Thursday, 11 March 2021

திருமறை சொல்லும் நயத்தக்க நாகரீகம்

 நயத்தக்க நாகரீகம்

(நாகரிகம்----- அறம் பொருள் இன்பத்திற்கண் நற்குணங்கள் பலவும் உடைமை.)
திருமறை கூறும் பல்வேறு நாகரிக நற்பண்புகள் ஒரு சிலவற்றை இங்கு தருகிறேன்
1.பிறர் அறைக்குள் நுழையுமுன் அவர்கள் அனுமதி பெறவும் (24:59)
2.உங்கள் வீடு தவிர மற்ற வீடுகளுக்குள் நுழையுமுன் அவர்கள் மேல் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் என வாழ்த்தி அவர்கள் அனுமதி பெறவும் (((24:27)
3.தற்புகழ்ச்சி தவிர்கவும்(53:32)
4.தங்களால் முடிந்த அளவுக்கு சிறிய அளவில் தருமம் செய்வர்களை கிண்டல் பண்ணாதீர்கள் (9:79)
5.தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு அடக்கு முறை ஆட்சி நடத்த்துவது கொலையை விட கொடிய குற்றமாகும் (2:217)
6.பிறர் பற்றி உங்களிடம் யாராவது அவதூறு சொன்னால் இப்படிப் பேசுவது தவறு என அவரிடம் எடுத்துச் சொல்லுங்கள் (24:18)
7.தகவல் சொல்பவர் நம்பிக்கைக்கு உரியவராக் இருக்க வேண்டும் . அப்படி இல்லாவிட்டால் அந்தத்தகவலின் அடிப்படையில் செயல்படுமுன் தகவல் சரியானதுதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் (49:6)
8.பிற மத தெய்வங்களை அவமானப் படுத்தாதீர்கள்(6:108)
9.கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள் (3:134)
10.வதந்திகளைப் பரப்பாதீர்கள் (24:15)
11,யாரையும் அவமதிக்காதீர்கள் (49:11)
12.வீண் விரயம் செய்யாதீர்கள் (17:26)
13.இல்லாதோருக்கு உணவளியுங்கள் (22:36)
14.புறம் பேசாதீர்கள் (49:12)
15.விருந்தினரை கண்ணியமாக நடத்துங்கள் (51:24-27)
இன்றைய வினா
எந்த சமுதாயத்துக்கு தருமம் செய்தாலும் இறைவன் அதை ஏற்றுக்கொண்டு அதற்குரிய
பலனை கொடுக்கத் தவற மாட்டன்
என கோடி காட்டும் இறைவசனம் எது
இறைவன் நாடினால் நாளை !
11032021thu
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment