தமிழ் (மொழி)அறிவோம்
மாடுகள், மேய்ச்சல் நிலங்கள்
23072023 ஞாயிறு
“மாடுகள் மேய்ச்சல் நிலங்களை கண்காணிக்க வேண்டுகோள்”
இதைபடித்தவுடன் என் மனதில் தோன்றியது
“மாடுகளே மேய்ச்சல் நிலங்களை கண்காணிக்க வேண்டும் ”
என்பது போல் பொருள் வருகிறது என்பதுதான்
“மேய்ச்சல் நிலங்களை..என்று சொன்னாலே போதுமானது . இது ஏதோ மாடுகள் வேண்டுகோள் விடுப்பது போலிருக்கிறது !
மேலும், 'கண்காணிக்க' என்றிருப்பது 'பராமரிக்க' என்றிருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது . பொதுவாக தவறு நடக்கும் இடத்தில்தான் கண்காணிக்கச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன் .
எனவே , ' மேய்ச்சல் நிலங்களைப் பராமரிக்க வேண்டுகோள் ' என்பது குழப்பமற்ற கூற்றாகலாம் !
யாருடைய வேண்டுகோள் ( விவசாயிகள்..பொது மக்கள்? ) என்று தெரிவித்தால் இன்னும் தெளிவு !
இது சகோ நெய்வேலி ராஜா பகதூர்கான் கருத்து
“மாடுகள் வேண்டுகோள் விடுத்தது போல பொருள் படுகிறது”
சகோ வேலவன்
“மாடுகளின் மேய்ச்சல் நிலங்களை கண்காணிக்க வேண்டுகோள். “ சகோ தல்லத்
“மேய்ச்சல் வகைகள்” என்ற தலைப்பில் ஒரு சிறிய அறிவியல் கட்டுரை எழுதியிருந்தார் சகோ ரவிராஜ்
அனைவருக்கும் நன்றி, வாழ்த்துகள்
இந்தப் பதிவின் நோக்கம் யாரையும் குறை சொலவதில்லை
செய்திகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதே என் வேண்டுகோள்
அதுவும் பாமர மக்களுக்கும் செய்தித்தாளை அறிமுகம் செய்த தமிழ் நாளிதழில் தெளிவான செய்திகளை எதிர் பார்ப்பது இயல்பானதுதானே
வந்த செய்தி முழுதாக
“மழை நேரத்தில் மாடுகள் மேய்ச்சல் நிலங்களை கண்காணிக்க வேண்டுகோள்”
அது
“மழைக் காலத்தில் மேய்ச்சல் நிலங்களை விவசாயிகள் பராமரிக்க வேண்டும் “
என்றிருந்தால் தெளிவாகப் புரியும் என்பது என் கருத்து
ஒருவேளை ஆங்கிலதிலிருந்து மொழி பெயர்ப்பதால் வந்த தெளிவின்மையாக இருக்கலாம்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௩௦௭௨௦௨௩
23072023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment