Wednesday, 16 August 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் 9 தொழுகை 5 தஹஜ்ஜத்

 




இனிய இஸ்லாம்

எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
9 தொழுகை 5 தஹஜ்ஜத்
17082023 வியாழன்
சென்ற பகுதியின் வினா
தஹஜ்ஜத் தொழுகை எனும் நடு இரவுத் தொழுகை பற்றி
குர்ஆனில் எங்கு வருகிறது ?
விடை சூராஹ் அல் இஸ்ரா வசனம் 79 –(17: 79)
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
சிராஜுதீன் –முதல் சரியான விடை
தல்லத்
தன்சீலா
'இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பக் கூடும் ' (17:79)
சூராஹ் 73 அல் முஜ்ஜமில்
இதில் வரும் வசனங்களில் தஹஜ்ஜத் என்ற சொல் இல்லை ஆனால் அதைப்பற்றி
(நபியே!) இரவில் நீர் (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. (முழு இரவிலுமல்ல; அதிலொரு) சொற்ப பாகம். (அதாவது:)
அதில் பாதி (நேரம்). அதில் நீர் சிறிது குறைத்தும் கொள்ளலாம்;
அல்லது அதில் சிறிது கூட்டியும் கொள்ளலாம். (அதில்) இந்த குர்ஆனை நன்கு திருத்தமாக ஓதுவீராக.
என்ற வசனங்களில் வருகிறது (73 : 2, 3 4 )
நிச்சயமாக இரவில் எழுந்திருப்பது, (ஆத்மாவை) மிக அதிகம் பழக்கி, (அடக்கி வைப்பதுடன்) எதையும் உள்ளமும், நாவும் ஒத்துக் கூறும்படியும் செய்கிறது (73: 6)
Inna nashi-ata allayli hiya ashaddu wat-anwaaqwamu qeela
இதில் வரும் நஷியட அல்லயில் nashi-ata allayli
إِنَّ نَاشِئَةَ ٱلَّيْلِ
என்பதற்கு இரவில் சிறிது நேரம் தூங்கி எழுதல் என்று பொருள்
இதே பொருள்தான் தஹஜ்ஜத் என்ற சொல்லுக்கும்
மற்றபடி தஹஜ்ஜத் தொழுகைக்கான நேரம் எது, எத்தனை ரக் அத் , வித்ரு தொழுகை இதோடு சேர்ந்ததா , என்ன ஓத வேண்டும் , என்ன துவா என்பது பற்றி எல்லாம் நான் சொல்லவில்லை
என்னைப் பொருத்த வரையில் காலை தொழுகை பஜ்ருக்கான அழைப்பு (பாங்கு ) சொல்வதற்கு 20 நிமிடங்கள் இருக்கும்போது அதற்குள் 8 ரக அத் தொழுது விடுவேன்
அதாவது பஜர் பாங்கு 5 மணிக்கு என்றால் 4 40 க்குள் தஹஜ்ஜத் நிறைவு செய்து விடுவேன்
மற்ற தொழுகைகளில் ஓதும் சூராக்கள், துவாக்கள்தான் இதற்கும்
வித்ரு தொழுகை இரவு இஷாவோடு தொழுது விடுவேன்
இப்படிதான் பல்லாண்டுகளாகத் தொழுது வருகிறேன்
இதில் உள்ள பிழைகளை மன்னித்து இறைவன் அருள் புரிவான் என நம்புகிறேன்
இது பற்றி இறைவன் சொல்வது +
இரவு பகலைக் கணக்கிட அல்லாஹ்வால்தான் முடியும். நீங்கள் அதைச் சரிவரக் கணக்கிட முடியாதென்பதை அவன் அறிந்து (இருப்பதனால்தான்
, இரவில் இன்ன நேரத்தில், இவ்வளவு தொழவேண்டுமெனக் குறிப்பிட்டுக் கூறாது,) உங்களை அவன் மன்னித்து விட்டான்.
\
ஆகவே, (இரவில் நீங்கள் தொழுதால்) குர்ஆனில் உங்களுக்குச் சாத்தியமான அளவு ஓதுங்கள்.
ஏனென்றால், உங்களில் நோயாளிகள் இருக்கக்கூடுமென்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வின் அரு(ளாகிய பொரு)ளைத் தேடி, பூமியின் பல பாகங்களிலும் செல்ல வேண்டியதிருக்கும் என்பதையும், வேறு சிலர் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியச் செல்ல வேண்டியதிருக்குமென்பதையும் அவன் நன்கறிவான்.
ஆதலால், (உங்கள் அவகாசத்திற்குத் தக்கவாறு கூட்டியோ குறைத்தோ) உங்களுக்குச் சௌகரியமான அளவே ஓதுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான். (23: 20)
நிறைவாக இரண்டு சிறிய வினாக்கள்
ஜமாஅத் எனும் கூட்டுத் தொழுகையில்
1. தொழுது கொண்டிருக்கும் ஒருவர் மயங்கி விழுந்து விட்டால்
2. தொழுகை நடத்தும் இமாம் மயங்கி விழுந்து விட்டால்
என்ன செய்யவேண்டும் ?
விடை, விளக்கம், தொழுகைகள் பற்றிய மற்ற செய்திகளுடன் இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
இ(க)டைச்செருகள்
தஹஜ்ஜத் தொழுகைக்கு புனித காபாவிலும் மதீனாவிலும் பாங்கு சொல்வார்கள்
29 முஹர்ரம்(1) 1445
17 08 2023 வியாழன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment