Saturday, 6 March 2021

நல வாழ்வு -துள்ளும் முதுமை

 துள்ளும் முதுமை

மூத்த குடிமக்களே
உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி !உற்சாகமூட்டும் டானிக் !!
வயது அறுபது , எழுபது தாண்டி விட்டதே இனி என்ன இருக்கிறது வாழ்வில் என்ற சலிப்பு வேண்டாம் .
அறுபதில் தொடங்கி எண்பது வயது வரை உள்ள இருபது ஆண்டுகள்தான் வாழ்வின் மிகச் சிறந்த தருணங்கள் என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை
அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு மிக விரிவான ஆய்வில் .கிடைத்த தகவல்கள்
- அறுபதில் தொடங்கி எழுபது வரை உள்ள பத்து ஆண்டுகள் ஒருவரின் வாழ்வில் மிகத் திறமையாக செயல்படக் கூடிய காலம்
-
- அதற்கு அடுத்து வருவது எழுபது முதல் எண்பது வரை உள்ள காலம்
-
- மூன்றவதாக வருவது ஐம்பது முதல் அறுபது வரை உள்ள பததாண்டுகள்
இந்தக் கூற்றுகளுக்கு அவர்கள் தரும் சான்றுகள்
- உலகின் மிகப் பெருமையான விருதான நோபல் பரிசு பெற்றவர்களின் சராசரி வயது அறுபத்தி இரண்டு
-
- மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளின் சராசரி வயது அறுபத்தி மூன்று
-
- அமெரிக்க நாட்டில் உள்ள மிகப்பெரிய நூறு தேவாலயங்களின் தலைமை குருமார்களின் சராசரி வயது எழுபத்தி ஓன்று
- போப்பாண்டவர்களின் சராசரி வயது எழுபத்தி ஆறு
மேலும் ஒரு மருத்துவ இதழில்(NEW ENGLAND JOURNAL OF MEDICINE) வெளியான ஒரு அறிக்கை சொல்கிறது :
ஒரு மனிதனின் ஆற்றல் வளம் அறுபது வயதில் உச்சத்தை அடைந்து எண்பது வயது வரை தொடர்கிறது
நம் நாட்டு குடியரசுத் தலைவர்களும் தலைமை அமைச்சர்களும் பெரும்பாலும் இந்த அறுபது எண்பது வீச்சில் உள்ளவர்கள்தான்
என்ன தோழர்களே . தளரச்சியை உதறி எறிந்து ,விட்டு புத்துயிர் பெற்று உற்சாகமா வாழத தொடங்குவோமா !!
வாழ்க்கைக் கவிதை வாசிப்போம் .முடிந்த வரை முயற்சிப்போம் , சாதிப்போம்
SOURCE: N.Engl.J .Med. 70,389 (2018)
நன்றி
தோழர் மரு.. சந்திர சேகரனுக்கு . அவர் கட்செவியில் 22022021 அன்று ஆங்கிலத்தில் அனுப்பிய செய்தியின் தமிழாக்கம் சில மாற்றங்கள், சில கூடுதல் தகவல்களுடன்
(பிறகு ஏன் பணியாளர்களை அறுபது வயதில் வீட்டுக்கு அனுப்புகிறார்கள் என்பது புரியவில்லை )
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
06032021sat
Sherfuddin P
May be an image of text
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment