Saturday, 5 August 2023

தமிழ் (மொழி) அறிவோம் (காசறு) விரை (யே)

 



தமிழ் (மொழி) அறிவோம்

(காசறு)
விரை (யே)
06082023 ஞாயிறு
இரண்டே எழுத்துகளில் ஒரு சிறிய சொல்
பல பொருட்கள் – அதில் ஓன்று பூந்தேன்
இனப்பெருக்கத்துடன் தொடர்புள்ள சொல்
காப்பியப் பாடல் ஒன்றில் இந்த சொல் முற்றிலும் வேறு பொருளில் வருகிறது
புகழ் பெற்ற அந்தப்பாடல் வரிகள் ஒரு திரைப்பாட்டிலும் வருகிறது
அது என்ன சொல் ?
பாடல் என்ன ?
காப்பியம் எது ?
(திரைப்படப் பெயர் வேண்டாம் )
சொல்லின் இரண்டு எழுத்துக்களும் வல்லினம் மெல்லினம் இரண்டுக்கும் நடுவே
விடை, விளக்கம்
அதற்கு முன்
நம்ப முடியாத ஒரு நிகழ்வு
இது வரை யாரும் சரியான விடை அனுப்பவில்லை
என் வினாவில் எதோ தவறோ என்றெண்ணி திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன் எல்லாம் சரியாகத்தான் தெரிகிறது
பிறகெப்படி – இவ்வளவு தமிழறிஞர்கள் இருந்தும் – எனக்குத் தெரியவில்லை புரியவில்லை
சொல் – விரை = நறுமணம்; கோட்டம்; துருக்கம், தகரம், அகில், சந்தனம்என்னும்ஐவகைமணப்பண்டம்; நறும்புகை; கலவைச்சாந்து; பூந்தேன்; மலர்விதை; அண்டபீசம் )தமிழ் தமிழ் அகரமுதலி)
பாடல்
மாசறு பொன்னே வலம்புரி முத்தே
காசறு விரையே கரும்பே தேனே
அரும்பெறற் பாவாய் ஆருயிர் மருந்தே---------
இங்கு விரை என்பது நறுமணப் பொருளைக் குறிக்கிறது
காப்பியம் சிலப்பதிகாரம்
கண்ணகியின் அழகை வர்ணித்து கோவலன் பாடுவதாய் அமைந்த ஒரு சிறந்த பாடல்
இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை
இன்னுமே எனக்கு விளங்கவில்லை விடைகள் வராத காரணம்
சிறிய முயற்சி செய்த சகோ ஹசன்லி, விஸ்வநாதனுக்கு நன்றி
இறைவன் நாடினால் மீண்டும் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௫௦௮௨௦௨௩
06082023 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment