தமிழ்( மொழி) அறிவோம் குற்றாலக் குறவஞ்சி
13082023 ஞாயிறு
“சங்கம் தோற்றாள்
சடைகொண்டான் உடைதான் கொண்டு “
விடை
திரி கூட ராசப்பக் கவிராயர் இயற்றிய
திருக் குற்றாலக் குறவஞ்சியில் வரும் பாடல்
சரியான விடை எழுதி வாழ்த்து , பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் –முதல் சரியான விடை
ராஜாத்தி
ஹசன் அலி
கணேச சுப்ரமணியம்
ஷர்மதா
சிவசுப்ரமணியம் &
தல்லத்
பலரும் விளக்கமான விடை அனுப்பியிருக்கிறார்கள்
நன்றி
என் வேலை எளிதாகிறது
குறிப்பாக சகோ கணேச சுப்ரமணியம் இரண்டு விதமான விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்
சிறப்பு நன்றி அவருக்கு
உங்கள் விடைகள்:
கணேச சுப்ரமணியம்
குற்றாலநாதர் பிற தெய்வங்களை படைகலன்களாக்கி தேரேறி திரிபுரம் எரிக்க செல்லுங்கால் ஈஸ்வரனை காணும் குமரி அவரது அரை நிர்வாண கோலத்தை கண்டு தன் உடை/சேலையை தந்து தேர் சென்ற பாதையில் மண்ணில் வீழ்ந்து வணங்கினாள் என்றொரு உரை..
.(2) தலைவனை நேரில் கண்ட நங்கை, மோகத்தீ தாக்க தன் கை வளையும், சேலையும் நழுவ தன்னை கீழே விழுந்து மண்ணில் தன் உடல் (மண்ணை ஆடையாக் கொண்டாள்) மறைத்தாள்.
சிராஜுதீன் & ராஜாத்தி
நடைகண்டால் அன்னம் தோற்கும்
நன்னகர் வசந்த வல்லி
விடைகொண்டான் எதிர்போய்ச் சங்க
வீதியிற் சங்கம் தோற்றாள்
சடைகொண்டான் உடைதான் கொண்டு
தன்னுடை கொடுத்தாள் ஐயன்
உடைகொண்ட வழக்குத்தானோ
ஊர்கின்ற தேர்கொண்டாளே (12)
வசந்தவல்லி அன்னம் தோற்கும் நடை கொண்டவள்.
குற்றாலநாதர் உலா வரும் சங்க வீதியில் தன் சங்கினை (வளையலை) தோற்றாள்.
சடைகொண்டான் உடை அம்பரம். (வெளி)
வசந்தவல்லி சிவன் உடையை வாங்கிக்கொண்டாள். (உடை நழுவி உடல் அம்மணம் ஆனாள்)
அதனால் அவன் தேர் ஊரும் மண்ணில் விழுந்தாள்.
திருக்குற்றாலக் குறவஞ்சி இசைப்பாடல்களுடன் பாடிய நாடகத் தமிழ் நூல்.rajathi
இதனைப் பாடியவர் மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர்
இவர் காலம் 17 ஆம் நூற்றாண்டு.
சிவசுப்ரமணியன்
:- திருக்குற்றாலக் குறிஞ்சியில், தோழியர் புலம்பல் பகுதியில் உள்ள 18ஆம் பாடலில் இந்தப் பகுதி வருகிறது.
பொருள் :
நல்ல ஊரைச் சேர்ந்த, அன்னமும் தோற்கக் கூடிய நடையை உடைய வசந்தவல்லி, காளையை வாகனமாக உடைய சிவன் முன்னால் போய் தன் மனம் இழந்தாள். அவன் உடையைத் தான் வாங்கிக் கொண்டு, தன் உடையை அவனுக்குக் கொடுத்தாள். அதனால்தானோ என்னவோ, ஊர்கின்ற தேரைப் பெற்றாள்.
ஷர்மதா
எழுதியவர்:- திரிகூடராசப்பக்கவிராயர்.இவர் எழுதிய முதல் குறவஞ்சி நூல் இது.
இவர் குற்றால நாதரை
பாட்டுடைத்தலைவனாகவும் வசந்தவள்ளியை குற்றாலநாதன் மேல்காதல்கொள்ளும்
தலைவியாகவும் கொண்ட தெய்வத்தின் மீதான பாடல்கள் இயற்றியுள்ளார்.
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௧௨௦௮௨௦௨௩
13 082023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment