இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
11 தொழுகை 7
முதல் ரக் அத் தொழுகை வரை சென்ற பகுதியில் பார்த்தோம்
அடுத்து நிற்கும் நிலைக்கு வந்து இரண்டாவது ரக் அத் முதல் ரக் அத்போலவே தொழுக வேண்டும்
பஜர் போல இரண்டு ரக அத் தொழுகை என்றால் இரண்டாவது ரக் அத்தில் இரண்டு சஜ்தாவுக்குப்பின் இருப்பில் உட்கார வேண்டும்
கீழே உள்ளவற்றை ஒத வேண்டும்
1 அத்தஹியாத்து துவா
2 தருதே இப்ராஹீம்
3 து ஆயே மஸுராஹ்
அதன் பின் வலது பக்கமும் பின் இடது பக்கமும் முகத்தைத் திருப்பி
“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்”
(உங்கள் மீது சாந்தியும் இறைவனின் அருளும் உண்டாவதாக)
(இரு தோள்களிலும் இருக்கும் வானவர்களுக்கு சலாம் சொல்கிறோம் )
என்று ஒதி தொழுகையை நிறைவு செய்யவேண்டும்
இதுவே 3 ரக் அத் (மக்ரிப் )தொழுகை அல்லது 4 ரக் அத் தொழுகை ( லுஹர் . அசர் , இஷா ) தொழுகை என்றால் இரண்டாம் ரக் அக்கதுக்குப்பின் அத்தஹியாத்து துவா மட்டும் ஓதி விட்டு பின் நிற்கும் நிலைக்கு வந்து மற்ற ரக் அத்துகளை நிறைவு செய்த பின்
அத்தஹியாத்து துவா தருதே இப்ராஹீம் து ஆயே மஸுராஹ் மூன்றும் ஓதி சலாம் சொல்லி தொழுகையை நிறைவு செய்யவேண்டும்
பர்ளு தொழுகையில் முதல் இரண்டு ரக் அத்தில் அல்ஹம்து சூராவோடு துணை சூராஹ் ஓத வேண்டும்
அத்தஹியாத்து துவா , தருதே இப்ராகிம் இரண்டிற்கும் ஏற்கனவே பொருள், விளக்கம் எழுதி இருக்கிறேன்
இருந்தாலும் மீண்டும் தருகிறேன்
1 அத்தஹியாத்து துவா
அத்-தஹிய்யாது லில்லாஹி வ-ஸலவது வ'த்-தய்யீபத், அஸ்-ஸலாமு 'அலைகா அய்யுஹா'ன்-நபியு வ ரஹ்மத்-அல்லாஹி வ பரகாதுஹு. அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாத்-இல்லாஹ் இஸ்-ஸாலிஹீன். அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் 'அப்துஹு வ ரசூலுஹு
“இதில்
அஷ்ஹது அல்லா இலாஹ
என்று சொல்லும்போது வலது கை ஆள்காட்டி (கல்யா) விரலை உயர்த்தி
இல்லல்லாஹ்
என்று சொல்லும்போது விரலை இறக்கி விட வேண்டும்
கருத்து
சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன.
நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக.
எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.
அத்தஹியாத் துவா பற்றி ஒரு சிறப்பான விளக்கம் – ஒரு ஜூம்மா உரையில் காதில் விழுந்தது – பலமுறை எழுதியிருக்கிறேன் - நல்ல செய்திகளைத் திரும்ப சொல்வதில் தவறில்லை
“ நபி ஸல் அவர்கள் மிராஜ் பயணத்தின்போது எல்லாம் வல்ல இறைவனை சந்தித்து
“சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும், வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. “
என்று தன் வணக்கத்தைத் தெரிவிக்கிறார்கள்
உடனே இறைவன்
நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக
என்று நபியை வாழ்த்துகிறான்
நபி ஸல் அவர்கள் இறைவனின் வாழ்த்தைகூட தனக்கென வைத்துக்க்கொள்ளாமல்
எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்
என்று சொல்லி இறைவனின் நல்லடியார்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறார்கள்
“இதைப்பார்த்து வியந்த வானவர்கள் ஒருமித்த குரலில் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் “
என்று சொல்கிறார்கள்
2 தருதே இப்ராஹீம் (இப்ராகிம் சலவாத்)
இதுவும் முன்பே விளக்கியதுதான்
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜீது - வபாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் - கமா பாரக்த அலா இப்ராஹும வஅலா ஆலி இப்ராஹும இன்ன(க்)க ஹமீதுன் மஜுது .
