தமிழ் (மொழி)
அறிவோம்
14022023
விடை பச்சை மண் , சுடாத மண்
குறள் 660
வினைத்தூய்மை
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று
பதவுரை:
சலத்தால்=-வஞ்சனையால்;
; ஏமார்த்தல்-=-மகிழ்தல் என்றும் பாதுகாத்தல் என்றும் பொருள் கொள்வர்;
பசுமண்-=பச்சை மண்; ; ;
; இரீஇ=-இருக்கும்படி செய்து;
விளக்கம்
பச்சைக் களிமண்ணால் பானை செய்து அதை தீயால் சுட்டால் மட்டுமே பயன் படுத்த முடியும்
இல்லையேல் தண்ணீர் பட்டால் பானை கரைந்து விடும்
தீய வழியில் சேர்த்த பொருளை பதுகாப்பது பச்சை மண் பானையில் தண்ணீர் ஊற்றி வைப்பது போலாகும்
பானை கரைந்து தண்ணீரும் வெளியேறிவிடும்
ரீஇ-------
ரீ என்ற நெடில் எழுத்தை இன்னும் சற்று நீளமாகஉச்சரிக்க ரீஇ என்று எழுதுவத் உயிரளபெடை எனப்படும்
(அரபு மொழி எழுத்தில் கடா சபர், கடா சேர் என்ற குறிகள் பயன் படுவது போல )
சலம் என்பது ஜலம் என்ற வடமொழியின் தமிழ் வடிவம் என்பார்கள்
ஆனால் சலம் என்ற தூய தமிழ்ச் சொல்லின் வடமொழி வடிவம்தான் ஜலம் என்பது மொழி அறிஞர்கள் கருத்து
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவிராஜ் முதல் சரியான விடை
மீ மு இஸ்மாயில்
சிராஜுதீன்
செங்கை A ஷண்முகம்
ஆ ரா விஸ்வநாதன்
செல்வகுமார்
பாடி பீர்
கணேச சுப்ரமணியம்
ஷர்மதா
முந்திய பதிவுக்கு சரியான விடை எதுவும் வரவில்லை
இப்போது இத்தனை பேர் அனுப்பியிருப்பது மனதுக்கு உற்சாகம் அளிக்கிறது
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௧௫௦௨௨௦௨௩
15022023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment