காலைக் கதிர்
நீயும் நானும்
மிக எளிமையான , மிக மிக
அருமையான
, மிக மிக மிக அரிதான சில பலரை நேற்று நீயா நானாவில் சந்தித்ததில் ஒரு மகிழ்ச்சி மன நிறைவு வானத்தை வில்லாக வளைக்கவில்லை ,மணலைக் கயிறாகத் திரிக்கவில்லை . அதைச்செய்வோம் , இதை ஒழிப்போம் என அறைகூவல் விடுக்கவிலை
“என்கடன் பணி செய்து கிடப்பதே “ என்று தன்னை மறந்து மக்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்
அப்படி என்னதான் செய்கிறார்கள் ?
வெறும் பத்து ரூபாய் கட்டணத்தில் வைத்தியம் பார்க்கும் படித்துப் பட்டம் பெற்ற ஆங்கில மருத்துவர்
எழுபது எண்பது ரூபாய் வரை விற்கும் உணவு வகைகள் ஐந்தே ரூபாய்க்கு விற்கும் மூப்பு நிலையில் இருக்கும் கணவன் மனைவி
இரண்டு ரூபாய்க்கு புரோட்டா
மிகக் குறைந்த கட்டணம் கேட்கும் இருபது வயது தானி ஓட்டுனர்
தரமான பசுமதி அரிசி, ,அக்மார்க் எண்ணெய் பயன் படுத்தி சமைத்த பிரியாணி – ஐம்பது ரூபாய்க்கு எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் என உபசரிக்கும் உணவு விடுதி
எதை எதிர்பார்த்து இதெல்லாம் செய்கிறார்கள் ? எதையுமே இல்லை .
போதும் என்ற மனப்பாங்குடன் மிகப் பெரிய செல்வத்தால் கிடைக்கத மன நிறைவுடன் வாழ்கிறார்கள்
“இவர்கள் எல்லாம் ஏமாளிகள் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளாதவர்கள் ,இவர்களுக்கு நிம்மதியே இருக்காது “ என சாடினார்கள் எதிர் அணியினர் ..இன்னும் ஒரு படி மேலே போய் “இதெல்லாம் முடியாது இவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் , ஏமாற்றுகிறார்கள் “ என்னும் அளவுக்கு குற்றம் சொன்னார்கள் சிலர்
ஒவ்வொன்றிற்கும் மிகப் பொறுமையாக, அழகாக விளக்கமான மறுமொழி சொல்லப்பட்டது .
இருபது வயது தானி ஓட்டுனர் பழுத்த அனுபவசாலி போல எளிமையான விளக்கம் அளித்தார்
.பிரியாணிக்காரர் நான் பயன்படுத்தும் பொருட்களின் தரம் பற்றி ஐயம் இருந்தால் வந்து பரிசோதித்துப் பார்க்கலாம் என்றார்
அந்த முதிய இணையை பாராட்ட சொற்களே இல்லை
சிறப்பு விருந்தினராக வந்த கவிஞர் (தேவ தேவன் என நினைக்கிறேன் ) மிக அழகாகச்சொன்னார் .:--“ இவர்கள் எல்லாம் மிகப்பெரிய ஞானிகள் ;பல்லாண்டுகள் தவம் செய்யாமல் , தியானம் செய்யாமல் கைவல்யம் என மிக உயர்ந்த நிலை மெய் ஞானம் அருளப்பெற்றவர்கள்.
குறிப்பாக நான் , எனது என்பதைத் துறந்து மறந்தவர்கள் .
நாம் எல்லோருமே அந்த நிலைக்கு அவ்வப்போது போவோம். ஆனால் உடனே அதை விட்டு வெளியே வந்து விடுவோம் .இவர்கள் அந்த நிலையிலிருந்து வெளியேறாமல் நிலைத்து நிற்பதுதான் சிறப்பு “
ஒரு நல்ல நிகழ்ச்சியை தொலைக்கட்சியில் , அதுவும் விஜய்யில் பார்த்த நிறைவு எனக்கு
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
22032021mon
Sherfuddin P
No comments:
Post a Comment