Monday, 3 July 2023

நடந்தது என்ன ? பகுதி 2 நிறைவுப் பகுதி





 நடந்தது என்ன ? பகுதி 2

நிறைவுப் பகுதி
04072023 செவ்வாய்
ஒரு தயக்கம்
இந்தப்பதிவு தேவையா என்று
காரணம் கொஞ்சம் (கொஞ்சம்தான் )
A பதிவு
இதுவரை இல்லாதது ஓன்று
இருந்தாலும் வகுப்புகளில் பல பேச்சாளர்கள்
தகவல் பரிமாற்றம் (Communication ) என்பதை தெளிவாக விளக்க இந்தக் கதையை சொல்லியிருக்கிறார்கள்
நகைச்சுவைத் துணுக்காகவும் வந்திருக்கிறது
நம்மில் எல்லோரும் Adults தான்
எனவே புரிந்து கொண்டு அன்னப்பறவை போல் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்வோம்
(ப்பூ இதற்குத்தான் இவ்வளவு தயக்கமா என்ற ஒரு கருத்தும் வந்தாலும் வரலாம் )
போதும் முன்னுரை
இனி பதிவு
காலை மணி ஒன்பதுக்குள் இருக்கும்
அந்த மருத்துவ் மனைக்கு ஒரு ஆணும் பெண்ணும் வருகிறார்கள்
ஆணின் தலையில் பெரிய கட்டு
கட்டை மீறி கசியும் குருதி
மருத்துவத்தை துவங்கியபடி கேட்கிறார் மருத்துவர் “என்ன ஆச்சு “
பெண் ;” ஒன்றுமில்லை டாக்டர் வீட்டுக்குளேயே சரியாக பார்க்து கவனமாக நடக்காததால் தவறி விழுந்து விட்டார் “
மரு : “ இல்லையே ஒரு மரகட்டையால் பலமாகத் தாக்கியது போல் தெரிகிறதே “
பெண் :? ஆம் டாக்டர் அவர் விழுந்த வேகத்தில் என் கையில் இருந்த பூரிகட்டையில் நன்றாக மோதிக் கொண்டார்--------“
புரிந்து கொண்ட டாக்டர் மருத்துவத்தைத் தொடர்கிறார்
காலை மணி ஏழரை
அதே ஆணும் பெண்ணும் வீட்டில்
ராஜா, ராதா என்று பெயர் வைத்துக்கொள்வோம்
ராஜாவுக்கு காபி கொடுத்து விட்டு ராதா கொஞ்சம் தயங்கி நிற்கிறார்
அன்று விடுமுறை நாள்
எனவே வழக்கமான காலை பரபரப்பு இல்லை
என்ன ராதா என்பது போல் தலை அசைக்கிறார்
“உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் “
“ அதுதான் பத்து வருஷமா பேசிக்கிட்டுத்தானேஇருக்கோம் இப்ப என்ன தயக்கம் - வா உட்கார் நிதானமாகச் சொல் “
“ ஒன்னுமில்லே எதிர் வீட்டில் குடி வந்திருப்பவர்கள் புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள்
அழகான ஜோடி “
“ எனக்கு அதெல்லாம் பார்க்கும் வழக்கம் கிடயாது
சரி அதில் உனக்கென்ன பிரச்சினை ?”
“ ஒண்ணுமில்லை -------------
அவர் தினமும் ஆபிசுக்குப் போகும்போது அந்தப் பெண்ணை அன்பாக கட்டித் தழுவி விட்டுப் போகிறார்
அது போல நீங்களும் ---------“
இதற்கு என்ன பதில்?
உங்கள் ஊகம் என்ன ?
ராதா எதிர் பார்த்த பதில் என்ன ?
ராஜா சொன்னது என்ன ?
பலரும் இந்தக் கதையை படிதிருக்கலாம்
இல்லாவிட்டாலும் எளிதான வினா ,விடைதான்
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுபவர்கள்
சகோ
நெய்வேலி ராஜா பகதுர்கான்
முதல் சரியான விடை
அவர் அனுப்பிய விடை
---தன்னிடம் தன் கணவன் அதைப் போல நெருக்கமாக இருக்க வேண்டும் என மனைவி ஆசைப்பட ...மனைவி கையில் இருந்த பூரிக்கட்டையில் மோதி இரத்தக் காயம் ஏற்படக் காரணமான கணவனின் பதில்..
" எனக்கும் ஆசையாத்தான் இருக்கு..ஆனா அதுக்கு அந்தப் பொண்ணும் அவ கணவனும் சம்மதிக்கனுமே ! "
( இதை ஏதோ ஒரு திரை நகைச்சுவைக் காட்சியில் எப்போதோ கேட்ட மாதிரி இருக்கு ! )----
ஜெயராம கிருஷ்ணன்
முயற்சித்த சகோ அஷ்ரப் ஹமீதாவுக்கு நன்றி
பூரிக்கட்டை குறிப்பு ஓன்று போதும் சரியான விடை காண
இருந்தும் நிறைய விடைகள் வரவில்லை
சரி communication இதில் எங்கு வருகிறது ?
தகவல் பரிமாற்றம் ( சுருக்கமாக த ப ) எனும் communication
- உலகம் இதிலே அடங்குது , இது இல்லாமல் உலகம் இயங்காது
வீட்டிலே ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வது முதல் இறைவன் இறை தூதருக்கு அனுப்பும் வஹி வரை அனைத்தும த ப தான்
மேலாண்மை படிப்பில் மிக முக்கியமான இது பற்றி நிறையாவே சொல்லலாம்
இப்போது சுருக்கமாக எல்லோருக்கும் தெரிந்த புரிந்த கட்செவி எனப்படும் what sap ஐ எடுத்துக்காட்டாக வைத்து ஒரு விளக்கம்
A என்பவர் B என்பவருக்கு தனக்கு உடனடியாக சற்று பணம் தேவை , அனுப்பி வை என்று செய்தி அனுப்புகிறார்
இரண்டு பக்கமும் கைபேசி, இணைப்பு கோபுரங்கள் எல்லாம் சரியாக இருந்தால் A யின் செய்தி B யின் கைபேசிக்குப் போய் சேர்ந்து விடும்
B செய்தியைத் திறந்தால் அவர் படித்தாலும் படிக்காவிட்டாலும் ஒரு நீல நிறக்கோடு Blue Tick வந்து விடும்
B அதைப் படிக்க வேண்டும்,
படித்தது அவர் மனதில் பதிய வேண்டும் , புரிந்து கொள்ள வேண்டும்
புரிந்து கொண்டதன் அறிகுறியாக ஓன்று அவர் பணம் அனுப்ப வேண்டும்
அல்லது இன்ன காரணத்தால் கொடுக்க முடியவில்லை என்று Aக்கு B தகவல் தெரிவிக்கவேண்டும்
இப்படிச் செய்தால்தான் த் ப முழுமை பெறுகிறது
இதில் ஏதாவது ஒரு நிலையில் தடங்கள் ஏற்பட்டாலும் செய்தி முழுமை அடையாது
ராதா ராஜாவிடம் சொன்னது ஒரு சிறிய எளிய செய்திதான்
நேரடியாக இருவரும் அருகிலிருந்து பேசிக்கொள்வதால் ராஜாவுக்குக் காதில் தெளிவாக விழுந்திருக்கும்
ஆனால் ராஜா மனதில் வேறு ஒரு கற்பனை, காட்சி, ஆசை
எனவே செய்தியை தவறாகப் புரிந்து கொண்டதனால்
த ப முழுமை அடையாமல் தடை பட்டு விட்டது
விளைவு ------தலையில் பெருங்காயம் ------ மருத்துவ மனை
கழுத்தில் சுளுக்குக்கு வைத்தியர்
“படியில் எண்ணெய் தடவி தலை வைத்துப் படுங்கள்”
என்று சொன்னதில்
அளக்கும் படிக்குப் பதில் வாசல் படியில் எண்ணெய் தடவி வீட்டில் உள்ளவர்கள் வழுக்கி விழுந்தது இன்னொரு எடுத்துக்காட்டு
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
04 072023 செவ்வாய்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment