3 m
Shared with Public
தமிழ் மொழி
முள்ளும் மலரும்
– ஒரு இனிய படத்தின் பெயர் .இதற்கு.முள் & மலர் என்றும் முள் கூட பூப்போல் மலரும் என்றும் இரு பொருள் சொல்லலாம். இதே போல்தான் நிலவும் மலரும் , , கல்லும் கனியும் .என்ற சொற்றொடர்கள்
இப்படி ஒரு சொல் அல்லது சொற்றொடர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள் தருவது போல் அமைந்தால் அதை சிலேடை என்கிறோம்
சிலேடை பற்றி முன்பு ஒருமுறை என்ன(ண்ண) வேணும் என்ற தலைப்பில் வடிவேலு நகைச்சவையில் துவங்கி , காளமேகம் , கி வா ஜ இன்னும் பலரின் சிலேடை பற்றி எழுதியிருக்கிறேன் .
. மிகப்பரவலாய் அறியப்பட்ட சிலேடைகள் -
–பாரதி சின்னப்பயல், , குடத்தில் கங்கை அடங்கும்,,துணியும் கசக்கவிலை போன்றவை
மேலும் சில சிலேடைகள் பற்றிப் பார்ப்போம்
இரட்டைப் புலவர்கள் என்று அறியப்பட்ட இணையில் ஒருவருக்கு கண் பார்வை கிடையாது .மற்றவர் முடவர். . முடவர் வழிகாட்ட மற்றவர் அவரைச் சுமந்து செல்ல – இப்படிப்பல இடங்களுக்குச் சென்று தம் புலமையை வெளிக் காண்பித்தனர்
ஒரு குளத்தின் படித்துறையில் அமர்ந்து கண்ணில்லாதவர் துணியைத் துவைக்கும்போது துணி கைநழுவித் தண்ணீரில் போனது .தெரியாமல் குருடர் கைகளை நீரில் தடவித் தடவிப் பார்க்கவும். அப்போது கரையில் இருந்த முடவருக்கும் கண்ணில்லாதவருக்கும் நடந்த கவிதை உரையாடல்
,
முடவர் :
'அப்பிலே தோய்த்தெடுத்தடுத்துநாமதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ'
மற்றவர் :
'-அப்படியே
ஆனாலுங்கந்தை,அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'
முடவர் விடாமல்,
'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார்குளிரையுடன் தாங்காதோ?'
என்று கொக்கி போட்டார்.
மற்றவர்
'-எண்ணாதீர்
இக்கலிங்கம் போனாலென் ஏகலிங்கமாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டேதுணை!'” என்று பாடினர்
அந்த ஆடை சிறிது நேரத்தில் தானாகவே காற்றில் திரும்பவும் அவர் கைக்கு வந்தது.
அப்பு – தண்ணீர் -; கலிங்கம் – துணி மற்ற சொற்களுக்குப் பெருள் எளிதாக விளங்கும்
இன்னும் ஒன்றே ஓன்று :
மன்னர் ஒருரைப்பார்க்க இரட்டையர் போயிருந்தபோது மன்னர் கண் தெரியாதவரைப் பார்க்கக் கூடாது என்று ஒரு திரைக்குப்பினால் அமர்ந்திருந்தார்
இதைப்பார்த்த முடவர் – “ சிவ சிதம்பரம் “ என்றார் –(சிதம்பரம் கோவிலில் திரை போட்டு மறைத்திருக்கும் .புரிந்து கொண்ட மற்றவர் “ அண்ணாமலை “ என்றார் உடனே திரை தீப்பற்றி எரிந்தது- அண்ணாமலை – தீ வடிவம்
நிறைவு செய்யுமுன் ஒரு மிக எளிய வினா
இல்லத்தரசி ஒருவர் சமையல் நூலைப் பார்தது பாயாசம் செய்து கொண்டிருந்தார் , திடீரென்று “பாயாசம், பாயசம் ,பாயாசம் “ என்று உரத்த் குரலில் கூவினார்
ஏன்?
இ(க)டைச செருகல் :
என்னுடைய முந்தைய இரு தமிழ் பதிவுகள் மிகவும் கடினமாக இருந்ததாய் கருத்துக்கள் வந்தான. அப்படிக் கடினமாக எழுதும் அளவுக்கு எனக்குத் தமிழ்ப் புலமை கிடயாது ,இருந்தாலும் கருத்துக்களை ஏற்று இந்தப்பதிவை மிக எளிதாக ஆக்கியிருக்கிறேன். அப்படி சிந்தித்து எழுதும்போது எண்ண ஓட்டம் , எழுத்தோட்டம் சற்றுத் தடைப்படுவது போல் எனக்குத் தோன்றுகிறது. ..போகப்போகச் சரியாகிவிடும்
விடை
சற்று வேடிக்கையான சிலேடை இது
உரத்த குரலில் பாயசம் பாயசம் பாயசம் என்று துணைவி கூவுவது கேட்டுத் திடுக்குற்ற துணைவன் என்ன ஆச்சு , ஏன் இந்தக் கூவல் என்கிறான் . அதற்கு துணைவி பாயசத்தை அடுப்பில் இருந்து இறக்கு முன் “ ஏலம் போடவும் : என்று சமையல் நூலில் போட்டிருக்கிறது அதனால்தான் ஏலம் போடுவது போல் கூவினேன் என்றார்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
No comments:
Post a Comment