புதுப்பொலிவில்---
சென்னை
0907 20 23 ஞாயிறு (இ)
சிங்காரச் சென்னைக்கு
நான் வந்தது வங்கி முது நிலை மேலாளராக. சென்னைக்கு மாற்றல் வேண்டி பல வங்கி
அதிகாரிகளும் ஊழியர்களும் தவமாய்த் தவமிருப்பதுண்டு. ஆனால் வாணியம்பாடியில்
பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு மிக எளிதாக சென்னை பெரம்பூர் கிளைக்கு மாறுதல்
கிடைத்தது இறைவன் அருள்
பெரம்பூர் கிளையில்
பணியில் சேர்ந்து விட்டு வீடு தேட ஆரம்பித்தேன். அடுக்கக குடியிருப்பு
(அபார்ட்மென்ட்ஸ்) எனக்குப் பிடிக்காத ஒன்று. சென்னையில் தனி வீடு கிடைப்பது
அவ்வளவு எளிதல்ல. அப்படிக் கிடைத்தாலும் வங்கியில் கொடுக்கும் வாடகையை விட மிக
அதிகமாக வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.. அதற்கெல்லாம் மேல் பத்து மாத வாடகையை
முன் பணமாகக் கேட்பார்கள் என்றெல்லாம் கூறப்பட்டது
சரி அடுக்ககங்கள் நல்லதாக
அமைந்தால் குடியேறி விடலாம்
என்றெண்ணி பல இடங்களில் போய்ப் பார்த்தேன். ஆனால் எதுவுமே மனதுக்குப்
பிடிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து வாணியம்பாடிக்கு எனக்கு பதிலாக
மாறுதல் பெற்று வந்த முது நிலை மேலாளர் பாஸ்கர் தன வீட்டைப் போய்ப் பார்க்கும்படி
சொன்னார்.
கண்டவுடன் காதல் என்பது
போல் வீட்டைப் பார்த்த உடனே எனக்கு மிகவும் பிடித்துப் போயிற்று .
மிக அழகான விசாலமான வசதியான தனி வீடு., வாசலிலே பாரிஜாத மரம் இனிமையான
மெல்லிய நறுமணத்தைப் பரப்பி வரவேற்பளித்தது.. பூத்துக்குலுங்கும் மாமரம் வாழை
மரத்துடன் அழகிய தோட்டம்..மாநகராட்சி நீர் , கிணறு, ஆழ்துளை என தாராளமாகத் தண்ணீர்.
அதற்கெல்லாம் மேல்
வங்கிக்கிளைக்கு மிக அருகாமையில் அமைந்திருந்தது அந்த வீடு. ஆனால் எனக்கு மனதில்
ஒரு தயக்கம். பாஸ்கர் உணவுப்பழக்கம் போன்ற பலவற்றில் என்னில் வேறுபட்ட இனத்தைச்
சேர்ந்தவர் ,எனக்கும்
அவருக்கும் ஒத்து வருமா என்ற ஐயம் தோன்றியது..
இதை அவரிடமே நேரடியாகத்
தெரிவித்தேன். அவர் “எனக்கு உங்களுக்கு வீட்டைக் கொடுப்பதில் எனக்கு எந்த வித
தயக்கமும் இல்லை. என் இளமைப்பருவத்தில் பல ஆண்டுகள் உங்கள் சமூகத்தினரிடையே
கழித்திருக்கின்றேன். உங்களுக்குத் தயக்கம் ஏதும் இல்லை என்றால் இப்போதே நீங்கள்
குடியேறலாம் “ என்று பச்சைக் கொடி காட்டி விட்டார்.
நாங்கள் அங்கு
குடியிருந்த ஒரு ஆண்டு காலத்தில் ஒரே ஒரு முறைதான் அவர் தன துணைவியுடன் வீட்டைப்
பார்க்க வந்தார். எங்களை விட நீங்கள் வீட்டை அழகாகவும் சுத்தமாகவும்
வைத்திருக்கிரீர்கள் என்று சான்றிதழ் வழங்கிச் சென்றார்.
நாங்கள் என்பது நானும்
என் துணைவியும்தான். மகளுக்குத் திருமணம் ஆகி பல ஆண்டுகள் கழிந்து விட்டன . மகனும்
கடலூர் ஆயுள் காப்பிடு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிபுரிகிறான். அவ்வப்போது வந்து
போவான்..
சென்னையில் நாங்கள்
இருந்தது ஒரே ஆண்டுதான். அந்த ஒரு ஆண்டும் மிகவும் இனிமையாகவும் பல தரப்பட்ட
மாறுபட்ட அனுபவங்களுடனும் உருண்டடோடியது.
உறவினர்கள் பலரும் – மகள்,மருமகன்பேத்திகள் உடன் பிறப்புகள் ,மிக
நெருங்கிய,,நெருங்கிய , தூரத்து என்று
பல தரப்பட்டவர்கள் சென்னையில் இருந்தார்கள்.. இது எங்களுக்கு முற்றிலும் புதிய
அனுபவம்..அனேகமாக ஒவொரு ஞாயிற்றுக்கிழமையும் விருந்தாகத்தான்
இருக்கும்.
சென்னையில் இருக்கும்போதுதான்
என் மகனுக்கு திருமணம் நிச்சயமானது., இந்து நாளிதழில்(அப்போது தமிழ் இந்து கிடையாது) வந்த
விளம்பரங்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்ததோடு நாங்களே விளம்பரம் கொடுத்தோம்.
நிறைய பதில்கள் வந்தன. அவற்றையெல்லாம் படித்து தொகுத்து தேர்வு செய்து பெண்
பார்க்கப போவதும் பெண் வீட்டார் வருவதும் இனிமையான அனுபவங்கள்.
.திருவாரூரில் பெண்
நிச்சயமானது.,துணைவியின்
விருப்பபடி முது நிலை பட்டதாரிப் பெண் அமைந்தது இறைவன் அருள்.
பெண் பார்க்கப்போன போதும்
அதன் பிறகு.ஓரிரு முறை திருவாரூர் போனபோதும் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒரு
விடுதியில் தங்கினோம்.வசதியான சுத்தமான அறைகள்,உணவும் சுவையாக இருக்கும். அதன் அருகில் உள்ள ஒரு
சிறிய உணவு விடுதியில் சிற்றுண்டி வகைகள் மிகவும் சுவையாக இருக்கும்.
சென்னையில் நாங்கள்
இருக்கும்போது என் தம்பி மகளுக்குத் திருமணம் நடைபெற்றது.. அந்தி நேர கூட்டுத்
தொழுகைக்குப்பின் தலைமைக்காசி திருமணத்தை நடத்தி வைத்தார்..மணமகன் காரைக்காலைச்
சேர்ந்த மென்பொருள் பொறியர்.
எனது மைத்துனர் புரபசார்
காலமானது சென்னை வாழ்க்கையில் ஒரு மறக்க முடியாத ஒன்று.. பாடியில் உள்ள அக்கா வீட்டுக்குப்போய். சடங்குகள்
எல்லாம் முடிந்து வீடு திரும்பினால் மனதில் ஒரு இனம் புரியாத வெறுமை’ வீட்டில்
இருக்கவே பிடிக்கவில்லை.எங்காவது போகவேண்டும் ஆனால் எங்கே போவது என்பது
விளங்ககவில்ல
இலக்கில்லாமல் கோயம்பேடு
பேருந்து நிலையம் சென்றோம். அங்கு சற்று அமர்ந்து சிந்தித்து சொந்த ஊரான
திருப்பத்தூர் செல்ல எண்ணினோம். திருச்சி போகும் பேருந்துக்காக காத்திருந்தோம்.
அது ஏதோ தொடர் விடுமுறைக்
காலம் பத்து நிமிடத்துக்கு ஒரு திருச்சி பேருந்து வந்து கொண்டே இருந்தது. ஆனால்
எல்லாம் வரும்போதே
கூட்டம் நிரம்பி வழிந்து வந்தன ..எங்கே நிறுத்தி பயணிகளை ஏற்றுகிறார்கள் என்றே
புரியவில்லை.. அந்த இடத்தை தேடிப்போகும் அளவுக்கு மனதில் தெம்பு இல்லை
இப்படியே நாலு மணி நேரம்
கழிந்தும் வீட்டுக்குத் திரும்பும் எண்ணம் வரவில்லை.இறைவன் அருளால் வசதியான
இருக்கைகள் உடைய ஒரு விரைவுப் பேருந்து அதிகக்கூட்ட்டம் இல்லாமல் வந்தது. முகம்
தெரியாத ஒரு நல்ல உள்ளம் எங்களுக்கு இருக்கைகளைப் பிடித்துக் கொடுத்தது. ஓரிரு
நாட்கள் ஊரில் தங்கி விட்டு சென்னை திரும்பினோம்.
சென்னையில் நான் உணர்ந்த
ஒரு சிரமம் போக்குவரத்து, அதில்
செலவாகும் கால விரயம்..பதினைந்து ஆண்டுகள் வண்டி ஓட்டிய அனுபவம் எனக்கு.
இருந்தாலும் சென்னைப் போக்குவரத்துக்கு நெரிசல் எனக்கு ஒரு அறைகூவலாகவே இருந்தது.
இன்னொன்று நகருக்குள் எங்கு போனாலும் எந்த வண்டியில் போனாலும் குறைந்தது ஒரு மணி
நேரம் ஆகி விடும்.
சொந்த வாழ்க்கை போலவே
அலுவலத்திலும் சில பல அனுபவங்கள் .வங்கிக்கிளை எப்போதுமே கூட்டம் நிறைந்து
காணப்படும்.கடனுக்காக பல திசைகளில் இருந்தும் அழுத்தம் வரும். கடன் கொடுப்பதில்
முழுக்க முழுக்க விதிகளைக் கடைப்பிடித்தால் சென்னையில் போட்டியை சமாளிதது கிளையை
வளர்ப்பது கடினம் என்று சக மேலாளர்கள் மட்டுமல்லாமல் அலுவலர் சங்கத்தில் சிலரும்
நிர்வாகத்தரப்பிலும் கருதியது எனக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது.
வாடிக்கையாளர்கள் சிறிய
சேவைக்குறைபடுகளுக்கு, அவர்கள்
உள்ள பிழை, குறைகளை மறைத்து வட்ட அலுவலகத்தில்
தொலைபேசி மூலம் புகார் அளிப்பதும்,உயர் அதிகாரிகள் உடனே கிளை
மேலாளரைத் தொடர்பு கொண்டு விசாரிப்பதும் சென்னையில்
நான் உணர்ந்த புதிய அனுபவம்.
வாடிக்கையாளர் புகார்
அளித்து விட்டார் என்று பதறாமல் வங்கிகிளை தான் செய்தது சரிதான் என்று சான்றுகளுடன் உறுதிப்
படுத்தினால் இது போன்ற வாடிக்கையாளர்களை எளிதில் சமாளித்து வட்ட அலுவலகத்தையும்
வாடிக்கயாளர்களின் பிழையை உணரவைக்கலாம்.
எடுத்துக்காட்டாக ஒன்றைக்
குறிப்பிடுகிறேன்..தன சேமிப்புக் கணக்கில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் தொகை
இருந்தும் காசோலைப் புத்தகம் தர மறுக்கிறார்கள் என ஒரு வாடிக்கையாளர் வட்டத்தின்
மிக உயர்ந்த அதிகாரியான பொது மேலாளரிடம் தொலை பேசியில் புகார் அளித்தார்,.புகார் அளித்த கையோடு என்
அறைக்குள் வந்து நான் பொது மேலாளரிடம் நேரடியாகப் பேசி விட்டேன். அவர் இப்போது
உங்களைத் தொடர்பு கொள்வார். அதற்குள் எனக்குக் காசோலைப் புத்தகம் கொடுத்து,
விட்டால் நான் புகாரைத் திரும்பப பெற்றுக்கொள்வேன் .இல்லாவிட்ட்டால்
பிரச்சனையைப் பெரிதாக்கி நான் ஊடகங்களை அழைப்பேன் என்று மிரட்டாத குறையாகச்
சொன்னார்.
அவர்
பேசிக்கொண்டிருக்கும்போதே தொலை பேசியில் பொது மேலாளர் தொடர்பு கொண்டு பேசினார்..தன
இயல்புக்கு சற்றும் மாற்றம் இல்லாமல் கனிவாகவும் நிதானமாகவும் பேசிய அவரிடம்
இன்னும் பத்து நிமிடங்களுக்குள்
முழு விவரங்களுடன் தங்களைத் தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லித் தொடர்பைத்
துண்டித்தேன்.
புகாரளித்த
வாடிக்கையாளரின் கணக்கில் எழு காசோலைகள்பணமில்லாததல் திரும்பிப்
போயிருக்கின்றன..பல மாதங்களாக குறைந்த அளவு நிலுவை கூட இல்லாத அந்தக் கணக்கில்
அன்றுதான் பத்து ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தப் பட்டிருந்தது. .இவற்றையெல்லாம்
மின்னஞ்சல் மூலம் பொது மேலாளருக்குத தெரிவித்தவுடன் அந்தக் கணக்கை உடனே முடித்து
வாடிக்கையாளரை அனுப்புமாறு பதில் வந்தது.
வங்கியில் கடன்
தொடர்புடைய ஒரு வணிக நிறுவனத்தில் மிகப் பழையதாகி விட்ட எங்கள் தொலைகாட்சிப்
பெட்டியையும் குளிர் பதனப் பெட்டியையும் கொடுத்து புதியவை வாங்கினேன்.
விலைவித்தியாசத்துக்கு காசோலை கொடுதேன். புதிய பொருட்கள் வீட்டுக்கு வந்து
சேர்ந்தன. ஆனால் பலமுறை நினைவூட்டியும் என் காசோலை பணமாக்கப் படவில்லை.
பத்து நாட்கள் கழித்தும்
காசோலை பணமாக்கப் படவில்லை. அந்த நிறுவன உரிமையாளரை நேரில் சந்தித்து இரண்டு
தினங்களுக்குள் காசோலை பணமாக்கப் படாவிட்டால் நான் வாங்கிய பொருட்களைத் திருப்பி
அனுப்பிவிடுவ்ன் என்று சொன்னபிறகுதான் காசோலை பணமாக்கப்பட்ட்டது.
இதை நான் பெருமைக்காகச்
சொல்லவில்லை . எப்படி எல்லாம் அரசு,,வங்கி அதிகாரிகளுக்கு கவார்ச்சியான பொறிகள்
வைக்கப்படுகின்றன என்பதை உணர்த்தவே இதைக் குறிப்பிடுகிறேன்.
முன்பின் தெரியாதவர்கள்
விருந்துக்கு அழைப்பார்கள் அங்கு போனால் மது வெள்ளமாகப் பாயும். இவற்றையெல்லாம்
வன்மையாக மறுத்து விட வேண்டும். சற்று சபலப்பட்டு விட்டால் அவை நம் வேலைக்கும்
வாழ்வுக்கும் கண்ணி வெடியாக மாறி சீர்குலைத்து விடும்.
விலை உயர்ந்த பரிசுப் பொருட்களும் மனதை ஊசலாட
வைக்கும்.
இந்த ஊசலாட்டங்களுக்கு
இடம் கொடுக்காமல் என்னைக் காப்பாற்றியது
இறையருள்.. நேர்மையின் பெருமையை ஊட்டி வளரத்த என்
பெற்றோருக்கு நன்றி..
பயணம் தொடரும்
. .
3.சென்னை வாழ்க்கைப் பயணமும்
வங்கி அனுபவங்களும்.என்ற தலைப்பில்
20082016 அன்று வெளியிட்டதன் மறு பதிப்பு சிறிய
மாறுதல்களுடன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
09072023ஞாயிறு (இ)
சர்புதீன் பீ.
No comments:
Post a Comment