திருமறை குர்ஆன் 4:142
07072023 வெள்ளி
“-----------மிகக் குறைந்த அளவேயன்றி அவர்கள் இறைவனை நினைவு கூர்வதில்லை”
இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக –
சுராஹ் அன்னிசா (4) வசனம் 142
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் இறைவனை வஞ்சிக்க நினைக்கின்றனர்; ஆனால் அவன் அவர்களை வஞ்சித்துவிடுவான்;
தொழுகைக்கு அவர்கள் தயாராகும் பொழுது சோம்பலுடையோராகவே நிற்கிறார்கள் –
மனிதர்களுக்குத் (தங்களையும் தொழுகையாளியாக்கி) காண்பிப்பதற்காக (நிற்கிறார்கள்);
இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் இறைவனை நினைவு கூர்வதில்லை. (4:142.)
தொடர்ந்து
“இறை நம்பிக்கைக்கும் , நம்பிக்கை இன்மைக்கும் இடையில் தடுமாறி நிற்கிறார்கள --------.” (4:143.)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
கதீப் மாமுனா லெப்பை (Khatheeb Mamuna Lebbai )
முதல் சரியான விடை
ஷர்மதா
ஹசன் அலி
விளக்கம் ;
பெருமானார் நபி ஸல் அவர்கள் காலத்தில் ஐந்து வேளைத் தொழுகையும் பள்ளிவாசலில் கூட்டாக தொழுவது கட்டாயமாக ,முஸ்லிம் என்பதற்கு ஒரு அடையாளமாக இருந்தது
தொடர்ந்து கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டு விலகி விட்டதாகக் கருதப்படும்
உண்மையாளர்கள் நேரத்தே பள்ளிக்கு வந்து தொழுகையில் முழு ஈடுபாட்டோடு கலந்து கொள்வார்கள்
அப்படி இல்லாதவர்களுக்கு தொழுகை ஒரு பெரிய பாரமாக
தண்டனையாக் இருந்தது
வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு வந்து தொழுகை நிறைவேறிய அடுத்த நொடி ,விடுதலை அடைத்தது போல் துரிதமாக பள்ளியை விட்டு வெளியேறி விடுவார்கள்
இறைவனை வஞ்சிக்க எண்ணும் அவர்களை அவன் வஞ்சித்துவிடுவான்;
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
18 துல்ஹஜ் (12) 1444
07072023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment