திருமறை குரான்
(வஸத்தன் )
03022023
இதில் வரும் வஸத்தன் وَسَطًۭا
என்ற சொல்லுக்கு இந்த சூராவின் அமைப்பில் (Structure) ஒரு சிறப்பு இருக்கிறது
அது என்ன ?
விடை , விளக்கம்
சூராஹ் 2 அல் பக்ரா-----
கிப்லா எனும் தொழுகை திசை மாற்றம் பற்றிய செய்தி , மிக அதிகமாக ஓதப்படும் ஆயத்துல் குர்ஸி என எண்ணற்ற சிறப்புகள் கொண்டது
சிறப்புக்கு சிறப்பு சேர்க்கிறது இந்த சூராவின் வடிவமைப்பு (structure)
முதல் வசனமும் .நிறைவு வசனமாகிய 286 உம் ஒரே கருத்தை சொல்கின்றன
அதே போல் 2 – 285 3-284 4- 283 என இந்த வரிசை தொடர்கிறது
இதற்கு மோதிர வடிவமைப்பு (Ring Structure)என்று பெயர்
286 வசனங்களுடன் குரானின் மிகப்பெரிய இந்த சூரா பல ஆண்டுகள் , பல இடங்களில் அருளப்பட்டது
.சொல்லப்படும் செய்திகள் மிகப்பல
இப்படி ஒரு பெரிய சூராவை அழகாக மோதிர வடிவில் அமைப்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது
குரான் முழுக்க முழுக்க இறைவனின் படைப்பு என்பதற்கு இது ஒரு சான்று
மேலும் சூராவை இர்னடாகப்பிரிக்கும் வசனம் 143 கிப்லா எனும் தொழுகும் திசை மாற்றம் பற்றிக் குறிப்பிடுகிறது
இந்த நடு வசனத்தில் நடு எனும் பொருள் தரும் வஸத்தன் எனும் சொல் வருவது இன்னுமொரு சிறப்பு
குர்ஆனில் காணப்படும் இதுபோன்ற பல வடிவமைப்பு சிறப்புகள் பற்றி
Dr. Raymond Farrin, -Arabic professor at the American University of Kuwait. Structure and Qur'anic Interpretation [
என்ற நூல் எழுதியிருக்கிறார்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
பீர் ராஜா - முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஷிரீன் பாருக்
ஹசன் அலி
முயற்சித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
வஸத்தன் என்ற சொல்லுக்கும் வசனம் 143க்கும் மிக விரிவாக விளக்கம் எழுதலாம்
இறைவன் நாடினால் அடுத்த பதிவில் சிந்திப்போம்
1444 ரஜப் (7)11
03022023வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment