Saturday, 8 July 2023

தமிழ் (மொழி)அறிவோம் எடுக்கவோ /கோக்கவோ முத்தைத்தரு பத்தித் திருநகையென”

 





தமிழ் (மொழி)அறிவோம்

08072023 சனிகிழமை (இ)
எடுக்கவோ கோக்கவோ
கர்ணன் படத்தில் வரும்இலக்கியத் தரம் வாய்ந்த இந்த வரி துரியோதனின் உயர் பண்புகளை – நண்பனின் மேலும் தன துணைவியின் மீதும் கொண்டுள்ள 100% நம்பிக்கையை --வெளிப்ப்படுத்துகின்றது
இந்தியன் படத்தில் இதே வரி ஒரு நகைச்சுவை காட்சியில் வரும்
அதுபோல
“முத்தைத்தரு பத்தித் திருநகையென”
என்ற வரி –
நமக்கு திருப்புகழ், அருணகிரிநாதர் , திரைப் பாடகர் டி எம் சௌந்தரராஜனை நினைவூட்டும் இந்த வரி--
வேறொரு திரைப்பாடலில் அதே பாடகர் குரலில் இடம் பெற்றிருக்கிறது (நகைச் சுவையாக அல்ல )
அது என்ன பாடல் ? என்ன படம் ?
விடை
படம் அம்பிகாபதி
பாடல் வடிவேலும் மயிலும் துணை
கம்பம் மகன் அம்பிகாபதி
சோழமன்னன் மகள் அமராவதி
இருவருக்குமிடையே பாசம் நேசம் காதல்
வழக்கம்போல் மன்னன் எதிர்ப்பு
இன்பச் சுவை கலக்காமல் தொடர்ந்து நூறு பாடல்கள் இறைவன் மீது ஒரே முறையில் அம்பிகாதி பாடினால் அமராவதியை மணமுடிப்பது பற்றிப் பார்க்கலாம் என மன்னன் ஆணை
அதை ஏற்று அரசவையில் 100 பக்திப்பாடல்களை தொடர்ந்து அம்பிகாபதி பாட திரை மறைவில் இருந்து அமராவதி எண்ணிக் கொண்டிருக்க இறைவணக்கப் பாடலை தவ்றாக எண்ணிக்கையில் சேர்க்க 100 பாடிவிட்டான் என்ற களிப்பில் அமராவதி திரை மறைவை விட்டு வெளியே வர அம்பிகாபதி தன்னை மறந்து இன்பச் சுவையில் பாட
போட்டியில் தோற்றதால் கம்பனும் அம்பிகாபதி யும் சோழ நாட்டை விட்டு வெளியேற்றப் படு கிறார்கள்
இந்தத் துன்பியல் காதல் கதை உண்மையா வெறும் கற்பனையா என்பதைத் தாண்டி மிக அருமையான இலக்கியத் தரப் பாடல்கள் இதில் கிடைக்கின்றன அதில் ஒன்றுதான்
முத்தைத்தரு பத்தித் திருநகையென”
என்ற வரி வரும் பாடல்
வடிவேலும் மயிலும் துணை
என்று துவங்கும் சற்று நீளமான அழகிய பாடல்
அதில் ஒரு பகுதி மட்டும் :
தாப மிகு வெப்பு வாதமொடு
பித்த மானபிணி மொய்த்து உடம்போடு
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
சாரும் உயிர் துன்ப சாகரமுழன்று
சாதனை இழந்து வருந்தா முன்
தாளை யளித்திட வேணு மெனத்துதி
பாடருணைகிரி நாதனழைத்திட
தயவுடன் இசைந்து அருள் மழை பொழிந்து
---முத்தைத்தரு பத்தித் திருநகையென----
முதலடி உரைத்த தழைத்த கருணையை
நினைந்து நினைந்து கவி மலர் தொடுத்த
தமிழ் மாலை தனைச் சூடுவான்
அமராவதியைப் பார்த்ததும் பாடிய இன்பச் சுவைப்பாடல்
சற்றே சரிந்த குழலே துவளத் தரள வடம்
துற்றே அசைய குழையூசலாட... ஆ... ஆ...
துவர் கொள் செவ்வாய்
நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேரிருக்க தலையலங்காரம் புறப்பட்டதே
தலையலங்காரம் புறப்பட்டதே...
அம்பிகாபதி - அமராவதி கதையே கற்பனை என்பதால் இப்பாடலை எழுதியவர் யார் என்ற தகவல் கிடைக்கவில்லை.
இப்பாடல் ஒரு அருமையான கட்டளைக் கலித்துறை ஆகும்.
என்பது முகநூலில் பார்த்தது
(அப்படி என்றால் என்ன என்று இனிமேல்தான் பார்க்க வேண்டும் )
இந்த சற்றே சரிந்த பாடலை இணையத்தில் தேடும்போது கண்ணில் பட்டதுதான்
முத்தைத்திரு வரி உள்ள வடிவேலும் பாடல்
இது சினமாப் புதிர் என்று கருத்துத் தெரிவித்த சகோ தல்லத்
.
முயற்சி செய்த சகோ கணேச சுப்ரமணியம், சிராஜுதீன் அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
௦௭௦௭௨௦௨௩
08072023 சனிக்கிழமை (இ)
சர்புதீன் பீ

No comments:

Post a Comment