Friday, 3 February 2023

அறிவியல் அறிவோம் வேலை இல்லா மூளைகள் ,,

 வேலை இல்லா மூளைகள்

04022023
1986 -87 பஞ்சாப் ஜலந்தர்
வங்கியில் ஆய்வுப்பணிக்காக ஜம்மு போயிருந்தேன்
அங்கு விலை உயர்ந்த கம்பளி ஆடைகள் தயாரிக்கும் தொழிற்சாலை
அப்போதே ரோபோட் என்னும் எந்திர மனிதர்களைகக்கண்டு
வியந்தோம்
கம்பளி ஆடைகlள் எந்திரத்தில் பின்னப்படும்போது கம்பளி இழைகள் அறுந்து விட்டால் ரோபோக்கள்அங்கு நடந்து போய் சரி செய்து விடும்
இந்த ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவின் துவக்க நிலை என நினைக்கிறேன்
Artificial Intelligence ( சுருக்கமாக A I ) எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு (சுருக்கமாக செ நு) இப்போது அடைந்துள்ள அசுர வளர்ச்சி கற்பனைக்கு எட்டாத ஓன்று
தொழில் நுட்ப விளக்கம் நமக்கு இப்போது தேவை இல்லை (புரியவும் செய்யாது )
என்ன பயன், பக்க விளைவுகள் , தீமைகள் என்ன என்பதை சுருக்கமாக எனக்குப் புரிந்த அளவுக்கு விளக்க முயற்சிக்கிறேன்
நமது சிந்திக்கும் திறனை முடிவுக்குக் கொண்டு வருவதே செநு வின் குறிக்கோள் என்கிறார்கள்
நடக்க முடியாத ஓன்று என்று இந்தக் கருத்தை ஒதுக்கி விட முடியாது
இந்தத் தலைமுறையில் யாருக்காவது கணக்கி இல்லாமல் எளிய கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் கணக்குகளைப் போட முடியுமா என்பது ஐயமே
எங்கள் உறவினர் ஜனாப் இனா பெரியத்தா அவர்கள் ரூபாய்அஅணா பைசா கணக்கை அப்படியே கூட்டும் திறமை படைத்தவர் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்
( ஒரு ரூபாய் = 1 6 அணா
ஒரு அணா= 12பைசா
ஒரு ரூபாய்க்கு 16x12= 192 பைசா
இதைக் கேட்டாலே தலை சுற்றும்
முதலில் பைசாக்களைக்கூட்டி அதை 12 ஆல் வகுத்து -----
போதும் போதும் இ னா ப்பெரியத்தா பெரிய மேதை என்று ஏற்றுக் கொள்வோம் )
கால் (1/4) அரை (1/2) அரைக்கால் (1/8) வீசம் (1/16) ---1/32 –
இவை எல்லாம் தேவையற்ற எண்கள் ஆகி விட்டதால் யாருக்கும் தெரியாது
கூகிள் தேடுதல் உள்ளடக்கியிருக்கும் செய்திகளைப் பார்த்து வியந்து என்போன்று பலர் வாய் பிளந்து நிற்கும் நிலையில்
கூகிளுக்கு அப்பன் அப்பனுக்கு அப்பன் என்று சொல்லும் அளவுக்கு ஒரு மென்பொருள் வந்திருககிறது
முதலில் அதன் பெயரை (பெயரையாவது ) தெரிந்து கொள்வோம்
Chat-G.p.t
இது
Chat –Generative Pre trained Transformer.
என்பதன் சுருக்கம்
ரோபோ என்று எளிதாக நினைவில் வைத்துக்கொள்வோம்
இதை யாரும் எளிதில் பதிவு செய்து கொண்டு பயன் படுத்தலாம் .
கட்டணம் எதுவும் இல்லை
பயன் படுத்தத் தெரிய வேண்டும்
(புதிது புதிதாக மாற்றங்களுடன் வரும் தொலைகாட்சி பெட்டி ,
எப்போதும் எல்லோர் கையிலும் விரல் போல்; ஒட்டிக்கொண்டிருக்கும் ஆண்ட்ராயிட் தொலைபேசி
இவற்றையே முழுமையாகப் பயன்படுத்த தெரியாதவர்கள் பலர் )
இந்த ரோபோவின் பயன் என்ன >
மீண்டும் தொழில் நுட்பங்களை ஒதுக்கி விட்டு மிக மிக எளிதான ஒரு எடுத்துக்காட்டு மூலம் (யானையைத் தடவிப் பார்தத்தவன் போல் ) தெளிவு படுத்த முயற்சிக்கிறேன்
பள்ளி மாணவன் – குமரி முனை சுற்றுலா போனது பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும்
கூகிளில் தேடினால் நிறைய செய்திகள் கிடைக்கும் அவற்றைப் படித்து தொகுத்து ஒரு கட்டுரை ஆக்க வேண்டும்
இந்த ரோபோவில் அப்படி இல்லை
தலைப்பையும் தேவையான செய்திகளையும் கொடுத்து விட்டால் அதுவே மாணவனின் தேவைகேற்ப அழகாகக் கட்டுரை எழுதிக் கொடுத்து விடும்
பள்ளி கல்விக்கு மட்டுமல்ல
பட்டப்படிப்பு , முதுநிலை பட்டப்படிப்பு
ஏன் முனைவர் பட்டம் பெற எழுதும் ஆய்வுக்கட்டுரை கூட
அழகாக எழுதிக் கொடுத்து விடும்
ஜீபூம்பா போல உலக மொழிகள் அனைத்தும் அதற்குத் தெரியும்
என்ன வினா தொடுத்தாலும் விடை கொடுக்கும்
சொல் விளயாட்டு , கணிதப்புதிர் என அதோடு விளையாடவும் செய்யலாம்
பல வகையிலும் மனிதனுக்கு உதவியாக இருக்கும் இந்த ரோபோவுக்கு உருவம் கிடையாது
கணினியில் ஒரு மென்பொருளாக இருக்கும்
நாம் கேட்கும் படங்களை , காணொளிக் காட்சிகளை நொடியில் ஒருவாக்கித்தரும்
இப்படி அனைத்தையும் செய்யும் இது ஒரு துவக்கம் தான் என்கிறார்கள்
இந்த மென்பொருள் ரோபோக்களோடு இணைந்து செயல்படும்போது
வீட்டில் சமையல், தோட்ட வேலை பராமரிப்பு, பாதுகாப்பு ,அலுவலக வேலைகள் அனைத்தையும் செய்து விடும்
நுட்பமான அறுவை சிகிட்சை உட்பட மருத்துவ் சேவை, நிதித்துறை ,கல்வி கற்பித்தல் , வாகனங்களை ஓட்டுதல்
எல்லாம் இதுவே செய்து விடும்
இவ்வளவு பணிகளை செய்வதன் பக்க விளைவு ?
ஓன்று சிந்திக்கும் திறன், நினைவுத்திறன் இவை எல்லாம் தேவை அற்றவை ஆகி விடும்
வேலை இல்லாத் திண்டாட்டம் பெருகும்
பல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆயிரம், பத்தாயிரம் என ஆள்குறைப்பு செய்ய காரணம் இந்த மென் பொருள்தான் என்கிறார்கள்
மாற்றம் ஒன்றுதான் மாற்றம் இல்லாதது என்பது போல்
ஒரு கதவு மூடினால் அடுத்த கதவு திறக்கும் என்பதும் மாற்றம் இல்லாத ஓன்று
படித்த உங்களுக்கு ஏதாவது புரிந்தது போல் தெரிகிறதா ?
மென் பொருளின் பெயராவது தெரிந்தால் என் நோக்கம் நிறைவேறி விட்டது
மீண்டும் சொல்கிறேன்
Chat-G.p.t
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சிந்திப்போம்
04022023 சனிக்கிழமை
சர்புதீன் பீ
(தந்தி 03022023 நாளிதழில் வந்த பதிவின் அடிப்படையில் எழுதியது )
May be an image of map

No comments:

Post a Comment