Tuesday, 30 March 2021

தமிழ் - திரைபடல்களில் இலக்கிய நயம்

 தமிழ் மொழி –

பதித்த நல் வைரங்கள் திரைபாடல்களில் இலக்கிய நயம்
அழகு – அழகுணர்ச்சி இல்லாவிட்டால் கவிதை ஏது காவியம் ஏது!
சொல்லழகு பொருள் அழகு சொல்லும் நடையழகு என பல அழகுகள் இணைந்தால்தான் கவிதை
குறிப்பாக பெண்களின் அழகை வர்ணிப்பது என்றால் கற்பனை கொடி கட்டிப்பறக்கும் .அழகு மட்டும் அல்ல
காதல் வீரம், அன்பு பாசம் பிரிவு என எதிலும் மிக அழகான வர்ணனைகள் /
சங்க இலக்கியம் , காவியம் என்று நுழைந்தால் பெருங்கடல் அளவுக்கு இலக்கிய நயம் கிடைக்கும் .
இதற்காக அவ்வளவு தொலைவு போக வேண்டாம் . திரைப்பாடல்கள் , இன்னும் பாரதி தாசன் வரை போனாலே போதும் .வேண்டிய அளவுக்கு இலக்கியச் செறிவு மண்டிக் கிடக்கும்
எனக்கு இலக்கணம் அதிகம் தெரியாது . அணியிலக்கணம் , தேமா புளிமா என்று எதேதோ படித்த நினவு . அதெல்லாம் புரியவும் புரியாது
ஆனால் இலக்கியத்தை , இலக்கிய நயத்தை ரசித்து ருசிக்கத் தெரியும்
அப்படியே உள்ளே போவோம்
ஒரு மிகப் பழைய பாடல்
“நிலவின் நிழலோ உன் வதனம்
புது நிலைக்கண்ணாடியோ மின்னும் கன்னம் “
மேலும்
“மலையில் பிறவா மாமணியே நான்
கொய்யும் கொய்யாக்கனியே “
என சிலம்பை நினைவூட்டும் வரிகள்
“ வட்டக்கரு விழி மங்கையே
ஒளி கொட்டும் நிலவுக்குத் தங்கையே “
“வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?”
என்ற பாரதி வரிகள் போல்
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு பாடல்
“வெள்ளி கம்பிகளை போலே...... ஒரு தூறல் போடுதோ.....
விண்ணும் மண்ணில் வந்து சேர.... அது பாலம் போடுதோ....
நீர்த்துளி தீண்டினால்.... நீ தொடும் ஞாபகம்....
நீ தொட்ட இடமெல்லாம்.... வீணையின் தேன்ஸ்வரம்”
கவிஞர் முத்துக்குமாரின்
அருமையான
அழகான கவிதை
“பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ?
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ?
மனதின் ஆசைகள்..
மலரின் கோலங்கள்..
குயிலோசையின் பரிபாஷைகள்..
அதிகாலையின் வரவேற்புகள்..”
இது கங்கை அமரன்
அவரே முதுமை பற்றி
“கடந்த காலமோ திரும்புவதில்லை
நிகழ் காலமோ விரும்புவதில்லை
எதிர் காலமோ அரும்புவதிலை “
யாரையும் முணுமுணுக்க வைக்கும் பாடல்
“ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தடி போலாடுது {
:” ஆத்தாடி மனசுக்குள்ள காத்தடி
பறந்ததா ஒலகமே மறந்ததா “
இது முதல் மரியாதை”
இரத்தினச் சுருக்கமான சில காவியங்கள் கவியரசு வரிகளில்
ஒரு காதல் காவியம்
“ ஆடை இதுவென நிலவினை
எடுக்கும் ஆனந்த மயக்கம்
அம்மா குளிரென ஒன்றினை ஓன்று அணைப்பது பழக்கம்”
ஒரு பெண் மணமுடித்து குழந்தை பெறுவது இரண்டே வரிகளில்:
“ பூமணம் கொண்டவள் பால் மணம் கொண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள் “
கவிதை நயத்துக்காவே தணிக்கை வெட்டிலிருந்து தப்பித்த வரி
“மலராத பெண்மை மலரும் “
பிரிவுத் துயரை மிக அழகாக விவரிக்கும் பாடல்
“எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டுச் சென்றானடி
இன்று வேறுபட்டு நின்றானடி “
“கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து விளையாடச் சொன்னானடி அவனே விளையடி விட்டானடி “
ஒவ்வொரு வரியிலும் இலக்கிய நயம்
தாயின் கண்டிப்பை மீறி காதலனை நலம் விசாரிக்கும்
“ நலந்தானா நலந்தானா
உடலும் உள்ளமும் நலந்தானா ?”
கல்லூரி வாழ்வை விளக்கும் பாடல்
“ வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே “
தத்துவத்தை எளிய சொற்களில் விளக்குவதில் கண்ணதாசனுக்கு ஈடு இணையே கிடையாது
“தெளிவாகப் புரிந்தாலே சித்தாந்தம்
,அது தெரியாமல் போனால் வேதாந்தம் “
“ஆடுவதோ நாடகம் ஆளுக்கொரு பாத்திரம்
இறைவனுக்கு வேஷம் என்னவோ
ஆடவிட்டுப்பாடுவார் மூடுதிரை போடுவார்
மேடை அவர் மேடை அல்லவோ “
“ துடுப்பு கூட பாராமாகி கரையைத் தேடும் ஓடங்கள் “
“வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது?”
“பூஜ்ஜியத்துக்குக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப்புரிந்து கொண்டால் அவன்தான் இறைவன் “
மதம் தாண்டி இசையில் மயங்க வைக்கும் பாடல்கள்
“தில்லை அம்பல நடராஜா”
“முருகா என்றதும் உருகாதா மனம்}”
பாடல்கள் திரைப்பாடல்கள் ஆகும்போது ஒலி ஒளி காட்சி அமைப்பு நடிப்பு எல்லாம் சேர்ந்து ஒரு உயர்வு நவிற்சியாக பாடலுக்கு மெருகூட்டுகின்றன.
“வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட
சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்....நேரம்
வானில் ஒரு தீபாவளி நாம் பாடலாம் கீதாஞ்சலி
கீழை வானமெங்கும் தீயின் ஓவியம்
கண்கள் போதை கொள்ளும் காலை காவியம்
கரையின் மீது அலைக்கென்ன மோகம்
நுரைகள் வந்து கோலம் போடுதே’
இது போன்ற பாடல்களைக் கேட்கும்போது அந்தக் காட்சிகள் கண் முன்னே விருந்து படிகின்ற்றன்
எப்போதோ கேட்டு இன்றும் மனதில் நிற்கம பாடல்கள்
“நெஞ்சம் அலைமோதவே கண்ணும் குளமாகவே “
““சுந்தரி சௌந்தரி நிரந்தரியே
அந்தமும் ஆதியும் இல்லா ஜோதியே “
புரட்சிப் பாடல் வரிகள் சில
“துடிக்கும் ரத்தம் பேசட்டும் துணிந்த நெஞ்கம் நிமிரட்டும்
உழைக்கும் வர்க்கம் ஓங்கட்டும்
“பசி வர அங்கே மாத்திரைகள் பட்டினியால் இங்கு யாத்திரைகள் “
சொல் அலங்காரம் கொண்ட பாடல்கள்
“ அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே “
“ ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக “
“பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன் “
அறுபது ஆண்டுகளாய்க் கேட்டு மனதில் பதிந்த பாட்லக்ள் பல நூறோ ஆயிரமோ இருக்கும்
அவற்றில் ஒரு சிலவற்றை எடுத்து உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்
நினைவெல்லாம் காவியம் பதிவு சற்று மிக நீளமாக அமைந்து விட்டது .
அப்படி இதுவும் போகாமல் இதோடு நிறைவு செய்கிறேன்
அதற்கு முன் ஒரு சிறிய வினா ,மிக எலிய வினா
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
இந்தக் குறளுக்கு இணையாக் உள்ள திரைப்பாடல் (கள்) எது ப?
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில சிந்திப்போம்
30032021tue
Sherfudddin P
....
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment