Saturday, 15 July 2023

தமிழ் (மொழி)அறிவோம் அபாயக் கட்டத்தை தாண்டியது

 




தமிழ் (மொழி)அறிவோம்

அபாயக் கட்டத்தை தாண்டியது
16072023 ஞாயிறு
“வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டியது “
இதைப் படித்ததும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது ?
அதிகம் சிந்திக்க வேண்டாம்
சரியா தவறா என்று இணையத்தில் தேட வேண்டாம்
உடனடியாகத் தோன்றுவதை மட்டும் எழுதி அனுப்புங்கள்
விடை
“வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டியது “ இது புதிர் இல்லை
தினத்தந்தியில் வந்த தலைப்புச் செய்தி – டெல்லி வெள்ள நிலவரம் பற்றி
யமுனை நதியில் வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டியது
இதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றியது
வெள்ள அபாயம் நீங்கி விட்டது என்பதுதான்
ஆனால் அடுத்த வரி என் புரிதல் தவறு என்றது
“தண்ணீரில் தத்தளிக்கிறது டெல்லி”
என்று
“யமுனை ஆற்றில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி “என்பது கொஞ்சம் தெள்வாக இருக்கிறது
என் புரிதல் தவறா இல்லை செய்தியின் சொல்பயன்பாடு தவறா ?
“நோயாளி அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார் “ என்று மருத்துவர் (திரைபடங்களில்) சொன்னால் உடனே கேட்பவர் முகத்தில் ஒரு மகிழ்ச்சி
அது போலவே எனக்கும் தோன்றியது
என்னைப்போல் நல்ல செய்தியாகப் புரிந்து கொண்டவர்கள் சகோ
ஹனீப் முகமது , சுராஜ் ,
அஷ்ரப் ஹமீதா ,,
ஷர்மதா ,சிராஜுதீன் ,
தல்லத்
சகோ ஹசன் அலி மட்டும் மாற்றுக் கருத்தாக
“லிமிட்க்கு மேலே பூடுச்சு “ என்று சொல்லியிருந்தார்
அபாயக் கட்டம , அபாயகட்டம் எது சரி ?–சகோ முகமது ஜாபர்
“இன்றைய இருண்ட கால ஒன்றிய அரசு --சகோ “கதீப் மாமுனா லெப்பை
பங்கெடுத்த அனைவருக்கும்
வாழ்த்துகள்
, பாராட்டுகள் நன்றி
செய்திகளைத் தெளிவாக, எளிய மக்களும் புரிந்து கொள்ளும்படி போடுவதில் தந்திக்கென்று ஒரு தனி இடம் இருக்கிறது
இது பற்றி ஒரு நிகழ்வு – காதில் விழுந்தது
“தலைவர்கள்
ஆலிங்கானம்
செய்து கொண்டார்கள்
எனறு ஒரு செய்தி
வெளியிடுவதற்கு ஆயத்த நிலையில் அச்சேற இருக்கிறது
அங்க வந்த சி பா ஆதித்தனார் ---தந்தி செய்தித்தாள் நிறுவனர் ஒரு தொழிலாளி இடம் ஆலிங்கானம் என்றால் என்னவென்று புரிகின்றதா என்று கேட்க புரியாமல் முழித்தார் தொழிலாளி
“ இவருக்கும் புரியும்படி போடுங்கள் “ என்று ஆசிரிய்ரிடம் சி பா சொல்ல
“கட்டித் தழுவிக் கொண்டார்கள் “
என்று செய்தி மாற்றப்பட்டது
இன்று பட்டி தொட்டி எல்லாம் , தந்தி இல்லாமல் டீக்கடை கிடையாது என்று சொல்லும் அளவுக்கு பரவலாக விற்பனை ஆகி செய்தித்தாள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய பெருமை எளிய நடையை கொள்கை ஆக்கிய சி பா அவர்களையே சேரும் ;
பதிவு மிகச் சிறியதாக இருக்கிறது
எனவே கொசுறாக சில வரிகள்
உனகென்ன கவலை நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் வெள்ளம்
எரிந்தால் எரியட்டும் நாடு
உயர்ந்தால் உயரட்டும் விலைகள்
உனகென்ன கவலை நீ ஒரு ராஜா
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
௧௬௦௭௨௦௨௩
16072023 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment