தொடரும் இலவசம்
1802023
நீ இல்லையேல் நான் இல்லை எனும் அளவுக்கு நம் வாழ்வில் ஒன்றி விட்ட கூகிளைத் தூக்கி அடிக்கும்
மிக நவீன தொழில் நுட்பத்தில் இயங்கும் chat gpt செயற்கை நுண்ணறிவு மென்பொருள் பற்றி சென்ற சில பகுதிகளில் பார்த்தோம்
அந்த chat gpt யின் தொழில் பட்பமெல்லாம் இதன் கால் தூசுக்கு ஈடாகாது எனும் ஒரு சிறப்பு பொறி ---வன்பொருள் மென்பொருள் எல்லாம் இணைந்த ஓன்று பற்றி இப்போது பார்ப்போம்
இதுவும் முற்றிலும் இலவசம் அதி நவீன இணைப்புகளும் இலவசம்
பெரும்பாலோருக்கு புரிந்திருக்கும் அது என்ன என்பது
ஆம்
நம் உடல் பற்றித்தான் சொல்கிறேன்
இதற்கு நிகரான ஒரு எந்திரம் இதுவரை உருவாகவில்லை
என்ன என்ன உறுப்புகள், செல்கள் மண்டலங்கள் என்று சொன்னால்அது பள்ளிக்கூட அறிவியல் வகுப்பாகி விடும்
எனவே சொல்ல வெண்டியதை சுருக்கமாக, எளிய மொழியில் இறைவன் அருளால் சொல்ல முயற்சிக்கிறேன்
கை, கால், தலை கண், காது ,மூக்கு இவை எல்லாம் வெளியே தெரிவபை
இவற்றை Front Office எனப்படும் முன் அலுவலகத்துக்கு ஒப்பிடலாம்
அக உறுப்புகள் (Back office)
பலவும் ஓரளவு எல்லோருக்கும் தெரியும்
குறிப்பாக வைத்திய செலவு உண்டாக்கும் இதயம், சிறுநீரகம் போன்றவை நன்கு தெரிந்தவை
அண்மைகாலமாக எதில் நோய் வருவது என்ற வரை முறை இல்லாமல் பல் உறுப்புகள் நோய்க்கு ஆளாகின்றன
ஒரு சில நோய்களுக்கு அந்த உறுப்பை நீக்கி விடுவதே தீர்வாக அமைகிறது
தொழில் முறையாக பல ஆண்டுகளாக பெரும் பொருட்செலவில் படித்த மருத்துவர்கள் எடுக்கும் முடிவு பற்றி நான் கருத்துத் தெரிவிப்பது முறையாகாது
நான்படித்த பஞ்ச கர்மா முது நிலைப் பட்டயம் , யோகா,, வர்மா , நினைவுத் திறன் மேம்பாடு என்ற மூன்று முது நிலைப்பட்டபடிப்பு இவை எல்லாவற்றிலும் human physiology , anatomy psychology பற்றி பாடம் வரும்
என் படிப்புத் தகுதியைப்பற்றி வெளிச்சம் போட்டுக்காட்ட இதை சொல்லவில்லை
இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற முக நூல் குழுவில் சில மாதங்களாக தொடர்ந்து எழுதி வருகிறேன்
அதில் ஒரு சகோ நீங்கள் என்ன இஸ்லாமிய அறிஞரா என்று ஐயம் தெரிவித்தார் , அவருக்கு விடைசொல்வது தேவை இல்லை என விட்டு விட்டேன்
இது போன்ற ஐயங்களைத் தவிர்க்கவே சொல்கிறேன்
விலைக்கு மேலே விலை வைத்தாலும்
மனிதன் விலை என்ன ?
கணக்குப் பார்க்கவே முடியாது
பல் மருத்துவரிடம் போனால் பத்தாயிரங்கள் செலவு
மூட்டு மாற்றப் போனால் சில லட்சங்கள்
இதய நோய் என்றால் லட்சங்களில் இட்லிவடை தோசை பொங்கல் கேசரி காம்போ ஆபர்
மருந்தே இல்லை என்று சொல்லப் பட்ட கரோனாவுக்காக சொத்தை விற்றவர்கள் பலர்
எத்தனை கோடி கொடுத்தாலும் வாங்க முடியாத உடலை இறைவன் எல்லோருக்கும் இலவசமாகக் கொடுத்திருக்கிறான்
அந்த உடம்பை மையமாக வைத்து கோடானு கோடி மதிப்பில் உலகளாவிய வணிகம்
சொல்ல வந்ததை விட்டு வேறு எதோ சொல்லிக் கொண்டிருக்கிறேன்
சில உறுப்புகள் பற்றி பார்ப்போம்
“உண்மையும் நேர்மையும் இணைந்த ஒரு அதிகாரி “
என்று சீன வைத்திய முறையில் போற்றப்படும் உறுப்பு எது ?
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் அடுத்த பதிவில் சிந்திப்போம்
இக)டைச் செருகல்
பலமுறை சொன்னன ஒரு சிறிய கதை
பொறுக்க முடியாத தலைவலியால் பல்லாண்டுகள் அவதிப்பட்ட ஒரு இளைஞர் பெரிய மருத்துவமனைக்குப்
போகிறார்
பலமணி நேரம் நீண்ட பரிசோதனை செய்தபின் மருத்துவர் சொல்கிரார்
உங்கள் தலைவலியைப் போக்கிவிடலாம் ஆனால் “ என்று தயங்கியபடி தொடர்கிறார்
“உங்கள் விதைப்பைகளை நீக்க வேண்டி வரும் “
அதிர்ச்சி அடைந்த அந்த இளைஞர்
“வேறு வழி இல்லையா “ என்று கேட்க
“ இல்லை , உங்கள் விதைப்பைகள் மூளைக்குச் செல்லும் ஒரு நரம்பின் மேல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன அந்த அழுத்தம்தான் தலைவலிக்கு காரணம்
எனவே விதைப்பைகளை நீக்கினால்தான் வழி போகும் “ என்கிறார்
சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி பல லட்சங்கள் செலவளித்து வெளியே வந்த இளைஙருக்கு உணர்வுகளின் கலவை
பல ஆண்டுகளுக்குப்பின் தலைவலியிலிருந்து விடுதலை
அதை முழுமையாக உணர முடியாமல் உறுப்பை இழந்த உணர்வின் மன வலி
துணிக்கடை ஒன்றில் நுழைந்து பல சட்டைகள் எடுத்துஅளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்கிறார்
அங்கே வந்த கடைக்காரர் நீங்கள் தேடவே வேண்டாம்
40 அளவு உங்களுக்கு சரியாக இருக்கும் என்கிறார் .அதே போல 40 கசிதமாகப் பொருந்துகிறது இளைஞருக்கு .
தொடரந்து கால் சராய், மேல்கோட்டு எல்லாம் கடைக்காரர் சொன்னது பொருத்தமாக அமைந்து விட எப்படி இது என்று இளைஞர் வியப்படைய 30 ஆண்டு அனுபவம் என்கிறார் கடைக்காரர்
அடுத்து உள்ளாடைகள்
42 சரியான அளவு என்று கடைக்காரர் சொல்ல இல்லை 38 தான் என் அளவு என்று ஒருவித மகிழ்ச்சியோடு சொல்கிறார் இளைஞர்.
கடைக்காரர் “ மூன்ற நான்கு ஆண்டுகள் முன்பு அது சரியாக இருந்திருக்கலாம்
இப்போது நீங்கள் அதையே தொடர்ந்தால் அது உங்கள் நரம்பை அழுத்தும் அதனால் உங்களுக்கு தலைவலி உண்டாகலாம் “
“Always go for a second opinion “
1802223சனிக்கிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment