Thursday, 31 August 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 14 , ஜகாத் சதக்கா

 





இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
14 , ஜகாத் சதக்கா
0109 2023 வெள்ளி
சென்ற பதிவை
சதக்கா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன என்ற வினாவோடு
நிறைவு செய்தேன்
சதகா அல்லதுசத்கா(அரபு:صدقة IPA: [sˤɑdæqɐ] , [n A] "தொண்டு", "பரோபகாரம்", [1] பன்மை ṣadaqāt صدقات )
நவீன இஸ்லாமிய சூழலில் "தன்னார்வ தொண்டு"என்பதைக் குறிக்கிறது
சொற்பிறப்பியல் மற்றும் பொருள் [ தொகு ]
'சதகா' என்பது 'நீதி' என்று பொருள்படும்
அதோடு தானாக முன்வந்து தர்மம் அல்லது தொண்டு செய்வதைக் குறிக்கிறது.
சரியான விடை அனுப்பிய சகோ
சிராஜுதீன்
–முதல் சரியான விடை
ஷிரீன் பாருக்
இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
சில விதிகளுக்கு உட்பட்டு சேமிப்பில் 2,5% கட்டாய தருமம் என்று குரான் வலியுறுத்துகிறது .
இது சக்காத்.துக்கு மட்டும்தான்
இதை ஒழுங்காக பகிர்ந்து அளித்தாலே சமுதாயத்தில் உள்ள பொருள் வறுமை, கல்வி வறுமை, நல்வாழ்வு வறுமை எல்லாம் பெரும்பாலும் சரியாகி விடும்
ஆனால் சதக்காவுக்கு அளவு எதையும் இறைவன் சொல்லவில்லை
2:219 ல் இறைவன் மிகத் தெளிவாகச் சொல்கிறான் :
: சூராஹ்(2) அல்பக்றா வசனம் 219
“----------------(உங்கள் தேவைகள் ) போக மிஞ்சியிருப்பது அனைத்தையும் இறை வழியில் செலவு செய்யுங்கள் ---------“(2:219)
இவ்வுலகின் வளங்கள், செல்வங்கள் எல்லாம் இறைவனுக்கே சொந்தம் .
மனிதன் தன் சுக வாழ்வுக்கு, சட்டப்படி தனக்கு உரிமை ஆனது அது எவ்வளவாக இருந்தாலும் அதை அவன் எடுத்துக்கொள்ளலாம்
அதற்க்கு மேல் மனிதனிடம் மிச்சம் மீதி இருப்பது எலாம் மற்றவர்களுக்குக் கொடுப்பதற்கே
என இறைவன் தெளிவாக ஆணை இட்டு சதக்காவும் ஜக்காத் போல கட்டாயம் ஆனால் அளவு கிடையாது என்கிறான்
இப்படிதான் நபி பெருமான் வாழ்ந்து காட்டினார்கள்
பேரரசின் மன்னராய் இருந்தாலும் அவர்கள் வீட்டில் எதுவுமே வைக்காமல் வரும் செல்வம் அனைத்தையும் அன்றே ஆம் அன்று இரவுக்குள் கொடுத்து விடுவார்களாம்
உணவுப்பொருள் கூட அதிகமாக வைத்துக்கொள்வது இல்லை
நபி போல் வாழ நம்மால் முடியாது
நம்மால் முடிந்த அளவுக்கு தான தருமங்கள் செய்து நல்ல மனிதனாக வாழ்ந்து , இறைவழியில் நடக்க இறைவன் அருள் புரிவானாக
செல்வப்பரவல் எனும் பொருளாதார சமூக சீர்திருத்தத்தில் மிகப்பெரும் பங்கு வகிப்பது தான தருமங்கள்
பிறருக்காக செய்யும் பத்லி ஹஜ் பற்றிய என் ஐயத்துக்கு இது வரை தெளிவு கிடைக்கவில்லை
எனவே அதுவே இன்றைய வினாவாகத் தொடர்கிறது
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
14 ச fபர் (2) 1445
0 1 09 2023 வெள்ளி
சர்புதீன் பீ

Wednesday, 30 August 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 13 நோன்பு , ஜகாத்





 இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
13 நோன்பு , ஜகாத்
31082023 வியாழன்
சென்ற [பதிவின் நிறைவில்
நோன்பு ஜக்காத் , ஹஜ் , குரான் பற்றி பிறகு
ஹஜ்ஜைப் பற்றி எனக்கு ஒரு சிறிய ஐயம் , தெளிவின்மை
“பிறருக்காக் ஹஜ் ( பதலி ஹஜ் ) என்பதில் யாருக்காக ஹஜ் செய்யப்படுகிறதோ அவர் ஹஜ் செய்வதாக நிய்யத் வைத்திருக்கக வேண்டும்”
என்று எங்கோ படித்த , கேட்டநினைவு
இதையே இன்றைய வினாவாக வைத்துக்கொள்வோம்
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது
என்று சொல்லியிருந்தேன்
தொழுகைக்கு அடுத்த கடமை நோன்பு
இது பற்றி எழுத பெரிதாக ஒன்றும் எனக்கு இல்லை
நான் சொல்லி வருவது, சொல்ல வருவது அரபின் தமிழ் கருத்து தான்
விதிகள், செயல்முறைகள் பற்றி நான் தொடுவதில்லை
நோன்பின் நிய்யத்துகள் தமிழில் எல்லோருக்குமே தெரியும்
நோன்பு என்பது (Sawm, அரபு மொழி: صوم‎‎) சொல்லின் தமிழ் வடிவம்
இனி வரும் ஜக்காத், ஹஜ் இரண்டும் எல்லோருக்கும் அல்லாமல் பொருள் வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே
வசதி – என்ன அளவுகோல் ?
இரவு உணவுக்கு வழி இருந்தால் அவர்கள் வசதி உள்ளவர்களே என்று படித்த நினைவு
ஜக்காத்துக்கு சில வரை முறைகள் இருக்கின்றன
அவை பற்றி நிறைய நூல்கள், உரைகள் எடுத்துச் சொல்கின்றன
Zakat (Arabic: زكاة; [zaˈkaːt], "that which purifies",
ஜகாத் என்ற அரபுச் சொல்லுக்கு தூய்மை படுத்துவது என்று ஒரு பொருள்
அதாவது செல்வத்தில் உள்ள கறை, அழுக்கை நீக்கி தூய்மைப் படுத்துவது
அதிகம் பேசப்படாத சதக்கா பற்றி சற்று விரிவாக சொல்ல எண்ணுகிறேன்
ஆனால் இன்னும் சற்று நேரத்தில் மின் நிறுத்தம் ,அதன் விளைவாக இணைய நிறுத்தம்
எனவே
சதக்கா என்ற சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன என்ற வினாவோடு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை சிந்திப்போம்
13 ச fபர் (2) 1445
31 08 2023 வியாழன்
சர்புதீன் பீ

நினைவில் நிற்பவர்கள்

 




நினைவில் நிற்பவர்கள்

30082023 புதன்
வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கிறோம் பலரை
உடன் பணிபுரிவோர், வங்கி வாடிக்கையாளர்கள் ,அண்டை அயலார் ,
- உடன் பயணிப்போர் ,கடைக்காரர்கள் இப்படி இன்னும் பலர்
சிலரை அன்றாடம் , பலரை சிலமுறை ,இன்னும் சிலரை ஒரே ஒரு முறை சந்திக்கிறோம்
இந்தக்கணக்குகளைத் தாண்டி சிலர் நம் சிந்தையில் நிலைத்து நின்று விடுகிறார்கள்
அப்படி ஒரு சிலர் பற்றி இங்கே சொல்கிறேன்
முப்பது ஆண்டுகள் இருக்கும் அந்தப் பெண்ணை சந்தித்து
ஒரே ஒஉமுறை சந்தித்த அவர் இன்றும் பசுமையாய் நினைவில் நிற்கிறார்
ஈரோட்டில் இருந்து கோவைக்கு பணி இட மாறுதல் –
அங்குவீடுபார்க்கவேண்டும்
மதுரை அலுவலகத்தில் இருக்கும் ஒருவருக்கு கோவையில் வீடு
இருப்பதாக அறிந்து அவரைத் தொடர்பு கொண்டேன்
ஞாயிறு காலை 7 மணி வாக்கில் வந்தால் வீட்டைப் பார்க்கலாம் என்று சொன்ன அவர் கோவை வீட்டு முகவரியும் கொடுத்தார்
மகனும் துணைவியும் ஒரு திருமணத்துக்கு வெளியூர் போய்விட மகளும் நானும் அதிகாலையில் கிளம்பி சிற்றுண்டி கூட சாப்பிடாமல் 7 மணிக்கு அங்கு போய் விட்டோம்
முதல் பார்வையிலேயே வீடு எனக்குப் பிடிக்கவில்லை
திட்டமிடாமல் கட்டப்பட்டபல வீடுகள்- பெரிதும் சிறிதுமாய்
பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது
இருந்தாலும் வரச் சொன்னவரைப் பார்த்து விட்டுப் போய்விடலாம் என்று காத்திருந்தோம்
அங்கிருந்த பெண் மணி ஒருவர் வந்து உள்ளே உட்காருங்கள் என்று அன்புடன் அழைத்தார்
வீடு என்று சொல்ல முடியாது பெரிய அறை என்று கூட சொல்ல முடியாது அவ்வளவு சிறிய இடம்
மனதோ பெரிது
உள்ளே உட்கார வைத்து எங்கள் பசியை அறிந்து தோசை சுட்டுக் கொடுத்தார் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
அப்போதிருந்த பசிக்கு அது பல்சுவை விருந்தாய்த் தெரிந்தது எங்களுக்கு
கேரளத்தைச் சேர்ந்த அவர் துணைவரின் பணி நிமித்தம் கோவை வந்ததாய்ச் சொன்னார்
அவர் பேர் கூடத் தெரியாது
துணைவரும் வீட்டில் இல்லை
மனதாலும் சொல்லாலும் நன்றி தெரிவித்து வாழ்த்தினோம்
பார்க்க வந்தவரைப் பார்க்க முடியாமல் திரும்பி விட்டோம்
இப்படி ஒரு நிகழ்வை , அந்தப் பெண்ணை எப்படி மறக்க முடியும் ?
அடுத்த நிகழ்வு தொடரிப் பயணத்தில்
ஏறுவாடியில் இருந்து சென்னைக்குப் போக நாங்குநேரியில் வண்டியில் ஏறினோம்
ரம்ஜான் நோன்பு நேரம்
நெல்லை சந்திப்பில் தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம் என்று துணைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்
நெல்லை சந்திப்பில் இறங்க முற்பட்டபோது அருகில் இருந்த ஒருவர்
“சார் சார் நீங்கள் நோன்போடு அலைய வேண்டாம் . இருங்கள் நான் போய் வாங்கி வருகிறேன் .வேறு ஏதாவது வேண்டும் என்றால் தயங்காமல் சொல்லுங்கள் வாங்கி வருகிறேன் “ என்றார்
“தண்ணீர் மட்டும்தான் நானே வாங்கிக் கொள்கிறேனே” என்று நான் சொல்ல
“கடைகள் எல்லாம் சற்று தள்ளி இருக்கின்றன “ என்றபடி இறங்கிப் போய்விட்டார்
அதோடு நிற்கவில்லை
நோன்பு திறக்க நாங்கள் ஆயத்தமாவதை அறிந்து
“ சாரும் மேடமும் நோன்பு திறக்கட்டும் .
நாம் கொஞ்ச நேரம் வேறு இடத்தில் இருப்போம் “ என்று தன் கூட வந்தவர்களையும் கூட்டிகொண்டு போய்விட்டார்
சொல்லாமலே புரிந்திருக்கும் அவர்கள் மாற்று மத அன்பர்கள் என்பது
இதே போல மற்றவர்களையும் மதித்து நடப்பதுதான் நாம் அந்தப் பயண
நட்புகளுக்கு செய்யும் கைம்மாறு
இனி பேருந்துப் பயணம் பற்றி ஓன்று சென்னையில்
மைத்துனர் மறைவு நெஞ்சில் பாரமாக அழுத்த ஒரு வெறுமை உணர்வு
வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை வங்கிக்கு செல்லவும் மனமில்லை
சில துணிமணிகள் மட்டும் எடுத்துக்கொண்டு துணைவியும் நானும் கோயம்பேடு வந்து உட்கார்ந்து விட்டோம் இலக்கில்லாத ஒரு பயணம்
ஒருவழியாக சொந்த ஊருக்குபோய் ஒருசில நாட்கள் தங்கி வர எண்ணி திருச்சி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தோம் , காத்திருந்தோம் காத்துக்கொண்டே இருந்தோம்
நிறைய பேருந்துகள் வருகின்றன . வரும்போதே வண்டி நிறைய கூட்டம் வேறெங்கோ வண்டியை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றாரகள் என்பது தெளிவாகத் தெரிகிறது
அந்த இடத்தை தேடிச் செல்லும் அளவுக்கு மனதில் , உடலில் உற்சாகம் இல்லை
இருந்த இடத்தில் அப்படியே இருந்தோம்
சற்று நேரத்தில் ஒரு வசதியான இருக்கை கொண்ட அரசு வண்டி வந்தது
அவ்வளவாகக் கூட்டம் இல்லை
இருந்தாலும் நாம் அசைந்து ஏறுவதற்குள் கூட்டம் வந்து மொய்த்து விடுமோ என்று தயக்கம்
அப்போது முன்பின் தெரியாத ஒருவர்வந்து “ சார் உங்களுக்காக இரண்டு சீட் பிடித்து வைத்திருக்கிறேன் . கிளம்புங்கள் “ என்றவர் எங்களை வண்டியில் உட்கார வைத்து விட்டு இறங்கி விட்டார்
உண்மையிலேயே மிக வசதியான இருக்கை, சுகமான பயணம்
இன்று வரை அந்த நல்ல உள்ளம் யார் என்று தெரியாவில்லை
இன்னும் மகிழுந்தை அப்படியே தூக்கி பாதுகாப்பாக வைத்தவர்கள்,
மகிழுந்து சக்கரம் பழுதான நேரத்தில் வந்து உதவியவர் ,
சிவானில் 50 பைசாவை என்னிடம் கொடுப்பதற்காக வெகு நேரம் என்னைத் தொடர்ந்தவர்
காலத்தில் பணம் கடன் கொடுத்து உதவிய நண்பர் குப்புசாமி
இதெல்லாம் பலமுறை விரிவாக எழுதியிருக்கிறேன்
அவற்றைத் திரும்பச் சொல்லவில்லை
இந்தப் பதிவை நிறைவு செய்யுமுன் ஒரே ஒரூ எதிர்மறைச் செய்தியை சொல்லிவிடுகிறேன்
வாணியம்பாடிக் கிளையில் சேர்ந்து சில நாட்களில் அருகில் உள்ள ஒரு கிளைக்கு மேலதிகாரி வருகிறார்
எனக்கு முன் வாணியம்பாடியில் மேலாளராக இருந்தவர்
“வாங்க சார் AGM மைப் பார்த்து வரலாம்” என்கிறார்
“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை “ என்று நான் மறுக்க , பழகிக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தி கூட்டிக்கொண்டு போகிறார்
அந்த மேலத்காரியை அதற்கு முன் நான் பார்த்துப்பேசியதில்லை
என்னைப் பார்த்தும் அவர் சொன்னது இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது
“you will be shifted “
என்பதுதான் அந்தப் பொன்மொழி
கொஞ்சம் பேச்சு வழக்கில் சொன்னால்
“உன்னைத் தூக்கி வேறு எங்காவது போட்டுவி டுவேன் “
ஆனால் அவர்தான் அவர் விரும்பாத ஒரு ஊருக்கு மாற்றப்பட்டு
அங்கு சமாளிக்க முடியாமல் விருப்ப ஓய்வில் போனாக அறிந்தேன்
நான் மூன்று ஆண்டு வாணியம்பாடி பணிக்குப்பின் சென்னைக்கு மாற்றப்பட்டேன்
அப்படி என் மேல் என்ன ஒரு வெறுப்பு ? புரிய வில்லை
என் பெயரே அவருக்குப் பிடிக்க வில்லை போலும்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
3008 2023 புதன்
சர்புதீன் பீ

Monday, 28 August 2023

English QUIZ Apostasy

 



English QUIZ

Apostasy
29082023 Tue
Word of 8. letters
Starting with first vowel
Ending with one of the last 3 letters of alphabet
About the word
In Olden days religious world it was a crime attracting capital punishment
But in the
the present day politics it has become a profitable venture
What is the word?
Answer
Apostasy
Meaning
an act of refusing to continue to follow, obey, or recognize a religious /poltical faith. . : abandonment of a previous loyalty :
a defection or revolt'
, the term is also used to refer to the renunciation of a non-religious belief or cause, such as a
political party,
Many religious groups and some states punish apostasy. Such punishments may include shunning, excommunication, verbal abuse, physical violence, or even.
execution.[2]
Thanks to those who participated with enthusiasm :
M/S
Hasan Ali Yaseen Sirajudddin Velavan
AR Viswanathan ShireenFarook & Thallath
Let's meet tomorrow ISA.
29082023 Tue
Sherfuddin P

தமிழ் (மொழி) அறிவோம்சொற்பொருள் பின்வரு நிலையணி-குறள்

 




தமிழ் (மொழி) அறிவோம்

2708 2023 ஞாயிறு
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல் குறள்200
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. குறள் 299
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் குறள் 320
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை குறள் 411
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்.- குறள் 751
இந்தகுறள்களுக்குள் உள்ள ஒற்றுமை ஏன்ன?
மிக மிக எளிய வினா
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டு பெறுவோர்
சகோ
நஸ் ரீன்
முதல் சரியான விடை
நெய்வேலி ராஜா
தெளிவான விளக்கம் நன்றி
அஷ்ரப் ஹமீதா
தல்லத்
ஷிரீன பாருக்
விடைகள் பல் வேறாக இருந்தாலும் ஒரு சொல் பல முறை வருகிறது என்ற மையக்கருத்தை சொன்னதால் எல்லாமே சரியான விடைதான்
சகோ நெய்வேலி ராஜாவின்
விளக்கம்
இந்தக் குறள்களில் ஒரு சொல்
நான்கு முறை வருகிறது
இக்குறள்கள் ஒவ்வொன்றிலும் சொற்பொருள் பின்வரு நிலையணி உள்ளது .
ஒரு செய்யுளில் ஒரே சொல் திரும்பத்திரும்ப வந்து அதே பொருளைத் தருவது சொற்பொருள் பின்வரு நிலையணியாகும்.
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
27082023.ஞாயிறு
சர்புதீன் பீ

Friday, 25 August 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 12 தொழுகை 8

 




இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
12 தொழுகை 8
25082023 வெள்ளி
நேற்றைய வினா
தொழுது கொண்டிருக்கும்போது
மீண்டும் உழு செய்ய வேண்டியது போல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும் ?
விடை , விளகக்ம்
தொழுகும்போது மனதில் சில குழப்பங்கள் உண்டாகும்
அதில் ஓன்று
உழு இருக்கிறதா இல்லை மீண்டும் செய்யவேண்டுமா என்பது
இதற்கு சரியான தீர்வு உங்கள் எண்ணம்தான்
உழு இருக்கிறது என்று நீங்கள் உறுதியாக நம்பினால் நீங்கள் தொழுகையை தொடரலாம்
அப்படி இல்லாமல் ஒரு சிறிய அளவில் ஐயம் வந்து விட்டாலும் உழு முறிந்ததாக வைத்துகொள்ளவேண்டும்
உழு முறிந்தால் அதோடு தொழுகையும் முறிந்து விடும்
எனவே தொடர்ந்து தொழுகாமல் உழு செய்து விட்டு மீண்டும் புதிதாகத் தொழ வேண்டும்
Thought is deed - எண்ணமே செயல் என்பது இஸ்லாத்தின் கோட்பாடுளில் ஓன்று
ஈமான் , நிய்யத் போன்றவை இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தவை
சரியான விடை அனுப்பிய சகோ
ஷர்மதாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
அடுத்த குழப்பம் தொழுவது முதல் ரக் அத்தா , இரண்டாவதா , மூன்றாவதா இல்லை நான்காவதா என்பது
இது ஜமாத்தில் சேராமல் தனியாகத் தொழுகும்போதுதான் வரும்
இதில் முதலாவதா இரண்டாவதா என்ற ஐயம் வந்தால் முதலாவது என்று வைத்துக்கொண்டு தொடர்ந்து தொழுகவேண்டும்
அதேபோல் இரண்டாவதா மூன்றவதா என்றால் இரண்டாவது
மூன்றாவதா நான்காவதா என்றால் மூன்றாவது
அதாவது ஓன்று அதிகமாகி விட்டால் அதற்கான நன்மை கிடைக்கும்
ஆனால் குறைந்து விட்டால் தொழுகை நிறைவேறாமல் போய்விடும்
நிறைவாகாவோ முழுமையாகவோ இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு தமிழில் தொழுகையின் சூராக்கள் ,துவாக்கள் பற்றி எழுதியிருக் கிறேன் என நினைக்கிறேன்
இதில் பிழைகள் இருந்தால் கருணையே உருவான ஏக இறைவன் மன்னித்து அருள் புரிவான்
சுராஹ் 112 இக்லாஸ் பற்றி ஏற்கனவே பார்த்தோம்
அதோடு சேர்த்து ஓதப்படும் அடுத்த இரண்டு சூராக்கள் பற்றி
இப்போது பார்போம்
113. Surah Al-Falaq
விடியற் காலை
குல்அவுது பிரப்பியல்பfலக்
Qul aAAoothu birabbi alfalaq
மின்ஷர்ரி மா கலக்
Min sharri ma khalaq
வமின்ஷர்ரி காசிகின் இதா வஹப்
Wamin sharri ghasiqin ithawaqab
வமின்ஷர்ரி அண்ண ப்ப ffaததீfபி அல் அகத்
Wamin sharri annaffathatifee alAAuqad
வமின்ஷர்ரி ஹாசித்தின் இதா ஹசத்
Wamin sharri hasidin itha hasad
113:1 قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ
(நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
113:2 مِن شَرِّ مَا خَلَقَ
அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-
113:3 وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
113:4 وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ
இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,
113:5 وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).
சூராஹ் 114 அந்நாஸ் - மனிதன்
குல்அவுது பிரப்பின்னாஸ்
Qul aAAoothu birabbi annas
மலிக்கின்னாஸ்
Maliki annas
இலாஹின்னாஸ்
Ilahi annas
மின்ஷர்ரி அல் வஸ்வாசி அல்க(ஹ்)ன்னாஸ்
Min sharri alwaswasi alkhannas
அல்லதீ யு வஸ்விஸு fபீ சுடூரி அண்ணாஸ்
Allathee yuwaswisu fee sudoori annas
மினல்ஜின்னத்தி வன்னாஸ்
Mina aljinnati wannas
114. Surah An-Nas
114:1 قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்.
114:2 مَلِكِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் அரசன்;
114:3 إِلَٰهِ النَّاسِ
(அவனே) மனிதர்களின் நாயன்.
114:4 مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்).
114:5 الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
அவன் மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
114:6 مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
(இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.
4 வசனங்கள் கொண்ட சிறிய சூராஹ் 112 , குரானின் 1/3 க்கு சமம் என்று முன்பு பார்த்தோம்
அதே போல் குரானின் நிறைவு இணையாக வரும் 113, 114 இரண்டும்
தீங்குகள், அபாயங்கள் , குறிப்பாக கண்ணேறு, பொறாமை போன்ற தீங்குகளை விட்டு இறைவனின் பாதுகாப்பைப் பெற எளிய சிறிய சூராக்கள் என்பது அறிஞர்கள் கருத்து
இது தெரிந்தோ தெரியாமலோ இந்த சூராக்கள் சிறியதாக இருப்பதால் தொழுகைகளில் அதிகமாக ஒதப் படுகின்றன
இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
என்ற இந்தத் தொடரில்
தொழுகை பற்றிய பதிவுகளை இன்றோடு நிறைவு செய்கிறேன்
அதற்குமுன்
தொழுகையும் யோகாசனங்களும் பற்றி ஒரு சிறிய குறிப்பு –ஒப்பீடு
நூற்றுக் கணக்கில் இருக்கும் யோகாசனப் பயிற்சிகள் ஐந்து பகுதிகளாகப் பிரிக்கபடுகின்றன
1 நிற்கும் நிலை (தொழுகை துவக்கம்)
2 முதுகுத் தண்டு நீட்சி ( ருக்கு ,சஜ்தா )
3 தலை கீழ் நிலை ஆசனங்கள்
4 உட்காரும் நிலை (அத்தஹியாத்து )
5 முதுகுத் தண்டை முறுக்குதல் ( சலாம் கொடுததல்)
இவை எல்லாமே (தலை கீழ் தவிர)ஒரு சிறிய அளவில் , எளிதாக எல்லோரும் செய்யும் முறையில் தொழுகையில் வருகின்றன
முறையாகத் தொழுவது உடல் உள்ளம் , ஆன்மா எல்லாவற்றிற்கும் ஒரு முழுமையான பயற்சியாக அமைகிறது
தொழுகை பதிவு நிறைவுறுகிறது
நோன்பு சக்காத் , ஹஜ் , குரான் பற்றி பிறகு
ஹஜ்ஜைப் பற்றி எனக்கு ஒரு சிறிய ஐயம் , தெளிவின்மை
“பிறருக்காக் ஹஜ் ( பதலி ஹஜ் ) என்பதில் யாருக்காக ஹஜ் செய்யப்படுகிறதோ அவர் ஹஜ் செய்வதாக நிய்யத் வைத்திருக்கக வேண்டும்”
என்று எங்கோ படித்த , கேட்டநினைவு
இதையே இன்றைய வினாவாக வைத்துக்கொள்வோம்
அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் தெளிவு படுத்தினால் நல்லது
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
07 ச fபர் (2) 1445
25 08 2023 வெள்ளி
சர்புதீன் பீ
(Delayed posting due to network problem)

Wednesday, 23 August 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 11 தொழுகை 7

 




இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
11 தொழுகை 7
24082023 வியாழன்
சென்ற பகுதியின் வினாக்களுக்கு விடையை பார்க்குமுன்
முதல் ரக் அத் தொழுகை வரை சென்ற பகுதியில் பார்த்தோம்
அடுத்து நிற்கும் நிலைக்கு வந்து இரண்டாவது ரக் அத் முதல் ரக் அத்போலவே தொழுக வேண்டும்
பஜர் போல இரண்டு ரக அத் தொழுகை என்றால் இரண்டாவது ரக் அத்தில் இரண்டு சஜ்தாவுக்குப்பின் இருப்பில் உட்கார வேண்டும்
கீழே உள்ளவற்றை ஒத வேண்டும்
1 அத்தஹியாத்து துவா
2 தருதே இப்ராஹீம்
3 து ஆயே மஸுராஹ்
அதன் பின் வலது பக்கமும் பின் இடது பக்கமும் முகத்தைத் திருப்பி
“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்”
(உங்கள் மீது சாந்தியும் இறைவனின் அருளும் உண்டாவதாக)
(இரு தோள்களிலும் இருக்கும் வானவர்களுக்கு சலாம் சொல்கிறோம் )
என்று ஒதி தொழுகையை நிறைவு செய்யவேண்டும்
இதுவே 3 ரக் அத் (மக்ரிப் )தொழுகை அல்லது 4 ரக் அத் தொழுகை ( லுஹர் . அசர் , இஷா ) தொழுகை என்றால் இரண்டாம் ரக் அக்கதுக்குப்பின் அத்தஹியாத்து துவா மட்டும் ஓதி விட்டு பின் நிற்கும் நிலைக்கு வந்து மற்ற ரக் அத்துகளை நிறைவு செய்த பின்
அத்தஹியாத்து துவா தருதே இப்ராஹீம் து ஆயே மஸுராஹ் மூன்றும் ஓதி சலாம் சொல்லி தொழுகையை நிறைவு செய்யவேண்டும்
பர்ளு தொழுகையில் முதல் இரண்டு ரக் அத்தில் அல்ஹம்து சூராவோடு துணை சூராஹ் ஓத வேண்டும்
அத்தஹியாத்து துவா , தருதே இப்ராகிம் இரண்டிற்கும் ஏற்கனவே பொருள், விளக்கம் எழுதி இருக்கிறேன்
இருந்தாலும் மீண்டும் தருகிறேன்
1 அத்தஹியாத்து துவா
அத்-தஹிய்யாது லில்லாஹி வ-ஸலவது வ'த்-தய்யீபத், அஸ்-ஸலாமு 'அலைகா அய்யுஹா'ன்-நபியு வ ரஹ்மத்-அல்லாஹி வ பரகாதுஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாத்-இல்லாஹ் இஸ்-ஸாலிஹீன். அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் 'அப்துஹு வ ரசூலுஹு
“இதில்
அஷ்ஹது அல்லா இலாஹ
என்று சொல்லும்போது வலது கை ஆள்காட்டி (கல்யா) விரலை உயர்த்தி
இல்லல்லாஹ்
என்று சொல்லும்போது விரலை இறக்கி விட வேண்டும்
கருத்து
சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன.
நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக.
எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
அத்தஹியாத் துவா பற்றி ஒரு சிறப்பான விளக்கம் – ஒரு ஜூம்மா உரையில் காதில் விழுந்தது – பலமுறை எழுதியிருக்கிறேன் - நல்ல செய்திகளைத் திரும்ப சொல்வதில் தவறில்லை
“ நபி ஸல் அவர்கள் மிராஜ் பயணத்தின்போது எல்லாம் வல்ல இறைவனை சந்தித்து
“சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. “
என்று தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறார்கள்
உடனே இறைவன்
நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக
என்று நபியை வாழ்த்துகிறான்
நபி ஸல் அவர்கள் இறைவனின் வாழ்த்தைகூட தனக்கென வைத்துக்க்கொள்ளாமல்
எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்
என்று சொல்லி இறைவனின் நல்லடியார்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள்
“இதைப்பார்த்து வியந்த வானவர்கள் ஒருமித்த குரலில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் “
என்று சொல்கிறார்கள்
2 தருதே இப்ராஹீம் (இப்ராகிம் சலவாத்)
இதுவும் முன்பே விளக்கியதுதான்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜீது - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜுது .
கருத்து
“இறைவா, இப்ராஹீம் , இப்ராஹிமின் குடும்பத்தார் மீது உனது அருட்கொடையை பொழிந்தது போல முஹம்மது மீதும், முஹம்மதுவின் குடும்பத்தினர் மீதும் உனது அருட்கொடையை வழங்குவாயாக, நீ போற்றத்தக்கவன், மகத்தானவன்.
இறைவா , இப்ராஹீமையும் இப்ராஹிமின் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்தது போல் முஹம்மதுவையும் முஹம்மதுவின் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாயாக “
3 து ஆயே மஸுராஹ்
அல்லாஹும் மங் f பிர்லி வலிவாலிதய்ய வலி உஸ்தாதி
வலி ஜமீ இல் முக்மிநீன வல் முக்மினாத்தி வல் முஸ்லிமீன
வல் முஸ்லிமாத்தி அல் அஹ்யாஇ மின்ஹும் வல் அம்வாத்தி இன்னக்க முஜிபுத் த அவாத்தி பிரஹ் மத்திக்க யா அற்ரகுமாராஹிமீன்
கருத்து
எங்கள் இறைவனே என்னுடைய தாய் தந்தைக்கும் ,ஆசிரியருக்கும் ,மூமினான முஸ்லிமான ஆண் பெண்களுக்கும் வாழ்பவர்களுக்கும் ,மறைந்ந்தவர்களுக்கும் பாவ மன்னிப்பு அருள்வாயாக
நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்பவன்
உன்னுடைய அருளைக் கொண்டு எங்களை மன்னிப்பாயாக
(இந்த துவா தொழுகையின் ஒரு பகுதியச இல்லை சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்தபின் ஒதுவதா என்பதில் ஒத்த கருத்து இல்லை
அதுபோல் சொல்லும் பொருளும் வேறு வேறு நூல்களில் மாறுபட்டு வரும் )
ஒரு வழியாக சலாம் கொடுத்து தொழுகையை நிறைவேற்றிய பின் ஓத வேண்டிய துவாக்கள் நிறையவே இருக்கின்றன உங்கள் எண்ணம் போல் எதையும் இறைவனிடம் கேட்கலாம்
துவாக்களை இறைவனுக்கு மிகவும் பிடித்த சஜ்தா நிலையில் இருந்து கேட்பது சிறப்பு என்பார்கள்
தொழுதபின்
சுபஹான்ல்லஹி
(இறைவன் தூய்மையானவன்) ---33 முறை
அல்ஹம்துலில்லாஹி
(எல்லாபுகழும் இறைவனுக்கே ) -33 முறை –
அல்லாஹு அக்பர்
(இறைவன் மிகப்பெரியவன் ) 34 முறை
ஓதுவது வழக்கம்
இனி சென்ற பகுதி வினாவுக்கு விடை ,விளக்கம்
வினா
சஜ்தா சூராஹ் ஓதும்போது செய்யும் ஒற்றை சஜ்தாவில் என்ன ஓத வேண்டும்
விடை
அல்லாஹூம்-மக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஜ்பர்னீ, வா ஆஃபினீ, வார்ஸுக்னீ, வர்ஃபனீ'
விளக்கம் :
'யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக, என் மீது கருணை காட்டுவாயாக, என்னை வழிநடத்துவாயாக, என்னை வளப்படுத்துவாயாக, எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக, எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக, என் பதவியை உயர்த்துவாயாக'
இது சகோ சிராஜுதீன் அனுப்பிய விடை
சரியான விடை,
வாழ்துகள் பாராட்டுகள்
இணையத்தில் நிறைய விடைகள் காணப்படுகின்றன
நிறைவாக இன்றைய வினா
தொழுது கொண்டிருக்கும்போது
மீண்டும் உது செய்ய வேண்டியது போல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும் ?
இறைவன் நாடினால் நாளை விடை, விளக்கத்துடன் தொழுகையின் நிறைவுப் பகுதியில் சிந்திப்போம்
06 ச fபர் (2) 1445
24 08 2023 வியாழன்
சர்புதீன் பீ