Tuesday, 8 August 2023

நல வாழ்வு அழுத்தப் புள்ளி k1, DU 26






 நல வாழ்வு

அழுத்தப் புள்ளி k1, DU 26
09082023 புதன்
அகு பஞ்சர்பற்றிய சென்ற பதிவில் உச்சந்தலைப் புள்ளி DU20
பற்றிப் பார்த்தோம்
இப்போது அப்படியே கீழே இறங்கி உள்ளங்கால் புள்ளி
K1
பற்றிப் பார்ப்.போம்
குழந்தைகளுக்கோ , சிறுவர்களுக்கோ பெரியவர்களுக்கோ உடல் நிலை சரியில்லாமல் குளிர் காய்ச்சல் போல் இருந்தால்
உள்ளங்காலில் வெறும் கையினாலோ அல்லது நீலகிரித் தைலம் போன்ற மூலிகை மருந்துகளைத் தடவி யோ பரபரவென்று தேய்த்து விடுவார்கள்
அப்படிப் பண்ணும்போது உள்ளங்காலில் உள்ள பல அழுத்தப்புள்ளிகள் தூண்டப்படும்
அவற்றில்ஓன்று K1
உள்ளங்காலின் நடுப்பகுதியில் இரு பாதங்களிலும் அமைந்துள்ளது
மிக எளிதில் காணலாம்
படம் பார்த்தால் தெளிவாகும்
தூக்கமின்மை (insomnia),தலைவலி , காய்ச்சல் , தலை சுற்றல் (dizziness) போன்றவற்றை சரி செய்வதில் நீண்ட காலமாக K1 புள்ளி பயன்பட்டு வருகிறது
மேலும்
முதுகு வலி,கருவுறுவதில் பிரச்சனை (Infertility), நினைவிழத்தல்
போன்ற பிரச்சனைகளும் இந்தப் புள்ளியை அழுத்தி சரி செய்யப்பட்டு வருகின்றன
K1 ஆல் குணமாகும் மனம் சார்ந்த பிரச்சனைகள்
1 அச்சம் 2 பதட்டம், 3 இவற்றால் ஏற்படும் தூக்கமின்மை
மனதை அமைதிப்படுத்தி நினைவுத்திறனை அதிகரிக்க இந்தப் புள்ளி உதவுகிறது
உடலுக்கும் மனதுக்கும் புத்துயிரூட்டி , நேர்மறை எண்ணங்களை உருவாக்கி தன்னம்பிக்கையை வளர்க்கிறது
K1
மயக்கம்., வலிப்பு , நினைவிழத்தல், hysteria
போன்ற பிரச்சனைகளுக்கு
ஒரு முக்கியமான
அவசர கால முதலுதவிப் புள்ளியாகும்
இது போல இன்னொரு அவசர காலப்புள்ளி
DU 26
இது மூக்குக்கும் மேலுதடுக்கும் இடையில் உள்ளது
மேலுதடுக்கு மேலே நடுவில் உள்ள சிறிய பள்ளம் மூக்கைத் தொடும் இடத்தில் இருக்கிறது
இதுவும் K1 போல மயக்கம் , வலிப்பு போன்ற நோய்களுக்கு
அவசர கால முதலுதவிப் புள்ளியாகும்
அதோடு முகவாதம் ,முதுகு வலி போன்ற நோய்களுக்கு பயன்படுகிறது
மதுவினால் உண்டாகும் மயக்கத்துக்கு இந்தப் புள்ளிகள் உதவாது
உதவாது
அழுத்தப்புள்ளிகள் பற்றி , அவற்றால் தீரும் நோய்கள் பற்றியும் படிக்கும் போது இதெல்லாம் உண்மையிலியே நடக்குமா என்ற ஒரு எண்ணம் மனதில் இயல்பாக உண்டாகும்
நமக்குத் தெரிந்து மருத்துவம் என்றால் உடனே நூற்றுக்கணக்கில் , ஆயிரக் கணக்கில் ,லட்சக் கணக்கில்
ஆலோசனைக் கட்டணம் , மருத்துவப் பரிசோதனைகள் மருந்து மாத்திரை அறுவை சிகிச்சை என்று செலவழிக்க வேண்டும்
Doctor treats God Cures
இதுதான் எந்த மருத்துவத்துக்கும் அடிப்படை
அக்கு பஞ்சர் மருத்துவர்கள் இது நமக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் என்ற புரிதலோடு , நோயாளியின் மேல் ஒரு உண்மையான பாசம் , பரிவோடு பணியாற்றினால் , இறைவன் அருளால் நல்லதே நடக்கும்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
09082023 புதன்
சர்புதீன் பீ (Dip in Acupuncture)

No comments:

Post a Comment