இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
1 சூரத்துல் பாத்திஹா
அஸ்ஸலாமு அலைக்கும்,
வ அலைக்கும் சலாம்
ஜஸக்கல்லாஹ்
பிஸ்மில்லாஹ்,
அல்லாஹு அக்பர்
இப்படி நிறைய அரபு மொழிச் சொற்கள் நம் பேச்சில், எழுத்தில் மிக இயல்பானதாகி விட்டன
பாங்கு, உழு எனும் உடல் சுத்தி , தொழுகையில் நிய்யத்து , குரான் சூராக்கள், வசனங்கள், துஆக்கள் எல்லாமே அரபு மொழிதான்
பெரும்பாலருக்கு இவற்றின் பொருள், (தமிழ் அர்த்தம் ) தெரியும்
தெரியாத சிலருக்கு விளக்கவே இந்தப்பதிவு
தெரிந்தவர்கள் ?
என் பதிவில், தவறுகள் இருந்தால் சுட்டிகாட்டலாம்
மாற்றங்கள் தேவைபட்டால் சொல்லலாம்
இதுவரை குரான் வினா விடை வியாழன் , வெள்ளி போட்டு வந்தேன்
அதில் பலரும் பங்கெடுத்து உற்சாகமூட்டினார்கள்
குறிப்பிட்டுச் சொல்வதென்றால் சகோ
ஹசன் அலி, ஷிரீன் பாருக்
அஷ்ரப் ஹமீதா, தல்லத்
சிராஜுதீன் , ஷர்மதா
இவர்களுக்கும் ,கருத்துகள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி
வரும் தொடருக்கும் இதே போல் உற்சாகமூட்டுவீர்கள்
இனி
ஏன் இந்தப் புதிய தலைப்பு ?
தியாகத்திருநாள் சிறப்புப் பதிவு ஒன்றில் தருதே இப்ராகிம் மின் பொருள் தமிழில் போட்டிருந்தேன்
அதைப்படித்த ஒரு சகோ
நபி ஸல் அவர்களை விட நபி இப்ராகிம் அலை அவர்களுக்கு சிறப்பான இடம் போல் தெரிகிறதே என்று கருத்துத் தெரிவித்தார்
அதற்கு நான் மறுமொழி சொல்லவில்லை
தொழுகை , மற்ற அமல்களில் அரபு மொழியில் ஓதப்படும் எல்லாவறிற்கும் தமிழில் பொருளை போடலாமே என்ற எண்ணம் தோன்றியது
இறைவன் அருளால் வழக்கம் போல் அவன் மேல் முழுப் பொறுப்பையும் சுமத்கி விட்டு என் பணியைத் துவங்குகிறேன்
வியாழன் (இன்று) புத்தாண்டு துவங்குகிறது (பிறைக் கணக்குக்கு நேற்று இரவு )
ஆம்
இன்று 0101(முஹர்ரம் ) 1445 ஹிஜ்ரி ஆண்டு
எந்த ஒரு செயலையும் அல்ஹம்து சூராவுடன் துவங்குவது சிறப்பு
அந்த சூராவின்( தமிழ் வடிவமும் ,) பொருளும் கீழே
(சூரத்துல் பாத்திஹா, சுராஹ் 1)
துவக்க அத்தியாயம் , அத்தியாயம் 1
(பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் )
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் திருப்பெயரால் (1.1)
(அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் )
அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.(1.2)
(அர்ரகுமானிர்ரஹீம்)
(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.(1.3)
(மாலிக்கி ய்யவ்மித்தீன் )
அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்(1.4)
(இய்யாக்க நக்புது வஇய்யாக்க நஸ்த ஈன்)
, (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம்
உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.(1.5)
(இஹ்தி நஸ்ஸிராத்தல் முஸ்தகீம்
நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக!(1.6)
(சிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம் கய்ரில் மக்லூபி அலைஹிம் வலல்லாலீன் )
(அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி.
(அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.(1.7)
இந்த சுராஹ் அனைவருக்கும் தெரிந்த ஓன்று
எந்தத் தொழுகையும் பிரார்த்தனையும் இதை ஓதினால்தான் நிறைவடையும்
7 வசனங்கள் கொண்ட இந்த சூராஹ் திருக்குரானுக்கு மட்டும் அல்ல, உலகில் உள்ள அனைத்து வேதங்களுக்கும் சுருக்கமாகவும் விரிவுரையாகவும் விளங்குகிறது என்கிறார்கள் மார்க்க அறிஞர்கள்
விவரிக்கத் துவங்கினால் ஒரு தனி நூல் அளவுக்கு நீளும் என்கிறார்கள்
இப்போதைக்கு அந்த அளவுக்கெல்லாம் போகாமல்
இதோடு நிறைவு செய்கிறேன்
இன்றைய வினா
அல்லாஹ் என்ற அரபுச் சொல்லுக்கு ஈடான தமிழ் சொல் என்ன ?
புதிய தலைப்பு பற்றி கருத்துக்கள் குறை நிறைகளைத் தெரிவிக்க வேண்டுகிறேன்
இ(க)டைச் செருகல் :
பிழைகளைத் தவிர்க்க குரான் வசனங்களின் , மொழி பெயர்ப்பையும் , ஒலி பெயர்ப்பையும் நகல் ஒட்டு (copy paste)
முறையில் பதிவு செய்கிறேன்
தமிழ் ஒலி வடிவம் கிடைக்காவிட்டால் ஆங்கில ஒலி வடிவைப் பதிவு செய்ய எண்ணம்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
01 01 (முஹர்ரம் ) 1445
2007 2023 வியாழன்
சர்புதீன் பீ
இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
2 அல்லாஹ்
21072023 வெள்ளி
இது நேற்றைய பதிவின் நிறைவு வினா
விடை அனுப்பியோர் சகோ
ஷர்மதா சிராஜுதீன் தல்லத் மூவரும் அனுப்பிய விடை
வணக்கத்துக்குரியவன்(தகுதியானவன்) என்பது பொருள்.
அலாஹா என்னும் வேர்ச்சொல்லிலிருந்து வந்தது.அலாஹா என்றால் வணங்கப்படுவது என்று பொருள
மூவருக்கும் நன்றி, வாழ்த்துக்கள்
சகோ ஷர்மதா அல்லாஹ் என்ற சொல்லின் சிறப்பு பற்றி இன்னும் சற்று விரிவாக விளக்கியிருந்தார்
அவருக்கும் முதல் விடை அனுப்பிய சகோ தல்லத்துக்கும் சிறப்புப் பாராட்டு
அல்லாஹ் என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொல் என்ன ?
இது வினா
அல்லாஹ் என்ற சொல்லுக்கு ஈடான ஒற்றைச் சொல் தமிழில் மட்டும் அல்ல உலகின் எந்த மொழியிலும் கிடையாது என்பது அறிஞர்களின் ஒருமித்த , உறுதியான கருத்து
எளிதாக இறைவன் என்று சொல்கிறோம், எழுதுகிறோம் . ஆனால் எந்த வகையிலும் அது அல்லாஹ் என்ற சொல்லுக்கு ஈடாகாது
இறைவன் என்றால் அடுத்து இறைவி என நினைவில் வரும்
தெய்வம் என்றால், பெண் தெய்வம், தெய்வங்கள் என்ற எண்ணங்கள் தோன்றும்
God என்றால் gods எனும் பன்மை
இப்படி ஒருமை, பன்மை , ஆண்பால் பெண்பால் என்று எதிலும் வகைப்படுத்த முடியாத சொல்தான் அல்லாஹ்
அளவற்ற அருளாளன் (அரஹ்மான் )
நிகரற்ற அன்புடையோன் (அர்ரஹீம்)
பரிசுதனாவன் (குத்துஸ்) (Quddus)
சாந்தி அளிப்பவன் (சலாம்)
என இறைவனின் பண்பு நலன்களையும் ,பல்வேறு பணிகளையும் குறிக்கும்
99 சிறப்புப் பெயர்கள் இறைவனுக்கு உண்டு
இந்த 99 சொற்களின் பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ள ஒற்றைச் சொல் அல்லாஹ் என்கிறார்கள் அறிஞர்கள்
திருமறை குரான் முழுக்க முழுக்க இறைவன் படைப்பு என்ற கூற்றைப் பொய்ப்பிக்கும் முயற்சியில் இறங்கினார்கள் ஏக இறைத் தத்துவத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த மக்கா வாழ் குறைஷிகள்
அதற்காக அரபு நாட்டின் மிகச் சிறந்த ,அறிஞரைத் தெரிவு செய்து அவரை குரானைப்போல் இன்னொரு நூல் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தினார்கள்
நாட்கள் , வாரங்கள், மாதங்கள் உருண்டோடின
அவர் ஒரு வரி கூட எழுதவில்லை .
முயற்சிக்கு அறிகுறியாக அறை முழுதும் வீனாண எழுது பொருட்கள் குவிந்து கிடந்தன
அந்த அறிஞர் சொன்ன காரணம்
“நான் எவ்வளவோ முயற்சித்துப் பார்த்து விட்டேன்
குரானின் துவக்கத்தில் உள்ள பிஸ்மில்லாஹ் என்பதில் வரும்
அல்லாஹ் என்ற சொல்லுக்கு ஈடாக ஒரு சொல்லோ , விளக்கமோ என்னால் எழுத் முடியவில்லை
எனவே அங்கேயே எழுத்து தடை பட்டுப் போகிறது “
ஆயத்துல் குர்ஸி எனப்படும் குரான் வசனம் இறைவனின் சிறப்புகளில் பலவற்றை சொல்கிறது
2: 255 (சுராஹ் அல் பக்ரா
அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமாஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லாபி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்பஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள வலா யவூதுஹு ஹிஃப்ளுஹுமா வஹுவல் அளிய்யுல் அளீம்.
பொருள்:
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.
அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.
அவனுக்குச் சிறு உறக்கமோ, ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது.
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன.
அவன் அனுமதித்தால் தவிர அவனிடம் யார் தான் பரிந்து பேச முடியும்?
அவர்களுக்கு முன்னேயும், பின்னேயும் உள்ளதை அவன் அறிகிறான்.
அவன் அறிந்திருப்பவற்றில் எதையும் அவர்களால் அறிய முடியாது. அவன் நாடியதைத் தவிர.
அவனது ஆசனம் வானங்களையும், பூமியையும் உள்ளடக்கும்.
அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமமானதன்று.
அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.
இன்னும் நிறைய எழுத்கொண்டே போகலாம்
எல்லாவற்றுக்கும் ஒரு கால வரை அவசியம் எனவே இதோடு
(safe ஆக ) நிறைவு செய்கிறேன்
இன்றைய வினா
இறைவன் பற்றிய வ்ரையறை ( definition) திருமறையில் ஒரு சில வரிகளில் சொல்லப்படுகிறது
அது என்ன ?
விடை விளக்கம் அடுத்த வாரம் அடுத்த பதிவில்
இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
02 01 (முஹர்ரம் ) 1445
21 07 2023 வெள்ளி
சர்புதீன் பீ
இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
3 சுராஹ் 112 அல்லாஹ் பற்றிய வ்ரையறை (definition)
சென்ற பதிவின் நிறைவு வினாவுக்கு
விடை விளக்கம் பார்க்கு முன்
திருமறை குரான் பற்றி ஒரு சிறிய செய்தி –சென்ற பகுதியில் சொல்ல நினைத்து சொல்ல மறந்தது
முகமது மர்மதுக் பிக்தால் (Muhammad Marmaduke Pickthaal )
ஆங்கிலேயாராகப் பிறந்து கிறித்தவ மத பரப்புரையாளராக இருந்து
இஸ்லாமியார மாறி , அதில் தீவிர ஈடுபாடுகொண்டு
The meanings of the Glorious Quran)
என்ற பெயரில் குரான் ஆங்கில வடிவை 1930ல் வெளியிட்டவர்
அவர் தன முகவுரையில் சொல்கிறார் :
திருமறை குரானை மொழி பெயர்க்க முடியாது
இங்கு நான் எடுத்துகொண்டது குரானுக்கேற்ற கண்ணியமான ஒரு மொழி நடையில் ,இலக்கிய நடையில் திரு மறையைத் தருவதற்கு ஒரு முயற்சியே தவிர
குரானைக் லேட்பாவர்களை மனம் உருகிக் கண்ணீர் வடிக்க வைக்கும் அந்த அரபு மொழி இன்னிசை அமைப்பை யாராலும் வேறு மொழியில் கொண்டு வர முடியாது “
அரபு மொழியை கற்றுத் தேர்ந்து, பல நாடுகளில் பல இஸ்லாமிய அறிஞர்களைக் கலந்து ஆலோசித்து சரி பார்த்து பிறகுதான் தன மொழிபெயர்ப்பை வெளியிடுகிறார்
ஒரு நூறாண்டுகள் கடந்தும் இன்னும் பிக்தாலுக்கு இணையான ஒரு சிறப்பான மொழி பெயரப்பு வரவில்லை என்கிறார்கள்
சென்ற பகுதி வினா
இறைவன் பற்றிய வ்ரையறை (definition) திருமறையில் ஒரு சில வரிகளில் சொல்லப்படுகிறது
அது என்ன ?
விடை
குரான் சுராஹ் 112 அல் இக்லாஸ்(உளத் தூய்மை ) , அல் தவ்ஹீத் (ஓரிறைக் கொள்கை )
நாலே வரிகள் , 15 சொற்கள் கொண்ட இந்த சிறிய சூராவின் மகத்துவம் மிகப் பெரிது
மூன்று முறை இந்த சூராவை ஓதினால் முழுக் குரானையும் ஒரு தடவை ஓதியது போலாகும் எனப்படுகிறது
அல் இக்லாஸ் என்பது சூராவின் பெயர் மட்டுமல்ல
சூராவின் பொருளையும் – உளத் தூய்மை, ஏக இறைகொள்கை --
இவற்றையும் குறிக்கிறது
அதனால்தான் சூராவில் இடம் பெறாத ஒரு சொல் தலைப்பாக அமைந்துள்ளது
(பெரும்பாலான சூராக்களின் பெயர்கள் அந்த சூராவில் ஒரு சொல்லாக வருவதாக இருக்கும் )
பேச்சு வழக்கில் குல்குவல்லாஹு சூராஹ் என அறியப்படுகிறது
சுராஹ் 112 அல் இக்லாஸ்
Bismi l-lāhi r-raḥmāni r-raḥīm(i)
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
¹ Qul huwa l-lāhu ’aḥad(un)
குல்ஹுவல்லாஹு அஹத்
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே(112:1)
² ’allāhu ṣ-ṣamad(u)
அல்லாஹு சமத்
அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.(112:2)
٣
³ Lam yalid walam yūlad
லம்யளித் வலம் யூலத்
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.(112:3)
٤
⁴ Walam yaku n-lahū kufuwan ’aḥad(un)
வலம்யகு(ன்)ல்லஹு குபுவன் அஹத்
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.(112:4)
இந்த வரையறைக்கு முழுதுமாக ஒத்துப் போவது மட்டுமே அல்லாஹ் எனும் ஏக இறை
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
அஷ்ரப் ஹமீதா
முதல் சரியான விடை
தல்லத்
நிறைய விடைகள் எதிர்பார்த்தேன் –பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்த சிறிய சூராஹ் என்பதால்
இன்றைய வினா
இஸ்லாத்தின் 5 கடமைகள் , 5 தூண்கள் எனப்படுவதில் முதலாவது
ஈமான்
என்பது
இதன் பொருள், விளக்கம் என்ன ?
இறைவன் நாடினால் விடை விளக்கதுடன் நாளை சிந்திப்போம்
நிறைவு செயுமுன் ஒரு சிறிய நினைவூட்டல்
சிறப்பு மிக்க இந்த முஹர்ரம் மாதத்தின் பிறை ,9, 10 ,11
இதில் 9, 10 அல்லது 10 ,11 என்ற இரண்டு நாட்கள் நோன்பு வைப்பது நபி பெருமான் அவர்களால் ரம்ஜான் மாத கட்டாய நோன்புக்கு அடுத்து சிறப்பானது என்று வலியுறுத்தி சொல்லப்பட்டது
இந்த(ஆஷுரா ) நோன்பின் பலன்கள் பற்றி நிறைய பதிவுகள் வருகின்றன எனவே நான் இங்கு அதை விளக்கவில்லை
நம் அனைவருக்கும் இறைவன் முஹர்ரம் 9, 10 (ஜூலை 28, 29 – வெள்ளி சனி )/ 10, 11(ஜூலை 29, 30 சனி ஞாயிறு ) நோன்பு வைக்கும் நல் வாய்ப்பை அருள்வானாக
08 01 (முஹர்ரம் ) 1445
27 07 2023 வியாழன்
சர்புதீன் பீ
இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
4 ஈமான்
நேற்றைய பதிவில் குல் ஹு வல்லாஹு என்று துவங்கும் சூராஹ் 112 அல் இக்லாஸ் பற்றிப் பார்த்தோம்
இந்த குல் என்ற சொல்லுக்கு சொல் என்று பொருள்
இந்தச் சொல் குர்ஆனில் மிகப்பல(200கும்மேற்பட்ட ) இடங்களில் பல்வேறு வடிவங்களில் வரும் ,(எ டு - நபியே சொல்வீராக )
இனி
நேற்றைய வினா
இஸ்லாத்தின் 5 கடமைகள் , 5 தூண்கள் எனப்படுவதில் முதலாவது
ஈமான்
என்பது
இதன் பொருள், விளக்கம் என்ன ?
விடை
‘ஈமான்’ என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் ‘இறைநம்பிக்கை’ என்று பொருள். அதாவது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் எவற்றையெல்லாம் நம்ப வேண்டும் என்று கூறினார்களோ அவற்றில் எதையும் அதிகமாக்காமலும் எதையும் விட்டுவிடாமலும் உள்ளதை உள்ளபடி உண்மையென உள்ளத்தால் உறுதிகொள்வதே ‘ஈமான்’ என்பதாகும்
இதுவே முதலாம் கலிமா
லாஇலாஹஇல்லல்லாஹ்
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
லாஇலாஹஇல்லல்லாஹ் என்பதன்
பொருள்
'உண்மையில் வணங்கப்படுவதற்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை' என்பதாகும்.
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் =
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.
இரண்டு வரிகள் கொண்ட இந்த கலிமவுக்கும் ஈமான் என்ற ஒற்றைச் சொல்லுக்கும் உள்ள விளக்கங்கள், விரிவுரைகள் ஏராளம்
குறிப்பாக
லாஇலாஹஇல்லல்லாஹ்
என்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று சொல்லப்படுகிறது
இந்தப் பதிவுத் தொடரின் நோக்கம் நாம் பயன்படுத்தும் அரபு மொழி சொற்களுக்கு தமிழில் பொருள் , சிறிய விளக்கம் சொல்வதுதான்
எனவே இவ்வளவு விளக்கம் போதும் என நினைக்கிறேன்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன்
முதல் சரியான விடை
தல்லத் - -சுருக்கமான விடை, விளக்கம் – நன்றி
மெஹராஜ் – நீண்ட இடை வெளிக்குப்பின் பங்கேற்பு
ஷர்மதா
அவர்கள் அனுப்பிய விடைகள்
சகோ சிராஜுதீன்
ஈமான் பற்றிய விளக்கம், ஜிப்ரீல்(அலை) நபி (ஸல்) அவர்களிடம் கூறியது:
1.அல்லாஹ் (தான் அனைத்தையும் படைத்தவன், அவன் தான் வணங்குவதற்கு தகுதியானவன், அவனுக்கு அழகிய பெயர்களும் பண்புகளும் உள்ளன) என்று நீ நம்ப வேண்டும்.
2.மலக்குமார்கள் (ஒளியால் படைக்கப்பட்டவர்கள். இறைவனின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்ய மாட்டார்கள் என்று) நம்ப வேண்டும்.
3.வேதங்கள் (அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டவை அதில் உள்ளவை தான் தவ்றாத், ஸபூர், இன்ஜீல், இறுதி வேதம் குர்ஆன் என்று )நீ நம்ப வேண்டும்.
4.தூதர்கள் (அனைவரும் நல்லவர்கள் அவர்களில் முதன்மையானவர் நபி நூஹ்(அலை) அவர்கள்.அவர்களில் இறுதியானவர் நபி முஹம்மது(ஸல்) அவர்கள் என்று) நீ நம்ப வேண்டும்.
5.இறுதி நாளில் (மக்கள் அனைவரும் விசாரணைக்காக எழுப்பப்படுவார்கள் என்று) நீ நம்ப வேண்டும்.
6.விதி(யால் ஏற்படும்) நன்மையானாலும் தீங்கானாலும் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று நம்ப வேண்டும். (முஸ்லிம்)
சுருக்கமான விடை:
ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நம்புவது
"Faith is to believe in Allah, His angels, (the) meeting with Him, His Apostles, and to believe in Resurrection."
சகோ தல்லத்
ஒரே வார்த்தையில் பொருள் சொல்ல வேண்டும் எனில் ஈமான் என்பதற்கு நம்பிக்கை என்பது பொருள். வசனம் 2:285 இல் நம்பிக்கை பற்றி கூறும் பொழுது, இத்தூதர் தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார், நம்பிக்கை கொண்டோரும் நம்பினார்கள். அல்லாஹுவையும் அவனது வானவர்களையும் அவனது வேதங்களையும் அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். மேலும் அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம். நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம் ,எங்கள் இறைவா உனது மன்னிப்பை வேண்டுகிறோம். உன்னிடமே எங்கள் திரும்புதல் உண்டு என்று கூறுகின்றனர் என்றும்
மேலும் வசனம் 39 :3ல் அறிந்து கொள்க, இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது எனவும், வசனம் 98 :5 ல் வணக்கத்தை அல்லாஹ்வுக்கே தூய்மையாக்கி அவனை வணங்க வேண்டும் என்று அவர்கள் ஏவப்பட்டு உள்ளனர் என்றும் கூறுகிறான்.எனவே மொத்தத்தில் ஈமான் என்பது லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்பதே ஆகும்.
சகோ மெஹராஜ்
ஈமான் என்பது, அல்லாஹ்வின் மீதும், நபிமார்கள் மீதும், இவ்வுலகில் நாம் செய்யும் காரியங்களுக்கு இறுதி நாளில் நியாயத்தீர்ப்பு உண்டு என்பதின் மீதும், அல்லாஹ்வின் விதிப்பின்படி நன்மை தீமை எது வந்தாலும் அதை ஏற்றுப் பொருந்திக் கொள்வதின் மீதும் நம்பிக்கை கொள்வது ஆகியவைகள் ஈமானின் பர்லுகள்.
நம்பிக்கை
சகோ ஷர்மதா
ஈமான் என்பது நம்பிக்கை என்று பொருளில் வரும்.இஸ்லாமிய கடமைகள் ஐந்தின் மேல்
நம்பிக்கையுடன் செயல்படுவதையும்,வாழ்க்கையில் முழுமையாக்குவதையும்
ஈமான் என்கின்றோம்
இனி வரும் பகுதிகளில்
இஸ்லாத்தின் இரண்டாம் கடமையான தொழுகை பற்றிப் பார்ப்போம்
தொழுகை – உடல் சுத்தி , தொழுகை அழைப்பு , நிய்யத் என பல பகுதிகள் கொண்டது
ஓன்று ஒன்றாக பார்ப்போம்
இன்றைய வினா
தொழுகை –என்ற சொல்லைக் குறிக்கும் அரபுச் சொல் எது ?
இறைவன் நாடினால்
நாளை தமிழிலும்
அடுத்த வாரம் அரபு மொழியிலும் சிந்திப்போம்
09 01 (முஹார்ரம் )1445
28072023 வெள்ளி
சர்புதீன் பீ .
No comments:
Post a Comment