"ஒன்றே குலம் ஒருவனே தேவன் "
என முதல் முழக்கம் இட்டவர் யார்?
விடை
திருமூலர் – திருமந்திரம் என்ற நூலில்
திருமூலர் – பதினெட்டு சித்தர்களில் ஒருவர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது
மூன்றாயிரம் பாடல்கள் கொண்ட திருமந்திரத்தை சமய நூலாகப் பார்க்காமல் அறிவு நூலாகப் படித்தால் பல நுட்பமான செய்திகளை விரிவாக அறிந்து பயன் பெறலாம் ஆன்மிகம், மருத்துவம், விஞ்ஞானம், தத்துவம், உளவியல் என திருமூலர் தொடாத துறைகளே இல்லை.
பாடல் இதோ
ஒன்றேகுலமும்ஒருவனேதேவனும்
நன்றேநினைமின்நமன்இல்லைநாணாமே
சென்றேபுகும்கதிஇல்லைநும்சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே
படிக்க எளிதாக இருந்தாலும நுட்பமான பொருள் கொண்டது
இன்னும் சில பாடல் வரிகள்
• அன்பே சிவம்.
•
• யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
•
• உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதமே
மிக விரிவாக எழுத வேண்டியதை மிக சுருக்கமாகத் தந்துள்ளேன்
சரியான விடை எழுதி வாழ்த்துகளும் பாராட்டும் பெrறும் அறிஞர்கள்
சகோ .சோமசேகர், செங்கை சண்முகம் ,ரவிராஜன் ,மரு .சந்திரசேகரன் பர்வேஸ்,
எ ஆர் விஸ்வநாதன் , அசனலி சுந்தர் ராஜ் , டி ஆர் சுந்தரம் ,எஸ் எ எஸ் ஹமீது
முயற்சித்த அனவைருக்கும் மனமார்ந்த நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
•
0303202wed
Sherfuddin P
No comments:
Post a Comment