Sunday, 5 February 2023

கடை வீதியில் கருவறைகள் வாடகைத்தாய் (அனுப்பியது சகோ நஜிமா பெரொஸ்)

 கடை வீதியில் கருவறைகள்

06022023
வாடகைத்தாய்
(அனுப்பியது சகோ நஜிமா பெரொஸ்)
என்னுரை
வாடகைத்தாய்
அவ்வப்போது செய்தியில் அடிபடும் சொல்
நாம் அதிகம் அறியாத அந்தத் தாயின் அவலங்கள் துயரங்களை குறிப்பாக் தாய்மை உணர்வை நாம் நன்கு உணரும் வகையில் எழுதியுள்ளார்
அதோடு முதுமையின் துயர நிலையயும் பதிவு செய்கிறார்
சகோ நஜிமா பெரொஸ்
ஆங்கிலம் தமிழ் கலந்து உயிரோட்டமாக வந்த பதிவை எல்லோரும் எளிதில் படிக்கும் விதமாக தமிழ் படுத்தி இருக்கிறேன்
அதே உயிரோட்டம் இருக்கிறதா ?
தெரியவில்லை
வாடகைத் தாய் என்று சொல்லும் போதே தாய்மையின் சிறப்பு சீரழிந்து போகிறது என்பது அவர் கருத்து
தொடர்ந்து சகோ நஜிமா பெரொஸ்
தமிழில். "தொப்புள் கொடி உறவு " "தான் பெற்றால் ஆகுமா தாகம் தெளியுமா " "தவமாய் தவமிருந்து பெற்றது " "அழுதாலும் பிள்ளை அவள் தான் பெறவேண்டும் " இன்னும் எத்தனையோ பழமொழிகள் தாய்மையின் சிறப்பை குறிக்கும்.
இவை எல்லாம் அர்த்தம் அற்றவையா
விஜய் தொலைக்காட்சியில் ஒரு பேச்சுக் காட்சி
தலைப்பு
வாடகைத் தாய்
தான் அனுபவித்த வேதனைக,ள் – உடலாலும் ,மனதாலும் பட்ட வேதனைகள் – பற்றி உணர்ச்சி பொங்க பேசினார் ஒரு வாடகைத்தாய்
பொருளாதாரப் பிரச்சனையால் வாடகைத் தாய் ஆக வேண்டிய சூழ்நிலை
வா தாய்களுக்கு பேறுகாலம் என்பது
சிசேரியன்தான்
இயற்கையான முறைக்கு அனுமதி இல்லை
குழந்தை ஆணாபெண்ணா எப்போது பிறக்கும் என்ற செய்திகள் பெற்ற தாய்க்குத் தெரியாது
தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் எந்த விதமான பாசப் பிணைப்பும் இருக்கக் கூடாது
சுருக்கமாகச் சொன்னால் பணம் பெற்றுக்கொண்டு பிள்ளை பெற்றுத் தரும் ஒரு எந்திரம் அவர்
ஆணா பெண்ணா தெரியாது , இருந்தாலும் முகம் தெரியாத அந்தக் குழந்தைக்காக கோயிலில் பிறந்த நாள் கொண்டாடுகிறார் .அந்தப் பெண்
பெற்ற தாயல்லவா
இதைக் கேட்டதும் காட்சிக்கு வந்த( யாரோ ?) ஒரு பெண் விம்மி விம்மி அழுகிறார்
புனிதமிக்கதாகக் கருதப்படும் திருமணம் , கற்பு, ஒழுக்கநெறிகள் எல்லாமே களங்கப்படுகின்றன அல்லவா ?
இப்படியே போனால் நாகரிகம் சிறிதும் இல்லாத ஒரு தலை முறை உருவாகக்கூடும்
தாய்ப்பால் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து தாய் குழந்தை இருவரையும் பாதிக்கும்
இல்லாத பிரச்சினை குழந்தைக்கு
இருப்பது பிரச்சினை தாய்க்கு இது அவர் உடல் மன நிலையை வெகுவாக பாதிக்கும்
பணம் கொடுத்து தாய்மையை பறித்துக்கொண்டார்கள் வசதி படைத்தவர்கள்
இன்றும் புனிதமாகக் கருதப்படும் திருமணம் நிச்சயிக்கப்படும்போதே தந்தை , தந்தையின் தந்தை அவரின் தந்தை என மூததையாரின் பெயர்கள் அறிவிக்கப் படுகின்றன
கலாச்சாரத்தின் ஆணி வேர் அறுக்கப்படும் வாடகைத் தாய் முறையை எப்படி அனுமதிக்க முடியும் ?
குழந்தைகளின் தெய்வீகத் தன்மை போய் அரக்க குணம் குடி வந்து விட்டது
விளைவு ?
தாலாட்டி சீராட்டி வளர்த்த பெற்றவர்கள் , முதியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்
சிறகு முளைத்த குஞ்சுகள் தாய் கோழியை துரத்தி அடிக்கின்றன
முதியோர் இல்லம் – ஒரு பணம் கொட்டும் தொழிலாகி பரந்து விரிந்து வளர்கிறது
பத்துப் பிள்ளைகள் பெற்ற ஒரு தாய் சொந்த மகள் , மருமக்னாலேயே சக்கர நாற்காலியுடன் வீட்டை விட்டு வெளியே தள்ளப்படுகிறார்
காரணம் மகளின் ஆசை – பொதுக் சொத்தை முடிந்தவரை கை[ப்பற்ற நினைக்கும் பேராசை
வலியில்லை வேலையுமில்லை
காட்சிப் பொருளான என்னைக்
கண்டு கொள்ளவும் எவருமில்லை
மௌனமே எனதுமொழியானது
அந்த மௌனத்தின் ஒலியே எனது இசையாகி
என்னைக் சுற்றிவருகிறது நான் இருக்கும் கூடம் வெறுமையாக இருக்கிறது
கூடத்தின் கூரை கூட எட்டாத தொலைவில்
----கவிதை சகோ மஷூக் ரஹ்மான்
மூத்தோருக்கு உரிய மரியாதை,கௌரவம் உரிமை அனைத்தும் மறுக்கப்படுகின்றன
ஊருக்கும் நாட்டுக்கும் உழைத்து ஓய்ந்த படை வீரர் தம் ஊர் மக்களால் அவமானப்படுத்தப் பட்டு கொல்லப்பட்டஅவலத்தை வேதனையுடன் பதிவு செய்கிறார் கவிஞர் ராபர்ட் பிரௌனிங்
சேக்ஸ்பியர், GK செஸ்டர்டன் இன்னும் கவிஞர்கள் பலரும் மூத்த குடிமக்களின் துயர நிலையை கவிதைப்படுத்துகிரார்கள்
தாயின் பாதங்களில் சுவனத்தைக் கண்டார் நபி பெருமான்
ஆனால் தாயை ஒரு பிள்ளை பெற்றுத் தரும் என்திரமாய் கருதும் அவலம் தொடர்கிறது
நிறைவாக என் சொற்கள் சில
பல்லாண்டுகள் முன்பு எழுத்தாளர் சிவசங்கரியின் கதை ஓன்று
அவன் அவள் அது என்ற பெயரில் திரைபடமாக வந்தது
கதையின் கரு வட்கைதாய் தான்
ஆனாலும் அதில் வெளிசசம் போட்டுக் கண்பிக்கப்பட்டது தாய் சேய் உறவு .உணர்வுகள் பற்றி அல்ல
ஆண், பெண் (வாடகைத்தாய் , உண்மைத்தந்தை இவர்கள்) எப்படி ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு சந்தித்து உறவை வளர்த்துகொள்ள விரும்பி முயற்சிக்கிறார்கள் ,
அதை எப்படி உண்மை தந்தையின் மனைவி தடுக்க முயற்சிக்கிறார் என்பது பற்றித்தான்
தமிழ்ப் படம் அல்லவா !
Profile of Ms,. Nazima Ferrose as sent by her
Name Nazima Ferrese
W/o Shri A FERROSE late) manager in
Canara bank
Work experience
Worked in chennai and madurai as English PGT and TGT
Written 5 books
1 Applied Grammar
2 REVAMP YOUR ENGLISH CREATIVE WRITING
3 MYRIADS OF ENGLISH
4 VOICES and sentence pattern A comparative study
5 What if A BILLION DOLLAR QUESTION IN A UNIQUE GENRE
PUBLISHED in amazon kindle
AGE 68
Blessed with 4
sons
Native madurai
Living in chennai at present
Happy to inform you that 3 of my books are selected for kalaingar karunanithi centenary library at madurai
1 Applied Grammar
2 MYRIADS OF ENGLISH A KALEIDOSCOPIC VIEW
3 What if
A BILLION DOLLAR QUESTION IN A UNIQUE GENR
அறிந்தும் அறியாத ஒரு செய்தியை பதிவு செய்த சகோ. நஜிமாவுக்கு நன்றி
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சிந்திப்போம்
06022023திங்கள்
சர்புதீன் பீ
May be an image of 2 people, child and text

No comments:

Post a Comment