Sunday, 2 July 2023

நடந்தது என்ன ?








 நடந்தது என்ன ?

03072023 திங்கள்
ஒரு தயக்கம்
இந்தப்பதிவு தேவையா என்று
காரணம் கொஞ்சம் (கொஞ்சம்தான் )
A பதிவு
இதுவரை இல்லாதது ஓன்று
இருந்தாலும் வகுப்புகளில் பல பேச்சாளர்கள்
தகவல் பரிமாற்றம் (Communication ) என்பதை தெளிவாக விளக்க இந்தக் கதையை சொல்லியிருக்கிறார்கள்
நகைச்சுவைத் துணுக்காகவும் வந்திருக்கிறது
நம்மில் எல்லோரும் Adults தான்
எனவே புரிந்து கொண்டு அன்னப்பறவை போல் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்
(ப்பூ இதற்குத்தான் இவ்வளவு தயக்கமா என்ற ஒரு கருத்தும் வந்தாலும் வரலாம் )
போதும் முன்னுரை
இனி பதிவு
காளை மணி ஒன்பதுக்குள் இருக்கும்
அந்த மருத்துவ் மனைக்கு ஒரு ஆணும் பெண்ணும் வருகிறார்கள்
ஆணின் தலையில் பெரிய கட்டு
கட்டை மீறி கசியும் குருதி
மருத்துவத்தை துவங்கியபடி கேட்கிறார் மருத்துவர் “என்ன ஆச்சு “
பெண் ;” ஒன்றுமில்லை டாக்டர் வீட்டுக்குளேயே சரியாக பார்க்து கவனமாக நடக்காததால் தவறி விழுந்து விட்டார் “
மரு : “ இல்லையே ஒரு மரகட்டையால் பலமாகத் தாக்கியது போல் தெரிகிறதே “
பெண் :? ஆம் டாக்டர் அவர் விழுந்த வேகத்தில் என் கையில் இருந்த பூரிகட்டையில் நன்றாக மோதிக் கொண்டார்--------“
புரிந்து கொண்ட டாக்டர் மருத்துவத்தைத் தொடர்கிறார்
காலை மணி ஏழரை
அதே ஆணும் பெண்ணும் வீட்டில்
ராஜா, ராதா என்று பெயர் வைத்துக்கொள்வோம்
ராஜாவுக்கு காபி கொடுத்து விட்டு ராதா கொஞ்சம் தயங்கி நிற்கிறார்
அன்று விடுமுறை நாள்
எனவே வழக்கமான காலை பரபரப்பு இல்லை
என்ன ராதா என்பது போல் தலை அசைக்கிறார்
“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் “
“ அதுதான் பத்து வருஷமா பெசிக்கிட்டுத்தானேஇருக்கோம் இப்ப என்ன தயக்கம் - வா உட்கார் நிதானமாகச் சொல் “
“ ஒன்னுமில்லே எதிர் வீட்டில் குடி வந்திருப்பவர்கள் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள்
அழகான ஜோடி “
“ எனக்கு அதெல்லாம் பார்க்கும் வழக்கம் கிடயாது
சரி அதில் உனக்கென்ன பிரச்சினை ?”
“ ஒண்ணுமில்லை -------------
அவர் தினமும் ஆபிசுக்குப் போகும்போது அந்தப் பெண்ணை அன்பாக கட்டித் தழுவி விட்டுப் போகிறார்
அது போல நீங்களும் ---------“
இதற்கு என்ன பதில்?
உங்கள் ஊகம் என்ன ?
ராதா எதிர் பார்த்த பதில் என்ன ?
ராஜா சொன்னது என்ன ?
பலரும் இந்தக் கதையை படிதிருக்கலாம்
இல்லாவிட்டாலும் எளிதான வினா ,விடைதான் ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
03072023 திங்கள்
சர்புதீன் பீ

Like
Comment
Share

No comments:

Post a Comment