கருத்து
“இறைவா, இப்ராஹீம் , இப்ராஹிமின் குடும்பத்தார் மீது உனது அருட்கொடையை பொழிந்தது போல முஹம்மது மீதும், முஹம்மதுவின் குடும்பத்தினர் மீதும் உனது அருட்கொடையை வழங்குவாயாக, நீ போற்றத்தக்கவன், மகத்தானவன்.
இறைவா , இப்ராஹீமையும் இப்ராஹிமின் குடும்பத்தாரையும் ஆசீர்வதித்தது போல் முஹம்மதுவையும் முஹம்மதுவின் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாயாக “
3 து ஆயே மஸுராஹ்
அல்லாஹும் மங் f பிர்லி வலிவாலிதய்ய வலி உஸ்தாதி
வலி ஜமீ இல் முக்மிநீன வல் முக்மினாத்தி வல் முஸ்லிமீன
வல் முஸ்லிமாத்தி அல் அஹ்யாஇ மின்ஹும் வல் அம்வாத்தி இன்னக்க முஜிபுத் த அவாத்தி பிரஹ் மத்திக்க யா அற்ரகுமாராஹிமீன்
கருத்து
எங்கள் இறைவனே என்னுடைய தாய் தந்தைக்கும் ,ஆசிரியருக்கும் ,மூமினான முஸ்லிமான ஆண் பெண்களுக்கும் வாழ்பவர்களுக்கும் ,மறைந்ந்தவர்களுக்கும் பாவ மன்னிப்பு அருள்வாயாக
நிச்சயமாக நீ பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்பவன்
உன்னுடைய அருளைக் கொண்டு எங்களை மன்னிப்பாயாக
(இந்த துவா தொழுகையின் ஒரு பகுதியச இல்லை சலாம் கொடுத்து தொழுகையை நிறைவு செய்தபின் ஒதுவதா என்பதில் ஒத்த கருத்து இல்லை
அதுபோல் சொல்லும் பொருளும் வேறு வேறு நூல்களில் மாறுபட்டு வரும் )
ஒரு வழியாக சலாம் கொடுத்து தொழுகையை நிறைவேற்றிய பின் ஓத வேண்டிய துவாக்கள் நிறையவே இருக்கின்றன உங்கள் எண்ணம் போல் எதையும் இறைவனிடம் கேட்கலாம்
துவாக்களை இறைவனுக்கு மிகவும் பிடித்த சஜ்தா நிலையில் இருந்து கேட்பது சிறப்பு என்பார்கள்
தொழுதபின்
சுபஹான்ல்லஹி
(இறைவன் தூய்மையானவன்) ---33 முறை
அல்ஹம்துலில்லாஹி
(எல்லாபுகழும் இறைவனுக்கே ) -33 முறை –
அல்லாஹு அக்பர்
(இறைவன் மிகப்பெரியவன் ) 34 முறை
ஓதுவது வழக்கம்
இனி சென்ற பகுதி வினாவுக்கு விடை ,விளக்கம்
வினா
சஜ்தா சூராஹ் ஓதும்போது செய்யும் ஒற்றை சஜ்தாவில் என்ன ஓத வேண்டும்
விடை
அல்லாஹூம்-மக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஜ்பர்னீ, வா ஆஃபினீ, வார்ஸுக்னீ, வர்ஃபனீ'
விளக்கம் :
'யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக, என் மீது கருணை காட்டுவாயாக, என்னை வழிநடத்துவாயாக, என்னை வளப்படுத்துவாயாக, எனக்கு ஆரோக்கியத்தை வழங்குவாயாக, எனக்கு வாழ்வாதாரத்தை வழங்குவாயாக, என் பதவியை உயர்த்துவாயாக'
இது சகோ சிராஜுதீன் அனுப்பிய விடை
சரியான விடை,
வாழ்துகள் பாராட்டுகள்
இணையத்தில் நிறைய விடைகள் காணப்படுகின்றன
நிறைவாக இன்றைய வினா
தொழுது கொண்டிருக்கும்போது
மீண்டும் உது செய்ய வேண்டியது போல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும் ?
இறைவன் நாடினால் நாளை விடை, விளக்கத்துடன் தொழுகையின் நிறைவுப் பகுதியில் சிந்திப்போம்
06 ச fபர் (2) 1445
24 08 2023 வியாழன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment