இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 7 தொழுகை 3 உடல் சுத்தி
சென்ற பகுதியின் வினாக்கள்
1 பாங்கு சொல்பவர் சொல்லுமுன் “ பிஸ்மில்லாஹ்-------“
ஓத வேண்டுமா ?
2 ஹய்ய அலல்ஃபலாஹ் என்று சொல்லும் போது ஓதும் 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்'
இதற்கு பொருள் என்ன ?
முதலில் இரண்டாம் வினா – இதில் குழப்பம் ஏதும் இல்லை
“நான் இருந்துகொண்டிருக்கின்ற இந்நிலையிலிருந்து தொழுகைக்குச் செல்வதற்கோ, அதற்காகச் சக்தி பெறுவதற்கோ அல்லாஹ்வைக்கொண்டே தவிர எனக்கு முடியாது!” என்பதுதான் இதன் அர்த்தமாகும். மனிதன் தன் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக உதவி வேண்டிப் பிரார்த்திக்கும் ஓர் வார்த்தைப் பிரயோகமே இந்த 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்!' எனும் வார்த்தைப் பிரயோகமாகும்
இந்த விளக்கமான விடையை அனுப்பிய சகோ சிராஜுதீனுக்கு நன்றி
அடுத்து பாங்குக்குக் முன் பிஸ்மில்லாஹ்
இதில் ஒருமித்த இல்லை என்றாலும் பெரும்பாலோர் கருத்து தேவை இல்லை என்பதுதான்
புனித காபாவில் பாங்கு சொல்லும் காணொளிக் காட்சிகள் எதிலும் பிஸ்மில்லாஹ் சொல்வது போல் இல்லை
வந்த இரு விடைகளில் ஒன்று பிஸ்மிலாஹ் வேண்டாம் என்றும் மற்றது வேண்டும் என்றும் சொல்கிறது
விளக்கமான விடை அளித்த சகோ சிராசுதீனுக்கு மீண்டும்
நன்றி
தேவை இல்லை என்ற சரியான விடை அனுப்பிய சகோ
தல்லத்துக்கு
வாழ்த்துகள்
பாராட்டுகள் அவர் அனுப்பிய விடை
பாங்கு சொல்வதற்கு முன் பிஸ்மி கூற வேண்டுமென்பதற்கான ஆதாரம் ஏதும் இருப்பதாக தெரிய வில்லை.
.
சகோ சிராஜுதீன்
1) பாங்கு என்பது "அல்லாஹு அக்பர்" என்று தொடங்குகிறது, எனவே பாங்கு என்றால் முதல் வார்த்தையில் அல்லாஹ்வின் பெயர் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளின் மூலம் நாம் செய்யும் அனைத்திற்கும் முன் பிஸ்மில்லாஹ் கூறுவது என்ற அடிப்படையில் முஸ்லீம்கள்
எந்த வேலையையும் செயலையும் "பிஸ்மில்லாஹ்" மூலம் தொடங்குகிறார்கள், அதனால் 'முஅத்தீன்' உரத்த அஸானைத் தொடங்கும் முன் "பிஸ்மில்லாஹ்" என்று கூறுகிறார். ஆனால் சத்தமாக சொல்ல தேவையில்லை, ஏனென்றால் அஸான் வெளிப்பாட்டின் மூலம் வந்தது, எனவே அதன் உரை “அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்” என்று தொடங்குகிறது.
பிஸ்மில்லாஹ் கூற வேண்டும்
இனி இன்றைய தலைப்புக்குப் போவோம்
தொழுகைக்கு முன்பு கட்டாயமாக செய்யவேண்டிய உடல் சுததிக்கு அரபுச் சொல்
الوضوء al-wuḍūʼ
இது தமிழில் உது ,உழு ,ஒலு , ஒது என பலவாறாக வருகிறது
உதுவின் பர்ளுகள் , சுன்னத்துகள் , செய்முறை, உதுவை முறிப்பவை எல்லாம் பற்றி நூல்களிலும் காணொளிக் காட்சிகளிலும் நிறையவே வருகின்றன
எனவே நான் அதில் புகுந்து குழப்ப விரும்பவில்லை
வுது பற்றிய திருமறை வசனங்கள்
+----------------இன்னும் தூய்மையாக இருப்போரையும் (இறைவன் நேசிக்கின்றான்.” (அல் பகரா 2:222)
5:6. முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) –
குளிக்கக் கடமைப் பட்டோராக இருந்தால் குளித்து(த் தேகம் முழுவதையும் சுத்தம் செய்து)க் கொள்ளுங்கள்; தவிர நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் இயற்கை அழைப்பை கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டி)ருந்தாலும் (உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள்; அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவைகளால் உங்கள் முகங்களையும், உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களை வருத்தக் கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்பவில்லை - ஆனால் அவன் உங்களைத் தூய்மைப் படுத்தவும்; இன்னும் நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு, தனது அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் விரும்புகிறான். ( அல் மாயிதா 5:6)
இந்த5:6 வசனத்தில் சொல்லப்படும்
முகம், கைகள், தலை , கால்கள் கழுவது உதுவின் கட்டாயக் கடமை (பர்ளு ) ஆகும்
வுது என்பது பகுதி உடல் சுத்தி என்றும்
குஸ்ல்Ghusl (Arabic: غسل
(குளியல் ) என்பது முழு சுத்தி என்றும் சொல்லப்படுகிறது
தயம்மும் Tayammum (Arabic: تيمم)
என்றஅரபுச் சொல்லுக்கு நோக்கம் என்று பொருள்
இது தண்ணீர் கிடைக்காதது போன்ற சூழ் நிலைகளில் தூயமையான மண்ணைக் கொண்டு செய்யப்படும் உலர் உடல் சுத்தியைக் குறிக்கிறது
வுது பற்றி சிறப்பாகச் சொல்லப்படும் சில செய்திகள்
காது மடலின் பின்புறம் , கைகளை கீழிருந்து மேலாகக் கழுவுவது ,
கைகால் விரல்களுக்கிடையில் கழுவுவது ,
நாசியில் நீர் ஏற்றுவது
பிடரியை நனைப்பது போன்றவை உடல் மன நலம் பேணுவதில் பெரும்பங்கு வகிப்பதாகச் சொல்லப்படுகிறது
தொழுகை பற்றிய பதிவை இன்று போட எண்ணியிருந்தேன்
ஆனால் சென்ற பகுதி வினா விடை, வுது இரண்டும் சேர்ந்து சற்று நீளமாக வந்து விட்டது
எனவே இத்துடன் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்
வழமை போல் சிறிய வினாக்கள்
1 ஒரு நாளில் கட்டாயத் தொழுகை( பர்ளு) எத்தனை ரக் அத் தொழ வேண்டும் ?
2 அதில் அமைதியாகத் தொழுவது எத்தனை ரக் அத் ?
என்ன இவ்வளவு எளிதான வினாக்கள் என்று புருவத்தை உயர்த்துகிறீர்களா ?
இறைவன் நாடினால் விடைகள், விளக்கங்களுடன் நாளை சிந்திப்போம்
22 முஹர்ரம்(1) 1445
10 072023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment