“நிச்சயமாக நான் என் அடியார்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறேன்.
அவர்கள் பிரார்த்தனைக்கு உடனே செவி சாய்த்து நான் விடை அளிக்கிறேன் “
என இறைவன் கூறும் இந்த வசனம்
திருமறையில் எங்கு வருகிறது ?
விடை
திருமறை வசனம் 2:186
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்;
"நிச்சயமாக
நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால்
விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை
நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
விளக்கம் :
“இறைவனை நேரில் யாரும் பார்க்க முடியாது .வேறு எந்தப;புலனாலும்அவனை
உணர முடியாது அதனால் அவன் எங்கோ வெகு
தொலைவில் இருக்கிறான் என்று நினைக்க வேண்டாம் ..அவன் அனைவருக்கும் மிக அருகிலேயே
இருக்கிறான் .கோரிக்கைகளை நிறைவேற்றுகிறான் அவனை அடியார்கள் மிக எளிதாக ,இடையில்
எவர் உதவியும் இல்லாமல் தொடர்பு கொள்ளலாம் “
சரியான விடை எழுதி வாழ்த்தும் பாராட்டும் பெறுபவர்கள்
சகோ சிராசுதீன் , அசனலி, மெஹராஜ் ,,,,,
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
19032021fri
Sherfuddin P
No comments:
Post a Comment