Thursday, 23 February 2023

திருமறை குரான் 23:11 (அல் மூமிநுண் ) ஏக இறை நம்பிக்கையாளர்கள்

 திருமறை குரான் 23:11

ஏக இறை நம்பிக்கையாளர்கள்

2402023
“ ஏக இறை வணக்கத்தில் அவர்கள் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்”
என்ற பொருள் கொண்ட வசனம் திருமறையில் எங்கு வருகிறது ?
விடை
சூராஹ் 23 அல் மூமினூன் வசனம் 2
23:2. அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்.
விளக்கம்
மூமினூன் என்ற சொல்லுக்கு ஏக இறை நம்பிக்கையாளார்கள்
என்று பொருள்
அவர்கள் என்பது இங்கு அந்த இறை நம்பிக்கையாளர்கள்களைக் குறிக்கிறது
ஏக இறை நம்பிக்க்கையாளர்கள வெற்றி பெற்று விட்டர்கள் என்று முதல் வசனத்தில் துவங்கி இந்த சூராவில் பல இடங்களில் இவர்கள் பற்றி இறைவன் சொல்கிறான்
வசனம் 2 முதல் 9 வரை அவர்கள் பண்பு நலன்கள் பற்றிக் குறிப்பிடுகிறான்
சுருக்கமாகப் பார்ப்போம்
வசனம் 2 மேலே பார்த்தோம்
வீண் பேச்சு ,செயல்களை விட்டு விலகியிருப்பார்கள் (3)
ஜக்காத் எனும் தர்மம் தவறாமல் கொடுப்பார்கள் (4)
மறைக்க வேண்டிய உடல் உறுப்புகளை முறையாக மறைப்பார்கள் (5)
திருமண உறவொழுக்கத்தை முறையாகப் பேணுவார்கள் (6)
அதில் வரம்பு மீறமாட்டார்கள் (7)
தங்கள் (இடம் ஒப்படைக்கப்பட்ட) அமானிதப் பொருட்களையும், தங்கள் வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்(.8
தொழுகைகளை முறையாக குறித்த நேரத்தில் நிறைவ்ற்றுவார்கள் (9)
இப்படி ஒரு ஒழுக்க நெறி வாழ்க்கைக்கு பரிசாக
இறைவன் அவர்களைஉயர்ந்த சுவர்க்கத்தில் நுழைத்து அங்கு என்றென்றும் அவர்கள் வாழும்படி செய்வான்(10,11)
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் – முதல் சரியான விடை
ஷர்மதா
ஹசனலி
சிறப்பு பாராட்டு
சகோ கணேச சுப்பிரமணியத்துக்கு
இணையத்தில் இஸ்லாம் பற்றி நிறைய படிக்கிறார்
புகழனைத்தும் இறைவனுக்கே
வேறு விடை அனுப்பிய சகோ பீர்ராஜாவுக்கு நன்றி
புனித ரமலான் மாதம் நெருங்கிக் கொண்டிருக்கிறது
நம் இறை நம்பிக் கையை உறுதிப் படுத்தி நம்பிக்கையாளர்களாக வாழ்ந்து இம்மை வாழ்வு, மறுமை வாழ்வு இரண்டிலும் வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் +
Paஇறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
03ஷாபான் (8)1444
24022023 வெள்ளி
சர்புதீன் பீ
May be an image of text

No comments:

Post a Comment