Friday, 12 March 2021

குரான் -2:272

 இன்றைய வினா

எந்த சமுதாயத்துக்கு தருமம் செய்தாலும் இறைவன் அதை ஏற்றுக்கொண்டு அதற்குரிய
பலனை கொடுக்கத் தவற மாட்டன்
என கோடி காட்டும் இறைவசனம் எது
இறைவன் நாடினால் நாளை

இறை வசனம் 2:272
(நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை இறைவன் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. இறைவனின் அருளை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.
இந்த வசனத்துக்கு மறை அறிஞர்கள் கொடுக்கும் விளக்கம் :
தம் மதம் சார்ந்த மக்களுக்கு செய்யும் தருமத்தை மட்டும்தான் இறைவன் ஏற்றுக்கொள்வான் , அதற்குரிய பலனைக் கொடுப்பான் என்ற ஒரு எண்ணம் இசுலாமிய மக்களிடம் இருந்தது. அந்தத் தவறான எண்ணத்தை நீக்குவதே இந்த வசனத்தின் நோக்கம் .
மக்களை நேர்வழியில் நடத்துவதை .இறைவன் தன் பொறுப்பாக ஏற்றுக்கொள்கிறான் .எனவே அது பற்றிய சிந்தனையை நீங்கள் மறந்து விட்டு எல்லோருக்கும் தான தருமம் செய்யுங்கள் என்பது இதன் கருத்து
(Source :Towards understanding Quran )
சகோ அசனலி அனுப்பிய விடை :
வசனம் 9:60
தானங்கள் தருமங்கள் இல்லாதோருக்கும் , ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இசுலாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், இறைவனின் பாதையில் செல்வோருக்கும் வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – இறைவன் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.
சகோ அசன் அலிக்கு நன்றி,
வாழ்த்துகள்
, பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
12032021fri
Sherfuddin P
No photo description available.
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment