தமிழ் (மொழி) அறிவோம்
யாதும் ஊரே ----
-
20082023 ஞாயிறு
நெருப்புப் போன்ற மின்னலையும் தருகிறது
என்ற பொருள் கொண்ட வரிகள் வரும் பாடல், நூல் எது ?
வழக்கம்போல் மிக எளிதான வினா
இந்த வாரமும் தமிழுக்கு இதுவரை விடை கிடைக்க வில்லை
வினா தவறோ என்ற ஐயம் வருகின்றது
விடை
உலக அளவில் புகழ் பெற்ற புறநானூற்றுப் பாடல்
“ யாதும் ஊரே யாவரும் கேளிர் “
இப்போதுதான் முதல் சரியான விடை வந்தது
வாழ்த்துகள் பாராட்டுகள் சகோ
சிராசுதீனுக்கு
விளக்கமான விடைக்கு நன்றி
புறநானூறு – 192
பாடியவர் – கணியன் பூங்குன்றனார்
2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பாடலாகும்.
பாடல் :
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே,
வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே
முனிவின் இன்னா தென்றலும் இலமே
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது
திறவோர் காட்சியில் தெளிந்தனம்
ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
விளக்கம்
மின்னொடு வானம் தண்துளி தலைஇ யானாது�கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று�நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்�முறை வழிப் படூஉம் என்பது�திறவோர் காட்சியில் தெளிந்தனம்:
….இந்த வானம் நெருப்பாய், மின்னலையும் தருகிறது. நாம் வாழ மழையையும் தருகிறது. இயற்கை வழியில், அது அது அதன் பணியைச் செய்கிறது. ஆற்று வெள்ளத்தில், கற்களோடு, அடித்து முட்டி செல்லும் படகு போல, வாழ்க்கையும் அதன் வழியில் அடிபட்டுப் போய்க் கொண்டிருக்கும். 'இது இயல்பு...' என, மனத்தெளிவு கொள்ளல் வேண்டும்…..
வாழ்க்கை தத்துவத்தை ,வாழ வேண்டிய சீரிய நடை முறையை மிக எளிதாக விளக்கும் ஒரு அற்புதமான பாடல்,
வரி வரியாய் ஒவ்வொரு சொல்லும் படித்து சுவைத்து உள்வாங்க வேண்டிய பாடல்
சகோ தல்லத் அனுப்பிய விடை எனக்குப் புரியவில்லை
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
இந்தப் பாடல் பற்றி எனக்கு ஒரு தனிப்பெருமை உண்டு
இந்தப் பாடலை இயற்றிய கணியன் பூங்குன்றனாரின் சொந்த ஊரான மகிபாலன் பட்டி என்பது எங்கள் ஊருக்கு அருகில் உள்ள சிற்றூர்
அங்கு எங்கள் அத்தாவின் உடன் பிறப்பு – மைவாலம்பட்டி குப்பி – வாழ்ந்து வந்தார்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௨௦௦௮௨௦௨௩
20082023 ஞாயிறு
சர்பு தீன் பீ
No comments:
Post a Comment