அவர்கள் வழக்கமாக கேட்பது
இறைவனின் அற்புதம் ஒன்றும் ஏன் இறக்கி வைக்கப்படவில்லை
என்பது
இதற்கு இறைவன் பல இடங்களில் விடை சொல்கிறான்
இரவும் பகலும் மாறி மாறி வருவது
மழை நீர் உப்பாக இல்லாமல் இருப்பது
ஒரு மழை பெய்தவுடன் கட்டாந்தரையில் செடிகொடி முளைத்து பசுமையாக மாறுவது
வானம் ஒரே சீராக இருப்பது
இவை போன்ற பலவும் இறைவனின் மாட்சிமையை வெளிக்காட்டுவதாக இருக்கின்றன
சிந்திக்கும் சக்தி உள்ளவர்களுக்கு இவற்றின் அற்புதம் புரியும்
என்கிறான் இறைவன்
இறை மறுப்பாளர்கள் அடுத்துக் கேட்பது
“நீங்கள் சொல்லும் தீர்ப்பு நாள் ஏன் இன்னும் வராமல் இருக்கிறது ?
இதற்கு இறைவநின் விடைதான்
மேலே சொன்ன திருமறை வசனம்
மேலும் பல அதில் ஒரு சில
வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்(67 :16)
. அந்நாளில் பூமியும், மலைகளும் அதிர்ந்து, மலைகள் சிதறி மணல் குவியல்களாகிவிடும்(73:14)
ஆழிப்பேரலை, நிலநடுக்கம் , அழிவு மழை , சூறைக்காற்று போன்ற இயற்கை சீற்றங்கள் எல்லாம் இறைவனின் செயல்தான்
இறை நம்பிக்கை உடையவர்களாய் வாழ்ந்து மறைய – அதற்கும் அவன்தான் அருள் புரிய வேண்டும்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
25 ரஜப் (7) 1444
17022023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment