திருமறை குரான் 2:126,14:37
14072023 வெள்ளி
“---------கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ உணவும் அளிப்பாயாக!"
இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக
விடை
வசனம் 2::126, 14: 37 என ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வருகிறது
இது குர்ஆனில் மிக இயல்பான ஓன்று
திரும்பத் திரும்ப சொல்லி சில செய்திகளை மனதில் நன்றாகப் பதியுச் செய்யப்படுகிறது
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலிருந்தும்,புனிதமான உன் இல்லத்தின் (கஃபாவின்) அருகே, வறண்ட (இப்)பள்ளத்தாக்கில், எங்கள் இறைவனே! - தொழுகையை அவர்கள் நிலை நிறுத்தாட்டுவதற்காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எனவே மக்களில் ஒரு தொகையினரின் இதயங்களை அவர்கள்பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ உணவும் அளிப்பாயாக!"(14:37)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஷ்ர்மதா –முதல் சரியான விடை
சிராஜுதீன்
ஹசன் அலி
பீர் ராஜா
விளக்கம்
நபி அவர்களின் இந்தக் கோரிக்கையை இறைவன் ஏற்றுக்கொண்டான்
இந்த சுராஹ் அருளப்பட்ட காலத்தில் அரபு தேசம் முழுதிலிருந்தும் மக்கள் ஹஜ், உம்ராவுக்கு வந்தார்கள்
இன்றோ உலமுழுதிலும் இருந்து லட்சக் கணக்கில் மக்கள் ஹஜ், உம்ராவுக்குக் கூடுகிறார்கள்
பரந்த வரண்ட பாலை நிலம் . விலங்குகளுக்குத் தேவையான புல்பூண்டு கூட முளைக்காது
ஆனால் ஆண்டு முழுதும் எல்லாப் பருவங்களிலும் கூடும் மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருட்களும் கனி வகைகளும் இறைவன் அருளால் குறைவின்றிக் கிடைக்கின்றன
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
25 துல்ஹஜ்(12) 1444
14072023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment