Tuesday, 18 July 2023

நயத்தக்க நபித் தோழர்கள் 13 பர்ரா பின் மாலிக் ரலி அன்ஹு

 




நயத்தக்க நபித் தோழர்கள் 13

பர்ரா பின் மாலிக் ரலி அன்ஹு
19072023 புதன்
“ஒரு கேடயதுக்குள் என்னை வைத்து உங்கள் ஈட்டி முனைகளால் தூக்கி அந்தத் தோட்டத்துக்குள் போட்டு விடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் “
மனித வெடிகுண்டு என்பதுபோல் இப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுத்தது யார்?
வீரத்தின் விளை நிலம்
உண்மையான வீரத்துக்கு எடுத்துக்காட்டு
தன்னந்தனியாக நூறு எதிரிகளை வீழ்த்தியவர்
துவா ஒப்புக்கொள்ளபப்படக் கூடியவர்
அழகிய கவிதை எழுதி இனிய குரலில் அதை ஓதக்கூடியவர்
அப்படி ஓதுவதைக் கேட்டு விலங்குகளும் மயங்கி நிற்குமாம்
தன முடிவு போரில் வீர உயிர்த்தியாகமாகவே இருக்கவேண்டும் என்று இறைவனிடம் துவா கேட்டு அப்படியே ஷஹீத் ஆனவர்
இப்படிப் பன்முக சிறப்புகள் கொண்ட பர்ரா பின் மாலிக் ரலி அன்ஹு தான் மனித வெட்குண்டுபோல மாறத் துணிகிறார்.
அது பற்றி
நபி அவர்களின் மறைவுக்குப்பின் முளைத்த பல போலி நபிகளில் ஒருவன் ஆன முசைலமா வை எதிர்த்துப் போர்
அதில் வீர்தீரமாக்ப் போர்புரிகிறார் பர்ரா பின் மாலிக்
எதிரிப்படை மொத்தமும் ஒரு தோட்டத்துக்குள் போய் ஒளிந்து கொள்கிறது
மிக உயரமான கதவுகள் கொண்ட அந்தத் தோட்டத்துக்குள் நுழைந்தால்தான் எதிரிகளை வீழ்த்த முடியும்
முஸ்லிம்கள் செய்வது அறியாது திகைத்து நிற்கிறார்கள்
அப்போதுதான் பார்ரா தனி ஒருவனாக உள்ளே நுழையத் துணிகிறார்
அவர் சொன்னபடி கேடயத்தில் கட்டி அவரைத் தூக்கிப்போட
விழுந்த ஓசை கேட்டு வந்த எதிரிகளை அவர்கள் சுதாரிப்பதற்குள் சரசரவென்று வீழ்த்தினார்
போரிட்டபடியே தோட்டத்துக் கதவை திறந்து விட முஸ்லிம் படையினர் உள்ளே நுழைய, எதிரிகள் முழுமையாக வீழ்த்தப் படுகிறார்கள்
இந்த வெற்றிக்கான முழுப் பெருமையும் பர்ராவையே சாரும்
இவர் படைத்தளபதியாக நியமிக்கபட்டால் தன் அளவுக்கு வீரதீரத்தை தம் படை வீரர்களிடம் எதிர்பார்ப்பார்
எங்கே ஏறச் சொல்லுவார், குதிக்கச் சொல்லுவார், ஓடச் சொல்லுவார் என்று தெரியாது
இதனால் படை வீரர்களுக்கு சிரமம் ஏற்படும் என்று எண்ணி இவரைத் தளபதியாய் நியமிப்பதை தவிர்த்தார் கலிபா உமர்
பாரசீகப் போரில் நடந்த ஒரு நிகழ்வு இவரது வீரதீரத்துக்கு இன்னுமொரு சான்று
பாரசீகர்கள் ஒரு கோட்டைக்குள் ஒளிந்து கொண்டு பழுக்கக் காய்ச்சிய இரும்புச் சங்கிலிகளில் இணைக்கப்பட்ட பெரிய கொக்கிகளை வெளியே எறிந்தார்கள்
கொக்கி யார் மேல் படுகிறதோ அவர்களை அப்படியே உள்ளே தூக்கி விடலாம்
அப்படித் தூக்கப்பட்டவர்களில் ஒருவர் பர்ராவின் உடன் பிறப்பு அனஸ்
சற்றும் தயங்காமல் மளமளவென்று கோட்டைச் சுவரில் விறுவிறுவென்று ஏறி , சங்கிலியைப் பிடித்து கொக்கியில் இருந்து அனசை விடுவித்து விட்டார்
ஆனால் பர்ராவின் கை
பழுக்கக் காய்ச்சிய இரும்பை பிடித்ததால் உள்ளங்கையில் வெறும் எலும்புகளும் நரம்புகளும் மட்டுமே மிஞ்சின
தன்வாழ்நாள் முழுதும் கழுத்தில் இருந்து கால் வரை விழுப்புண் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு போர் புரிந்திருக்கிறார்
அவருடைய துவாவை ஏற்றுக் கொண்டு இறைவன் அவருக்கு வீரத் தியாக மரணத்தைக் கொடுத்து சஹீதாக்கி விட்டான்
இப்படி எத்தனயோ அதிகம் அறியப்படாத நபித் தோழர்களின் வீரத்திலும் தியாகத்திலும் தான் இஸ்லாம் வேர் விட்டு விழுதுகள் பரப்பி தழைத்து வளர்ந்தது , வளர்க்கிறது ,வளரும்
இறைவன் நாடினால்
புத்தாண்டில் ஒரு
புதிய தலைப்பில்
சிந்திப்போம்
19072023 புதன்

சர்புதீன் பீ

No comments:

Post a Comment