இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
சென்ற பகுதியின் வினாக்கள்
சிறிய வினாக்கள்
1 ஒரு நாளில் கட்டாயத் தொழுகை( பர்ளு) எத்தனை ரக் அத் தொழ வேண்டும் ?
2 அதில் அமைதியாகத் தொழுவது எத்தனை ரக் அத் ?
என்ன இவ்வளவு எளிதான வினாக்கள் என்று புருவத்தை உயர்த்துகிறீர்களா ?
அதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது
முன்பு ஒரு முறை இதை விட எளிதாக
“ ஒரு நாளின் பர்லான 17 ரக்கத் தொழுகையில் எத்தனை ரக்கத்தில் சூராக்கள் சப்தமாக ஓத வேண்டும் ?”
என்று சிலரிடம் தொலை பேசியில் கேட்டேன்
எதிர் பாராத ஒரு சிலர் சரியான விடை – ஆறு – என்று சொன்னார்கள்
“இதெல்லாம் எனக்குத் தெரியாது “
“கணக்குபார்த்துச் சொல்ல நேரம் , கால்குலேடர் , பேப்பர் பேனா எல்லாம் வேண்டும் “
இதை எல்லாம் தூக்கி அடிக்கும் ஒரு விடை
“62”
சரி 6 என்பது தவறாக 62 என்று வந்துவிட்டது
என்று நான் நினக்கும்போது அடுத்து ஒரு விளக்கம்
“ எல்லாவறையும் கூட்டினால் அறுபத்தி இரண்டு வருகிறது “
இவர் எதைஎல்லாம் கூட்டினார் என்பது இன்று வரை விளங்கவில்லை
எனக்குத் தெரிந்து இந்த விடை அனுப்பியவர் விடாமல்
தொழுபவர்
யாரையும் குற்றம் சொல்லவோ, நோகடிக்கவோ இதை சொல்லவில்லை
எங்கோ அடிப்படையில் ஏதோ தவறு / குறை இருக்கிறது
அதை அறிய முயலாமால் மேலே மேலே கட்டிடம் கட்டிக்கொண்டு போகிறோம்
இதை யார் , எப்படி சரி செய்யவேண்டும் இதில் என் பங்கு ஏதாவது இருக்கறதா என்பது எனக்குத் தெரியவில்லை
அந்த ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன்
சம்பந்தப்பட்டவர்கள் please excuse me if I have hurt you.
சரி இன்றைய தலைப்பு தொழுகை பற்றி பார்க்குமுன்
வினாவுக்கு விடை
17
06
காலை பஜ்ர் 2 மதியம் லுகர் 4 மாலை அஸ்ர் 4
அந்தி மஹ்ரிப் 3 இரவு இஷா 4
மொத்தம் 17 ரக்கத் ஒரு நாளின் பர்ளு தொழுகை
அதில் அமைதியாக சூராக்கள் ஓத வேண்டியது
லுஹர் 4 அஸ்ர் 4 மஹ்ரிப் 1 இஷா 2
மொத்தம் 11
பஜ்ர் 2 , மஹரிப் , இஷா முதல் 2 மொத்தம் 6 ரக்கத்தில் சூராக்கள் ஒலியுடன் ஓத வேண்டும்
தனியாத் தொழுதாலும் கூட்டாக ஜமாஅத்தில் தொழுதாலும் இதே கணக்குதான்
சரியான விடை அனுப்பிய சகோ
ஹசன் அலி (முதல் சரியான விடை )
தல்லத்
இருவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
(இருவரும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள் )
பகுதி சரியான விடை அனுப்பிய
சகோ ஷர்மதாவுக்கு பகுதி பாராட்டு
(என் ஆதங்கம் சரிதான் என்பது மீண்டும் உறுதியாகிறது )
வுது பற்றி நிறையவே விளக்கங்கள் சொல்லும் நூல்களும் காணொளிகளும் இருக்கின்றன
அதை விட நிறையவே தொழுகை பற்றியும் இருக்கின்றன
எனவே குறிப்பாக சிலவற்றை மட்டும் இங்கு தருகிறேன்
மிக அதிகமாக திருமறையில் வலியுறுத்தி சொல்லப்படும் கடமை தொழுகை
“தொழுகை
என்ற சொல் 80 முறைக்கு மேல் வந்தாலும் 5 நேரத் தொழுகை, இத்தனை ரக்கத் போன்ற செய்திகள் தொகுப்பாக எங்கும் குர்ஆனில் வரவில்லை
நபி ஸல் அவர்கள் மிராஜ் எனும் விண்வெளிபயணம் சென்றபோது இறைவன் தொழுகை பற்றி நபி இடம் சொன்னாதாகச் சொல்லப்படுகிறது
படைத்த இறைவனுக்கும் படைப்பாகிய மனிதனுக்கும் இடையே ஒரு உரையாலாக தொழுகை அமைகிறது
உள்ளம் தூய்மையடைந்து இறைவனுக்கு நெருக்கமாக ஆக ஒரே வழி தொழுகைதான்
உள்ளம் தூய்மை அடைந்தால் அது உடல் நலத்துக்கு வழி வகுக்கும்
பயணத்தின் போது லுஹர், அஸ்ர், இஷாவின் 4 ரகதுகளை
இரண்டு இரண்டாகச் சுருக்கிக் கொள்ளவும் ,
லுஹர், அஸ்ர் இரண்டையும் சேர்த்துத் தொழுகவும்
மஹ்ரிப் இஷா இரண்டையும் சேர்த்துத் தொழுக அனுமதி உண்டு
சுருக்கித் தொழுவது கஸ்ர் என்றும் இரண்டு நேரத் தொழுகையை சேர்த்துத் தொழுவது ஜம்வு,கஸ்ர் என்றும் சொல்லப்படுகிறது
தொழுகையை துவங்கு முன் , துவக்கதில் , தொழுகையின் போது, நிறைவு செய்யும்போது .நிறைவு செய்தபின் ஓதும் வசனங்கள், அவற்றின் பொருள் பற்றி வரும் பகுதிகளில் பாப்போம் இறைவன் நாடினால்
நிறைவாக
தஹஜ்ஜத் தொழுகை எனும் நடு இரவுத் தொழுகை பற்றி
குர்ஆனில் எங்கு வருகிறது ?
இறைவன் நாடினால் விடைகள், விளக்கங்களுடன் அடுத்த வாரம் சிந்திப்போம்
22 முஹர்ரம்(1) 1445
11 072023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment