Wednesday, 2 August 2023

இனிய இஸ்லாம் எளிய தமிழில் இனிய இஸ்லாம் (II) 5 தொழுகை 1 நிய்யத்6 தொழுகை 2 பாங்கு

 






இனிய இஸ்லாம்

எளிய தமிழில்

இனிய இஸ்லாம்

 

5 தொழுகை 1   நிய்யத்

 

03082023 வியாழன்   

 

நாம் அன்றாடம் அமல்களில் பயன்படுத்தும் அரபு மொழிக்கு இணையான் தமிழ் சொற்களையும் பொருளையும் பார்த்து வருகிறோம்

 

ஆனால் இதற்கு மாறாக சென்ற பகுதியின் நிறைவில்  

 

“தொழுகை –என்ற சொல்லைக் குறிக்கும் அரபுச் சொல் எது ?”

என்று கேட்டிருந்தேன்

 

அதற்கான காரணத்தை சொல்லுமுன்

 

சரியான விடை அனுப்பி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்

சகோ

நெய்வேலி ராஜா –முதல் சரியான விடை 

 

ஷர்மதா

நஸ்  ரீன்

தல்லத்

தன்சீலா

 

சரியான விடை

 

ஸலாஹ்

அதன் வேறு  வடிவங்களான  

அஸ்ஸலாஹ்,  ,சலாத்

“சலாத் “ என்ற அரபுச் சொல்லுக்கு வேர்ப்பொருள் (root meaning)  

கீழ் முதுகை வளைத்தல் “

என்று வரும்

பாரசீக மொழியில் வரும்

நமாஸ் என்ற சொல்லும் “வளைத்தல் “ என்ற வேர்ப்போருளைக் கொண்டது

இதுவே வடமொழியில் நமஸ்தே என்று வருகிறது

(An Indian Muslim Author

 Ashraf F.Nizami   mentions in his book

 Namaz ,the Yoga of Islam :--

The  root  meaning of the word  Salat ( Arabic word for Prayer ) is

to bend the lower back

The Persians translated this concept with the word

 Namaz , from a verbal root meaning

 to bow etymologically related to the word

Namaste in Sanskrit)

முதுகுத் தண்டு இலகுவாக வளைவது உடல் நலம் காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது

( You are as young as your spinal cord “ என்று சொல்வார்கள் )

இந்த விளக்கத்தை எடுத்துச் சொல்லவே தொழுகையின் அரபுச் சொல்லைப் பார்த்தோம்  

தொழுகையை  நிலை நாட்டுமாறு திருமறையில் 700 முறை வருவதாகச் சொல்லப்படுகிறது

இதிலிருந்தே தொழுகையின் சிறப்பை நாம் உணர முடியும்

தொழுகை – உடல் சுத்தி , தொழுகை அழைப்பு , நிய்யத் என பல பகுதிகள் கொண்டது

 

 

ஓன்று ஒன்றாக பார்ப்போம்

 

, நிய்யத்,

என்ற சொல்லுக்கு எளிதான பொருள்

மனதால் நினைத்தல்

 

Thought is deed

என்பது ஒரு இஸ்லாமியக் கோட்பாடு

 

அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

 

தொழுகை மட்டும் அல்ல

உடல் சுத்தி, சக்காத், நோன்பு , ஹஜ் புனிதப் பயணம் போன்ற எல்லா அமல்களுக்கும் நிய்யத் ஒரு அவசியத் தேவை ஆகிறது

 

ஒவ்வொரு நேரத் தொழுகைக்கும் தனித்தனி நிய்யத் , உடல் சுத்தியில் ஒவ்வொரு உறுப்புக்கும் – ஒவ்வொரு விரலுக்கும் கூட தனித் தனி நிய்யத் இருக்கிறது என்பார்கள்

 

மனதால் “ உடல் சுத்தி (உழு)செய்கிறேன் அல்லாவுக்காக என்று நினைத்தால் போதும் என்கிறார்கள்

அதே போல்தான் நோன்பு ,தொழுகை , சக்காத் எல்லாவற்றிற்கு,ம்

 

ஹஜ் புனிதப் பயணத்துக்கு  மனதால் நினைத்து வாயால் சொல்வது நபி வழி (சுன்னத்) என்கிறார்கள்

 

நிய்யத் பற்றி இவ்வளவு போதும் என நினைக்கிறேன்

 

 

நிறைவு செய்யமுன் ஒரு சகோ எனக்கு அனுப்பிய செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

,

 

 

 

 

பஜர் தொழுகையை முதலில் தொழுதது நபி ஆதம் அலை

லுகர்----நபி இப்ராஹீம் அலை

அசர் – நபி யாகூப அலை

மக்ரிப் –நபி தாவுத் அலை

இஷா –நபி யூனுஸ் அலை

இதுவரை நான் கேள்விபடாத செய்தி இது

 

அனுப்பிய சகோவிடம்  இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்க,

ஒரு உரையில்  (பயானில்) கேட்டது, அவரை மீண்டும் சந்தித்தால் இது பற்றி விளக்கம் கேட்டுச் சொல்கிறேன் என்றார்

 

இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்

 

கடும் சொல்பயன்பாட்டைத் தவிர்க்கவும்

 

இன்றைய வினா

எல்லோருக்கும் தெரிந்த தமிழ் மொழியில் தொழுகை அழைப்பு (பாங்கு ) சொல்லலாமா ?

 

தொழுகையும் தமிழிலே தொழுகலாமா ?

 

இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் நாளை தொழுகையில் சிந்திப்போம்

 

14 முஹ்ர்ரம்(1) 1445

03 ஆகஸ்ட் 2023 வியாழன்

சர்புதீன் பீ  









இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
6 தொழுகை 2 பாங்கு
04082023 வெள்ளி
நேற்றைய வினா
எல்லோருக்கும் தெரிந்த தமிழ் மொழியில் தொழுகை அழைப்பு (பாங்கு ) சொல்லலாமா ?
தொழுகையும் தமிழிலே தொழுகலாமா ?
விடை
அரபு மொழியில் மட்டுமே பாங்கு சொல்லவேண்டும்
தொழுக வேண்டும்
இதில் எந்த மாற்றமும் இல்லை
சரியான விடை அனுப்பிய சகோ
தல்லத்---முதல் சரியான விடை
சிராஜுதீன்
இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
நல்ல விளக்கமும் அனுப்பிய இருவருக்கும் நன்றி
முயசித்த சகோ ஷர்மதாவுக்கு நன்றி
சகோ தல்லத்:
தமிழ் மொழியில் பாங்கு சொல்லலாமா? தொழுகையும் தமிழிலே தொழுகலாமா? என்பதற்கோ பிற எந்த மொழியிலும் பாங்கு தொழுகை கூடுமா? என்பதற்கான தெளிவான ஆதாரம் உள்ளதா ?என்பது தெரியவில்லை. இங்கு வணக்க வழிபாடுகளிலும் பிற விஷயங்களிலும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவற்றைக் கற்றுத் தந்தார்களோ அவற்றில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதே நமது வழிமுறை ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தந்த துவாவினை அரபியிலேயே வேறு வார்த்தை மாற்றி கேட்க வேண்டாம் என நபிமொழி உள்ளது .
மேலும் அத்தகஹயாத்துக்குப் பிறகு தாங்கள் விரும்பிய துஆவினை கேட்டுக்கொள்ளலாம் எனவும் நபி மொழி உள்ளது .
தாங்கள் விரும்பிய துவா என்பது அவரவர் மொழியில் தானே இருக்க முடியும்.
எனவே இங்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித்தந்ததில் மாற்றம் எதுவும் இருக்கக்கூடாது, ஆகையால் மொ…
[16:05, 03/08/2023] Thallath: பாங்கு, தொழுகை, இகாமத் ஆகியவை திக்ர் சம்பந்தப்பட்டவை,
துஆ அல்லது உபதேசம் சம்பந்தப்பட்டவையல்ல, திக்ர் என்பது அரபு மொழியில் இருப்பதே சிறப்பு.
சகோ சிராஜுதீன்
பாங்கு (அதான்):
அரபியைத் தவிர வேறு எந்த மொழியிலும் 'அதான்' செல்லாது என்று பெரும்பாலான ஃபுகாஹாக்களின் (மார்க்க சட்ட அறிஞர்கள்) கருத்து உள்ளது.
இது அல்-மவ்ஸூஆ அல்-ஃபிக்ஹியாவில் (11/170) கூறுகிறது: அதானை மொழிபெயர்ப்பது: ஃபார்ஸி அல்லது அரபியைத் தவிர வேறு எந்த மொழியிலும் அதான் கொடுக்கப்பட்டால், ஹனாஃபிகள் மற்றும் ஹன்பலிகளின் படி அது செல்லத்தக்கதில்லை என்பதுதான் சரியான கருத்து. இது பிரார்த்தனைக்கான அழைப்பு என்று தெரிந்தாலும் செல்லாது. மாலிகிகளின் வெளிப்படையான பார்வையில் அவர்கள் அதானைப் பற்றி அது பரிந்துரைக்கப்பட்ட வார்த்தைகளில் இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளனர். ஷஃபாக்கள் இந்த விஷயத்தைப் பற்றி மேலும் விவாதித்து கூறினார்கள்: இது ஜமாஅத்தாக தொழுகைக்கான அழைப்பாக இருந்தால், அவர்களில் அரபு மொழியை நன்கு அறிந்தவர்கள் இருந்தால், வேறு எந்த மொழியிலும் அதான் கொடுப்பதை ஏற்க முடியாது, ஆனால் அவர்களில் அரபியை நன்கு அறிந்தவர்கள் யாரும் இல்லை, அது ஏற்றுக்கொள்ளத்தக்கது . மேற்கோள்.
காண்க: படா' அஸ்-சனா', 1/113; ad-Durr al-Muktaar ma’a Ibn ‘Aabideen, 1/485; அல்-மஜ்மூ’, 3/137; அல்-இன்சாஃப், 1/413
தொழுகை :
தொழுகையை தமிழில் தொழ முடியாது. ஏனென்றால் தொழுகையில் ஓதப்படும்
குர்ஆன் வசனங்கள், அரபியைத் தவிர வேறு எந்த மொழியிலும் படிக்க அனுமதி இல்லை என்று பெரும்பான்மையான அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதற்கான ஆதாரம் ஆயா (பொருளின் விளக்கம்): இப்னு குதாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக நாம் இதை ஒரு அரபு குர்ஆனாக இறக்கி வைத்தோம்....” (யூசுப் 12:2)
மேலும், குர்ஆன் அதன் வார்த்தைகளிலும் அதன் அர்த்தத்திலும் ஒரு அதிசயம்; அதை மொழியை மாற்றினால், அதன் உண்மையான விளக்கம் மாறி இறைவனால் இறக்கப்பட்ட குர்ஆன் ஆக இருக்காது என்பதால் அது இறக்கப்பட்ட மொழியிலேயே ஓத வேண்டும்.
(அல்-மவ்சூஹ் அல்-ஃபிக்)
ஒருவரால் அரபியில் நன்றாக படிக்க முடியவில்லை என்றால், அவர் கற்றுக்கொள்ள வேண்டும். அவரால் முடியும் போது அவர் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அவரது பிரார்த்தனை செல்லாது. அவரால் இயலவில்லை என்றால், அல்லது அடுத்த தொழுகைக்கான நேரம் முடிவதற்குள் கற்றுக் கொள்ள நேரம் இல்லை என்று அவர் பயந்தால், அல்-ஃபாத்திஹாவின் ஒரு ஆயாவை அவர் அறிந்திருந்தால், அவர் அதை ஏழு முறை திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும்… அதற்கு மேல் ஓத முடிந்தால். சூரத்துல் ஃபாத்திஹாவின் நீளத்திற்குச் சமமானதாக ஓதுவதற்குத் தேவையான அளவுக்கு அவர் அதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும், குர்ஆனை நன்றாக ஓத முடியாதவருக்கு 'அல்-ஹம்து லில்லாஹ்' என்று சொல்லும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்)'இது ஒரு ஆயாவின் ஒரு பகுதியாகும்,
அல்லாஹு தேர்ந்தெடுத்த மொழி அரேபியர்களின் மொழியாகும். அவர் தனது புனித நூலை அரேபிய மொழியில் வெளிப்படுத்தினார், மேலும் அதை அவரது கடைசி தீர்க்கதரிசிகளான முஹம்மது (ஸல்) அவர்களின் மொழி. முஸ்லிம்கள் அரபு மொழியைக் கற்க வேண்டும். ஆனால் வேறு எந்த மொழியையும் பேசுவது ஹராம் அல்ல.
எனக்குத் தெரிந்த சில செய்திகள்
இஸ்லாம் என்பது மொழி , சமுதாயம் , நாடு என்ற குறுகிய எல்லைகளைத் தாண்டி உலகளாவி பரவி நிற்பது
ரப்புல் ஆலமீன் என்பது universal application ஐக் குறிக்கிறது
இப்படி ஒரு அமைப்பில் unity ஒற்றுமை என்பது மிக முக்கியமானது
அதற்கு எல்லோரையும் இணைக்கும் ஒரு மொழி பாங்குக்கும் தொழுகைக்கும் இன்றியமையாத ஒன்றாகி விடுகிறது
விளங்குவதற்காக மட்டும் ஒரு சிறிய எடுத்துகாட்டு
நமக்கு மிக நெருங்கிய அண்டை மாநிலமான கேரளாவுக்குப் போகிறோம்
அங்கே ஒலிபெருக்கியில்
“ படச்சோன் வலியவன் படச்சோன் வலியவன் “
என்று ஒலித்தால் நமக்கு அது பாங்கு என்பது உடனே விளங்காது
எந்த ஊரில் எந்த நாட்டிலும்
“அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் “ என்ற ஒலி கேட்டால் அது பாங்கு ,
கூப்பிடு தொலைவில் பள்ளிவாசல் இருக்கிறது
இது இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்பதெல்லாம் ஒரு நொடியில் விளங்கி விடும்
அடுத்து தொழுகைக்கு வருவோம்
தொழுகை முழுக்க நாம் ஓதுவது பெரும்பாலும் திருமறை குரானின் வசனங்களே
குர்ரான் ஓதும்போது ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை என்று சொல்வார்கள்
மனதில் பதிய ஒரு எடுத்துக்காட்டு
மிக அருவருக்கத் தக்க விலங்கின் பெயர் கூட குர்ஆனில் அதை ஓதும்போது அதில் உள்ள 3 எழுத்துக்களுக்கு 30 நன்மை கிடைக்கும் என்கிறார்கள்
தொழுகையில் தவறாமல் ஒவ்வொரு ரக்அத்திலும் ஒதும் முதல் சுராஹ் அல் பாத்திஹாவில் நூறுக்குக் குறையாமல் எழுத்துக்கள் என்றால் ஆயிரம் நன்மைகள்
சிறிய சூராக்களில் ஒன்றான சுராஹ் 112 இல் 47 எழுத்துக்கள் அதாவது 470 நன்மைகள்
தமிழில் ஓதினால் இதெல்லாம் கிடைக்க வழியே இல்லை
அல்லாஹ் என்ற சொல்லுக்கு இணையான வேறு சொல் எந்த மொழியிலும் கிடையாது
இறைவனின் படைப்பான குரானை மொழி பெயர்ப்பது என்பது மனிதனால் முடியாத ஒன்று
இதையெல்லாம் கருத்தில் நிறுத்தி, அரபு மொழிதான் பாங்குக்கும் தொழுகைக்கும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
இனி பாங்கு பற்றியும் அதன் பொருள் பற்றியும் சுருக்கமாகப் பார்ப்போம்
இஸ்லாமியத் தொழுகைக்கான அழைப்பு பாங்கு என்பது
பாங்கு என்பது பாரசீகச் சொல்
அதான் என்பது அரபுசொல்
பேச்சு வழக்கில் வாங்கு
பாங்கு சொல்பவரை மோதினார் என்று சொல்கிறோம்
இது முஅத்தின் என்பதன் பேச்சுத் தமிழ் வழக்கு
உமர் ரலி அவர்கள் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்ட நபி பெருமான் சொற்படி
முதன் முதலில் பாங்கு சொன்ன பெருமை பிலால் ரலி அவர்களுக்கு
இதற்காகவே அவர் இன மக்களுக்கு இன்றும் அரபு நாட்டில் பல சிறப்புச் சலுகைகள் இன்றும் உண்டாம்
.
தொழுகைக்கான அழைப்பு (பாங்கு அல்லது அதான்)[தொகு]
”அல்லாஹு அக்பர்
2 முறை
இறைவன் மிகப் பெரியவன்
அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹ்
2 முறை –
இறைவன் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறேன்
அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்
2 முறை –
முஹம்மது இறைவனின் தூதர் என்று சாட்சி சொல்கின்றேன்
ஹய்ய அலஸ்ஸலாஹ்
2 முறை –முகத்தை வலது கைப்பக்கம் திருப்பியபடி தொழுகைக்கு விரைந்து வாருங்கள்
ஹய்ய அலல்ஃபலாஹ்
2 முறை – முகத்தை இடது கைப்பக்கம் திருப்பியபடி வெற்றியின் பக்கம் வாருங்கள் அல்லாஹு அக்பர் –
அல்லாஹு அக்பர்
2 முறை – இறைவன் மிகப் பெரியவன்
லா இலாஹ இல்லல்லாஹு –
இறைவன் ஒருவனைத் தவிர வேறு கடவுள் இல்லை.
அதிகாலை தொழுகைக்காக (சுப்ஹ்) அழைப்பு விடும்போது கீழ்வரும் வரிகளை இணைத்து அழைப்பு விடுவர்.
அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நெளம்
2 முறை - : தூக்கத்தை விடத் தொழுகை மேலானது
பாங்கிற்கு மறுமொழி கூறுதல்[
பாங்கு சொல்லும் போது அதனைக் கேட்பவர் அப்படியே திருப்பி மெதுவாக சொல்லுவார். ஹய்ய அலஸ்ஸலாஹ், ஹய்ய அலல்ஃபலாஹ் என்று சொல்லும் போது 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று சொல்லவேண்டும்
(மகத்துவமும் உயர்வும் மிக்க அல்லாவின் உதவி இல்லாமல் யாருக்கும் எவ்வித ஆற்றலும் கிடையாது)
நிறைவாக இரு சிறிய வினாக்கள்
1 பாங்கு சொல்பவர் சொல்லுமுன் “ பிஸ்மில்லாஹ்-------“
ஓத வேண்டுமா ?
2 ஹய்ய அலல்ஃபலாஹ் என்று சொல்லும் போது ஓதும் 'லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லா பில்லாஹ்'
இதற்கு பொருள் என்ன ?
இறைவன் நாடினால் அடுத்த வாரம் தொழுகையில் சிந்திப்போம்

16 முஹ்ர்ரம்(1) 1445
04 ஆகஸ்ட் 2023 வெள்ளி
சர்புதீன் பீ

 

No comments:

Post a Comment