Tuesday, 4 July 2023

இலக்கணம் மாறுதோ

 




இலக்கணம் மாறுதோ

0507 2023 புதன்
புறாக்கள் பற்றிய செய்தி ஓன்று மங்கலப்பட்டி வங்கிக் கிளையில் பணியில் இருந்தபோது காதில் விழுந்தது
அந்த ஊரில் விவசாயி ஒருவர் தன் வீட்டை விற்று விட்டு வேறு வீட்டுக்கு குடி போனார்
அவர் புது வீடு குடி போக இரண்டு நாள் இருக்கையில் அவர் வளரத்த நூற்றுக் கணக்கான புறாக்கள் அந்தப் புதுவீட்டுக்குப் பறந்து போய் விட்டன
புறாக்களுக்கு சொன்னது யார் ? புது வீட்டைக் காண்பித்த்து யார் ?
இன்னொரு செய்தி நான் நெல்லை பேட்டையில் கேள்விப் பட்டது
வெளியூரில் வேலை பார்த்த ஒருவர் வார விடுமுறையில் வீட்டுக்கு வருவார்
அவர் வளர்த்த நாய் ஓன்று அவர் வரும் நேரத்துக்கு சரியாக் பேருந்து நிறுத்ததிற்கு வந்து வீடும்
பல ஆண்டுகளாக நடந்த நிகழ்வ இது
எதிர்பாராத விதமாக வெளியூரில் அவர் மரணித்து விட, அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்
அதலிருந்து அந்த நாய் பேருந்து நிறுத்தத்துக்குப் போவதில்லை
இந்த இரண்டுமே அரிய நிகழ்வுகளாகப் பேசப்பட்டன
அண்மையில் செய்தித் தாள்/ தொலைகாட்சியில் கண்ட ஒரீரு நிகழ்வுகள் இன்னும் வியப்பானவை
இரும்பை எலி தின்று விட்டதாக சொன்னவர் பற்றி தெனாலி ராமன் கதையில் படித்திருக்கிறோம்
ஆனால்
காவல் நிலையத்தில் “பாதுகாப்பாக” வைத்திருந்த 20 கிலோ கஞ்சாவை எலி தின்று விட்டதாம்
சரி எலிகளுக்கும் மனிதர்களைப்போல் கஞ்சா மயக்கம் தேவை போலும் என்று சொல்லிக்கொள்ளலாம்
ஆனால் பணத் தேவை என்றால் என்ன சொல்வது !
ஒரு பழக் கடையில் கடையைப் பூட்டும்போது கல்லாவில் வைத்து விட்டுப் போகும் பணம் காணாமல் போகிறது
தொகை சிறியதுதான் –
ஆனால் இது தொடர்கதை ஆகி விட்டது
மேலும் பழம் எதுவும் திருடு போகவில்லை , பூட்டை உடைத்து யாரும் உள்ளே வந்தது போலும் தெரியவில்லை
என்னதான் நடக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கண்காணிப்பு காமிராவை நிறுவுகிறார் கடைக்காரர்
நம்ப முடியாத காட்சி ஓன்று அதில் பதிவாகி இருக்கிறது
ஒரு எலி வந்து கல்லாப்பெட்டியை (ஒரு இழுப்பறை தான் கல்லாபெட்டி ) அலுங்காமல் திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து வேறு ஒரு இடத்தில் கொண்டு போய் சேர்க்கிறது
அந்த இடத்தில் பல நாட்களாக சேர்த்த பணம் இருக்கிறது
வியப்புக்கு மேல் வியப்பு ---எலியின் பல் பட்டு கிழிந்து விடாமல் பணத்தை கவனமாகக் கையாள்கிறது
கஞ்சா போன்ற போதைப் பொருட்களை தொடர்ந்த்து சாப்பிட பணம் தேவைப்படுமோ ?
அடுத்து மகிழ்ச்சியும் வருத்தமும் தரும் ஒரு செய்தி
யானை பற்றி
கோவை அருகில் துணைவன், துணைவி ஒரு குழந்தை என ஒரு சிறு குடும்பம்
கோவிலுக்கு அருகில் போகும்போது எதிரே ஒரு யானை வருகிறது
யானையைப் பார்த்த அதிர்ச்சியில் பெண் ஒரு பள்ளத்தில் விழுந்து விடுகிறார்
குழந்தை அச்சத்தில் அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறது
ஆணை நோக்கி வந்த யானை குழந்தையை தன் துதிக்கையால் கீழே இறக்கி விட்டு விட்டு ஆணை மட்டும்
மிதித்துக் கொன்று விடுகிறது
இதற்கெல்லாம் என்ன விளக்கம் சொல்வது ?
நிறைவு செய்யுமுன் மகிழ்ச்சியான செய்திகளைப்ப் பார்ப்போம்
கோயில் திருவிழாக்களில் , திருமண ஊர்வலங்களில் குதிரை நடனமாடுவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் பார்த்ததில்லை
அவை நாட்டியக் குதிரை என்றே சொல்லப் படுகின்றன
(குதிரை நடனபுரம் என்றே ஊர் ஓன்று இருப்பதாய் ஒரு மங்கலான நினைவு )
ஆனால் காவல் துறைக் குதிரை ஓன்று காவல் பணிக்காக சென்ற இடத்தில் அருகில் உள்ள கோயிலில் ஒலிக்கும் நாதஸ்வர இசைக்கேற்ப தலையை ஆட்டி ரசித்தது ஒரு அண்மை நிகழ்வு
குரங்கு நாய்குட்டியை தூக்கிக் கொண்டு போய் கொஞ்சி விளையாடி முத்தம் கொடுத்து தலையில் பேன் பார்ப்பது போல் பாவனை செய்வது இன்னொரு அண்மைச் செய்தி
செயற்கை நுண்ணறிவை பெர்ய அளவில் வளர்க்க மனித முயற்சி ஒருபுறம்
இருக்கும் இயற்கை அறிவு அதீதமாக வளரும் நிகழ்வு இன்னொரு புறம்
இயற்கையும் செயற்கையும் போட்டிபோடும் இந்தப் பயணத்தில் எவரை எவர் வெல்லுவார் ?
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
05072023 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment