தமிழ் (மொழி) அறிவோம்
வ்ண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
30 072023 ஞாயிறு
அதில் மிகப் பரவலாய் அறியப்பட்ட பாடல்
பாடலின் சில வரிகளில் வரும்
சில சொற்கள் மட்டும் கீழே தரப்படுகின்றன
“உண்மை இல்லை ------------------------
வெண்மை இல்லை-----------------------“
வரிகள் எவை,
பொருள் என்ன ,
பாடல்எது ,
இலக்கியம் எது
இயற்றியவர் யார் ?
வினா பெரிது போல் தோன்றினாலும்
மிக எளிய , பலருக்கும் தெரிந்த விடை
மிக எளிய , பலருக்கும் தெரிந்த விடையைப் பார்க்குமுன் வந்த ஒரு மாறுபட்ட விடையைப் பார்ப்போம் :
“உண்மை இல்லை கொடுமை இல்லை வெண்மை இல்லை பரவலாய் இல்லை"பாடல் என்பது "
கடவுள் விண்வெளி" என்ற இலக்கியத்தில் இயற்றியவர் எழுதியுள்ளார்
கிருந்தாவை விரும்பும் படைப்புக்குரிய பாடல். இந்த பாடல் இறைவனை புகழ்வதற்கு உதவுகின்றது.இந்த பாடல் இதுவரை அகர முதற்களில் அமைந்திருக்கும் குறள் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது தமிழ் இலக்கிய வரலாறுக்கு மிகுந்த முக்கியமான பாடல்களில் ஒன்று ஆகும்.”
உண்மை, வெண்மை என்ற சொற்கள் வந்தாலும்
இதுவரை நான் அறியாத, கேள்விப்படாத ஓன்று.
“கிருந்தா” போன்ற புரியாத சொற்கள்
எனவே இது சரியான விடை இல்லை
அனுப்பிய சகோ ராஜாத்திக்கு நன்றி
அவர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள்
முயற்சி தொடர வாழ்த்துகள்
இந்த பாடல் பற்றி செய்தி அறிந்தவர்கள் தெரிவிக்கலாம்
இனி விடை
“வண்மை இல்லை
ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை
ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை
பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை
பல் கேள்வி மேவலால்”
கம்ப இராமாயணம் பாலகாண்டம் பாடல் 84
கம்பராமாயணத்தில் அயோத்தி நகரின் செழுமை பற்றிக் கம்பன் கூறும் அழகிய அர்த்தமுள்ள பாடல்
அயோத்தியில் வறுமை என்பதே இல்லை என்பதால் கொடைக்கு அவசியமில்லை;
பகைவர் எவரும் இல்லை என்பதால் துணிவுக்கும் வேலையில்லை;
பொய்யுரை ஏதும் இல்லை என்பதால் உண்மைக்கும் பொருளில்லை;
மிக்க கேள்வியறிவு பொருந்தி இருப்பதால் அறியாமை என்பதும் இல்லை.
(வெண்மை - அறியாமை என்ற பொருளில் வருகிறது -)
இல்லை இல்லை என்று சொல்லியே அயோத்தியில் இருக்கும் பெருமைகளை எடுத்துரைக்க கம்பன் கையாண்ட எதிர்மறை அலகில் நேர்மறை அர்த்தம் சொல்லும் புலமை எல்லோர்க்கும் எளிதில் கை கூடாத ஏற்றமிகு கவித்திறன் (சகோ சோமசேகர்)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
:
சகோ
தல்லத்
முதல் சரியான விடை
ஆ ரா விஸ்வநாதன்
இளங்கோவன் நரசிம்மன்
சோம சேகர்
வேலவன்
சிராஜூதீன்
அஷ்ரப் ஹமீதா
ஹசனலி
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி
இறைவன் நாடினால் விடை நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௩௦௦௭௨௦௨௩
30072023ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment