இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
10 தொழுகை 6
சென்ற பகுதியின் நிறைவாக இரண்டு சிறிய வினாக்கள்
ஜமாஅத் எனும் கூட்டுத் தொழுகையில்
1. தொழுது கொண்டிருக்கும் ஒருவர் மயங்கி விழுந்து விட்டால்
2. தொழுகை நடத்தும் இமாம் மயங்கி விழுந்து விட்டால்
என்ன செய்யவேண்டும் ?
விடை
1 தொழுது கொண்டிருக்கும் ஒருவர் மயங்கி விழுந்து விட்டால்
தேவைக்கேற்ப அவர் அருகில் தொழுது கொண்டிருக்கும் ஒரு சிலர் தங்கள் தொழுகையை விட்டு விட்டு விழுந்தவரை மீட்டு அவருக்கு உதவிகள் செய்யவேண்டும்
நிறைவேறாத அவர்கள் தொழுகையை பின்பு தொழுது நிறைவு செய்ய வேண்டும்
மற்றபடி கூட்டுத் தொழுகை தொடர்ந்து இடைவெளியின்றி நடை பெறும்
(இது ஒரு ஜூம்மா உரையில் காதில் விழுந்தது )
2 இமாம் மயங்கி விழுந்து விட்டால்
இது போன்று ஒரு இமாம் தொழுகை நடத்தும் போது அவருக்கு ஏதேனும் தடங்கள் ஏற்பட்டால் தொழுகையை இடை நிறுத்தாமல் உடனடியாக அவருக்குப்பின் நிற்பவர் அவருடைய இடத்தில் நின்று தொழுகையை நடத்த வேண்டும்
இதற்கு
الاستخلاف في الصلاة
என்று சொல்வார்கள்
வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்துள்ளது
அமீருல்மூஃமினீன்
உமர் (ரழி)அவர்கள் இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது கத்தியால் குத்தப் பட்டார்கள்
அவர்கள் மயக்கம் வரும் நிலையிலும் தன் இடத்திலிருந்து பின் வாங்கி அவர்களுக்குப் பின்னால் நின்றிருந்த நபித்தோழர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் (ரழி) அவர்களின் கையைப்பிடித்து தான் நின்றிருந்த இடத்தில் நிறுத்தினார்
இப்னு அவ்ப்(ரழி) அவர்கள் தொழுகையைப் பூர்த்தி செய்தார்கள்
(புகாரி 3700).
அண்மையில் புனித மக்கா ஹரம்ஷரீபில் ஜுமுஆ தொழுகை நடத்திய ஷைக் மாஹிர் முஹைகிலி (ஹபிழஹுல்லாஹ்) அவர்கள்
உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதின் காரணமாக பாதிஹாசூராவில் இஹ்தினாஸ்ஸிராத்த் என்று ஓத ஆரம்பித்த பொழுது மயங்கிவிட்டார்கள்.
உடனடியாக முன்வரிசையில் இருந்த ஷைக் அப்துர்ரஹ்மான் அஸ்ஸுதைஸ் ஹபிழஹுல்லாஹ்
அவர்கள் இமாம் நிற்குமிடத்திற்குச் சென்று ஷைக் மாஹிர் தொடங்கிய வசனத்திலிருந்து தொடங்கி தொழுகையை பூர்த்தி செய்தார்கள்.
சரியான விடை அனுப்பிய சகோ
சிராஜுதீனுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
இனி தொழுகை பற்றி பொதுவான சில செய்திகலைப் பார்ப்போம்
கத்காமதிஸ்ஸலா ()
இகாமத் என்பது கூட்டுத் தொழுகைக்கான இரண்டாவது அறிவிப்பு
பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகைக்கு முன்பு
இகாமத் சொல்லி தொழுகையைத் துவங்க வேண்டும். இகாமத் என்பது பாங்கைப் போன்றது தான். எனினும் அதில் சில மாற்றங்கள் உள்ளன.
பாங்கின் வாசகங்களை இரட்டையாகவும் கத்காமதிஸ்ஸலாஹ் என்பதைத் தவிர மற்ற வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.
நூல்கள்: புகாரீ 605, முஸ்லிம் 569
இகாமத்தின் வாசகங்கள்
---------ஹய்ய அலல் ஃபலாஹ்
என்ற வரிக்குப்பின்
“கத்காமதிஸ்ஸலாஹ் கத்காமதிஸ்ஸலாஹ்”
என்று ஒரு வரி வரும்
“தொழுகை துவங்கிவிட்டது” என்று இதற்குப் பொருள்
எல்லா அமல்களுக்கும் நிய்யத் என்பது அவசியம் என்று முன்பு பார்த்தோம்
தொழுகையின் நிய்யத்
“லுஹ்ர் தொழுகையின் பர்லான நாலு ரக்கத்தை அல்லாவுக்கா
கிப்லாவை நோக்கித் தொழுகிறேன் “
இது போல் எந்த நேரத்து தொழுகை , பர்லா சுன்னத்தா , எத்தனை ரக்கத் என்பதைக் குறிப்பிட்டு அல்லாவுக்காக கிப்லாவை நோக்கித் தொழுகிறேன் என்று நிய்யத் மனதால்,, வாயால் சொல்லவேண்டும்
பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகையில் “இந்த இமாமோடு “என்று சேர்த்துக் கொள்ளவேண்டும்
பிறகு அல்லாஹு அக்பர் ( இறைவன் மிகப் பெரியவன் )
என்று தக்பீர் கட்டிக்கொள்ள வேண்டும்
தக்பீர் கட்டியதில் இருந்து சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்யும் வரை அரபு மொழிக்கு மட்டுமே அனுமதி
பொருள் புரிந்தால் மனதில் நன்றாகப் பதிந்து தொழுகையில் முழு கவனம் செலுத்தவே தமிழில் பொருள் சொல்கிறேன்
தக்பீர் கட்டியவுடன் ஸனா ஓதவேண்டும்
'ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக வதபாரகஸ்முக வதஆலாஜத்துக வலாயிலாஹ கைருக''
பொருள் { எங்கள் இறைவனே நீ மிகவும் தூய்மை ஆனவன்
உன் புகழைக் கொண்டு உன்னை போற்றுகிறேன்
உன் திருப்பெயர் மிகவும் புனிதமானது
உன்னுடைய கண்ணியம் உயர்வானது
உன்னைத்தவிர வணக்கத்துக்குரிய நாயன் யாருமில்லை
ஸனாவுக்குப்பின்
"அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் ..
பொருள் : விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாவிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்
'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்”
அருளாளனும் அன்பாளானுமாகிய அல்லாவின் திருப் பெயரைக் கொண்டு துவங்குகிறேன்
என்று ஓத வேண்டும்
ஒரு வழியாகத் தொழுகை துவங்கி விட்டது
முதலில் அல்ஹம்து சுராஹ் ,ஓதியதும்
மெதுவாக ஆமீன் சொல்லவேண்டும்
(ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும்)
அடுத்து ஒரு துணை சூராஹ் ஓதியபின் அல்லாஹு அக்பர் என்று சொல்லி குனிந்து ருக்கு வுக்குச் செல்லவேண்டும்
அந்த நிலையில்
“ஸுப்ஹான ரப்பியல் அலீம்” என்று மூன்று முறை ஓதவேண்டும்
இதன் பொருள்
மகத்தான என் இறைவனை மிகப் பரிசுத்தப் படுத்துகிறேன்
பிறகு
ஸமி அல்லாஹு லிமன் ஹமித ஹ்
( தன்னைப் புகழ்வதை இறைவன் கேட்டுக் கொள்கிறான்)
என்றபடி நிமிர்ந்து
அல்லாஹும்ம ரப்பனா லக்கள் ஹம்து (எல்லாப் புகழும் இறைவனுக்கே )
என்று சொன்னபின் தரையில் நெற்றி படும் சஜ்தா நிலைக்குப் போக வேண்டும்
அந்த நிலையில்
ஸுப ஹான ரப்பியல் அலா (உயர்வான என் இறைவனை துதிக்கிறேன் )
என்று மூன்று முறை ஓத வேண்டும்
பிறகு அல்லாஹு அக்பர் என்ற்று சொல்லி தலையை நிமிர்த்தி அமர்ந்து மீண்டும் சஜ்தா செய்து மூன்று முறை ஸுப ஹான ரப்பியல் அலா
ஓத வேண்டும்
இப்பொழுது முதல் ரக் அத் தொழுகை நிறைவேறி விட்டது
அடுத்து ?
அடுத்த பகுதியில் இறைவன் நாடினால்
நிறைவாக ஒரு வினா
குர்ஆனில் சஜ்தா சூராக்கள் சில இருக்கின்றன
வீட்டில் தொழுகும்போது பெரும்பாலும் அவற்றை ஓத மாட்டோம்
பள்ளி வாசலில் கூட்டுத் தொழுகையில் வெள்ளிக்கிழமை காலை
பாஜர் தொழுகையின் இமாம் இதில் எதாவது ஒரு சூராவை ஓதுவது வழக்கம்
அது போல் புனித ரமலான் மாத இரவு சிறப்புத் தொழுகையில் சஜ்தா சூராக்கள் எல்லாம் வரும்
அப்படி ஓதும்போது சஜ்தா என்ற சொல் வரும் ஆயத்து ஒதிச பின் இமாம் அல்லாஹு அக்பர் என்று சொல்லி சஜ்தாவுக்குப் போய்விடுவார்
அதோடு அவவரைப் பின்பற்றி ஜமாத்தார் அனைவரும் சஜ்தாவுக்குப் போகவேண்டும்
மீண்டும் இமாம் அல்லாஹுஅக்பர் சொல்லி எழுந்தவுடன் நாமும் எழுந்து நிற்கும் நிலைக்கு வந்து விடுவோம்
இதில் ஒரு முறை மட்டுமே சஜ்தா செய்வோம்
அந்த சஜ்தாவில் என்ன ஓத வேண்டும் ?
இறைவன் நாடினால் விடை விளக்கம் அடுத்த வாரம்
அதே இறைவன் நாடினால் நாளை தமிழில் சிந்திப்போம்
இ(க)டைச்செருகல்
தொழுகையில் ஓதப்படும் வரிகளுக்கு தமிழ் பொருள் சொல்லவே இந்தப் பதிவு
எனவே தொழுகையின் நிலைகள் போன்ற செய்திகளை நான் சொல்லவில்லை
30 முஹர்ரம்(1) 1445
18 08 2023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment