“மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்”
ஒரு விடுகதையின் ஈற்றடி இது
.. இதன் பொருள் என்ன ?
விடுகதையும் விடையும் இறைவன் நாடினால் நாளை
விடுகதை
ஒருமரம் ஏறி
ஒரு மரம் பூசி
ஒரு மரம் பிடித்து
ஒரு மரம் வீசிப்
போகிறவன் பெண்ணே
உன் வீடு எங்கே?
பாலுக்கும் பானைக்கும் நடுவிலே
ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே
நான் எப்போது வரட்டும்?
இந்த ராஜா செத்து
அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு
மரத்தோடு மரம் சேர்ந்த பிறகு வந்து சேர்
காதலி தெருவில் தன் தந்தையுடன் தெருவில் நடக்க யாரும் அறியாமல் அவள் வீடு இருக்கும் இடம், சந்திக்கும் நேரத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்கிறான்
ஒரு மரம் ஏறி-மரத்தாலான பாதக் குறட்டில் (செருப்பில்) ஏறி
ஒரு மரம் பூசி-சந்தன மரத்தை இழைத்து சந்தனத்தை மேலே பூசி
ஒரு மரம் பிடித்து-(வயதானவராகையால்) மர ஊன்று கோலைப்
பிடித்து
ஒரு மரம் வீசி-பனைமரத்தின் மட்டையாலான விசிறியை (கையில் பிடித்து)
வீசிக்கொண்டு போகிறவனின் பெண்ணே உன் வீடு எங்கே உள்ளது?
என்று அவன் கேட்கிறான். அவள் புரிந்து கொண்டு ‘பால் விற்கும் இடையர் வீட்டிற்கும் பானை செய்யும் குயவர் வீட்டிற்கும் நடுவில், ஊசி செய்யும் கொல்லன் வீட்டிற்கும் நூலைப் பாவோடும் சேணியன் (துணி நெய்பவர்) வீட்டிற்கும் அருகில்’ என்று கூறுகிறாள். அவன் மகிழ்ச்சியுடன் ‘சந்திப்பதற்கு எப்போது வரலாம்’ என்று கேட்டான். அதற்கு அவள் ‘சூரியன் மறைந்து (இந்த ராஜா செத்து) சந்திரன் உதயமான பிறகு (அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு), வீட்டிலுள்ளவர்கள் கதவைச் சாத்தும் போது கதவும் நிலையும் சேர்ந்து விடும், அந்தச் சமயத்தில் வந்து சேர்’ என்று கூறுகிறாள்.
சரியான விடை அனுப்பி வாழ்த்தும் பாராட்டும் பெறுபவர்கள் சகோ சிராஜுதீன் , கணேசன் சுபிரமணியன்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
17032021wed
Sherfuddin P
.
"
73:7
No comments:
Post a Comment