Chat-G.p.t
(Chat –Generative Pre trained Transformer)
11022023
செயற்கை நுண்ணறிவின் தற்போதைய வடிவமான
என்ற மென் பொருள்பற்றி போனவாரம் வேலை இல்லா
மூளைகள் என்ற தலைப்பில்
எழுதியதில் இந்த மென்பொருள் ரோபோக்களுடன் இணைக்கப்படும்போது
மனிதன் செய்யும் பெரும்பாலான வேலைகளை – வீடு பராமரிப்பு முதல் நுண்ணிய வைத்தியங்கள் வரை அதுவே செய்ய வாய்ப்பு உண்டு என்று எழுதியிருந்தேன்
“அவ்வாறு நடக்க இப்போதைக்கு வாய்ப்பேயில்லை “
என்று
முனைவர் கிரசன்ட் ஷேக்
அந்த மென்பொருளை உருவாக்கிய Open AI நிறுவனத்தை மேற்கோள் காட்டி சொல்லியிருந்தார்
அவர் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பேராசிரியர்
ஆனால் இந்தத் செ நு வின் செயல் முறை பயன்பாட்டில் பல ஆண்டுகளாக தீவிர ஆராச்சிப் பணியில் இருக்கும்
முனைவர் சாஜித்
எழுத்திலும் சொல்லிலும் தெரிவித்த கருத்துக்கள் வேறு விதமாக இருக்கின்றன :
அவர் தமிழில் சொன்னதும் ஆங்கிலத்தில் எழுதியதும் சுருக்கமாக என் மொழியில்
“எளிய நடையில் நீங்கள் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை
ஆனல் அது பனிப் பாறையின் நுனிதான்
வரவிருக்கும் உண்மை நிகழ்வுகள் சிந்திக்கவே அச்சமூட்டுவதாக இருக்கின்றன
ஒரு பத்து ஆண்டுகள் முன்பு
“செயற்கை நுண்ணறிவு மனித மூளையின் திறனை மிஞ்சிவிடும் .
அது மனித இனத்துக்கு ஒரு அச்சுறுத்தும் அறைகூவலாக ,
உருவெடுக்கும் “
என்று யாராவது சொன்னல் நான் உட்பட அந்தத் துறையில் இருக்கும் யாரும் நம்பவில்லை
வீணான கற்பனை என்று ஒதுக்கித் தள்ளினோம்
அப்போது பயன்பாட்டில் இருந்தவை ஊமைப் பொறிகள் dumb machines..
ஆனால் இப்போது அரங்கேறி வரும் நிகழ்வுகள் , செ நு வின் வளர்ச்சி வேகம் இதெல்லாம் பார்க்கும்போது , மனித மூளையைத் தாண்டி வெகு தொலைவுக்கு போய் விடும் எனபது தெளிவாகிறது
இதன் விளைவாக தனி மனித வாழ்விலும் சமுதாயவாழ்விலும்
மிகப்பெரிய அளவில் மாற்றங்கள், பாதிப்புகள் ஏற்படும்
மனித முன்னேற்றம் தடைப்படும்
அடுத்த தலைமுறையின் கல்வி, வேலைவாய்ப்பு, வாழும் முறை இதெல்லாம் எப்படி மாறும், எப்படி இருக்கும் என்ற எண்ணம் மனதை வாட்டி வதைக்கிறது
இன்னும் சொல்லப்போனால் வாழ்வாதாரம் அழிந்து அதன் விளைவாக
மனித குலமே அழியும் ஒரு பேராபத்து நெருங்கி வருகிறது
பூமியெங்கும் ரோபோக்கள் ஆட்சி வந்து விடும்
கருத்துத் தெரிவித்த முனைவர்கள் ஷேக் , சாஜித் இருவருக்கும் நன்றி
ஒரு சகோ தனக்கு chat gpt பதிவு தனக்கு சரியாக வரவில்லை என்று சொல்லியிருந்தார்
தெரிந்தவர்கள் அவருக்குவழி காட்டலாம்
நிறைவாக
கூகில் இல்லையேல் வாழ்க்கை இல்லை என்ற நிலை தலை கீழாக மாறி கூகிள் நிலைத்து இருக்கமா என்ற நிலை உருவாகி ஒரே நாளில் கூகிளின் இழப்பு 100 பில்லியன் டாலர் என்கிறார்கள்
நிலைமையை சமாளித்து மீண்டு வரும் முயற்சியில் கூகிள் துரித கதியில் செய்லபட்டு google-bard-chatgpt-
எனும் போட்டி மென்பொருளை வெளியிட்டதாக செய்தி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
இ(க)டைச்செருகல்
“ நாம் நினைத்தால் மனித இனத்துக்குப் பதிலாக முற்றிலும் மாறுபட்ட வடிவில் வேறு இனத்தைப் படைப்போம் “
இந்தக் கருத்துள்ள இறைமொழி திருமறையில் ஓரிரு இடங்களில் வருகிறது
இதைப்படிக்கும்போது
“இறுதி நபி என்று முத்திரை இடப்பட்ட நபி ஸல் அவர்களுக்குப் பின்நபியே இல்லாத ஒரு சமூகம் உண்டாகுமா , அது எப்படி?”
என்ற எண்ணம்வரும்
அதற்கு விடை இப்போது கிடைத்தது போல் இருக்கிறது
எல்லாப்புகழும் அவனுக்கே
மனித மூளைக்கு வேலை இல்லாத ஒரு நிலை வருமுன்
மூளைக்கு வேலை
மிக மிக எளிய கணிதப்புதிர்
50 ரூபாயக்கு 4 தேங்காய் வாங்கி 50 ரூபாய்க்கு 3 விற்றால்
லாபம் எத்தனை சதவீதம் ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
11022023 சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment