சிறைச் சாலை வாழ்வை விரும்பி ஏற்ற நபி யார் ? விரும்பியது ஏன் ?
விடை
நபியின் பெயர் யூசுப் (அலை )
நபியின் அழகில் மயங்கி அவரை அடைய நினைத்த அந்த ஊரின் தலைவனின் துணைவி, அவரைச் சேர்ந்த உயர்குலப் பெண்களிடமிருந்து தப்பிக்கவே சிறைச்சாலை வாழ்வை தரும்படி இறைவனிடம் வேண்டுகிறார் நபி
"என் இறைவனே! இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறார்களோ, அ(த்தீய)தை விடச் சிறைக்கூடமே எனக்கு அதிக விருப்பமுடையதாகும்; இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகிவிடுவேன்" என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.( குரான் 12:33)
அழகின் ஈர்ப்பு என்ற தலைப்பில் யூசுப் (அலை ) அவர்கள் வரலாற்றை நான் ஏற்கனவே பதிவு செய்திருகிறேன் .எனவே மீண்டும் விவரிக்கவிலை
சரியான விடை எழுதி வாழ்த்தும் பாராட்டும் பெறும் அன்பர்கள்
சகோ சாகுல் ,மெகராஜ் , அசன் அலி , முனை. பாஷா ,ஞாழல் மலர்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
05032021fri
Sherfuddin P
No comments:
Post a Comment