ஒரு ஊரின் பெயர் திருமறையின் ஒரு சூராவின் பெயரக இருக்கிறது .அது எது ?
விடை
90- அல்பலாத் ,30.அர் ரும்
இவை எனக்கு வந்த விடைகள்
ரும்- ஒரு ரோம சமுதாயதைக்குறிக்கும் சொல் . ஊரின் பெயர் இல்லை
அல் பலாத் – நகரம் என்று பொருள் . மக்கமா நகரைக் குறிக்கும் சொல்லாக வருகிறது . அல் – பலாத் என்று ஒரு நகரம் ஜித்தாஹ் வுக்கு அருகில்இருக்கிறது . ஆனால் அந்த நகரைக் குறித்து சூராவில் வரவில்லை
– 16- அன் நஹ்ல் என்று ஒரு வேடிக்கையான விடையும் வந்தது – தேனீ – ஒரு ஊரின் பெயர் – மாற்றிய சிந்தனை சிலேடை
என் தெரிவு
15 அல்ஹிஜ்ர்-
ஸமூத் (Thamud) சமூகத்தினரின் தலை நகராக இருந்தது .அழிந்துபோன அந்த நகரின் சின்னங்கள் இன்றும் மதினாவில் இருந்து தபுக் செல்லும் வழியில் அல் உலா என்ற நகருக்கு அருகில் காணப்படுகின்றன அல்ஹிஜ்ர் சமவெளியில் வணிகக் கூட்டங்கள் தங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தார்கள்
( Source - Quran 15:80 Towards understanding Quran- EN 45 )
சகோ ஹைருல் அன்வர், ஹசனலி , மெஹராஜ் மற்றும் விடை காண முயற்சித்த அனைவருக்கும் நன்றி,
வாழ்த்துகள்
பாராட்டுகள் இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
26032021fri
Sherfuddin P
No comments:
Post a Comment