Wednesday, 16 August 2023

மனித நேயம் +&--




 மனித நேயம் +&--

1608 2023 புதன்
அவர் என் நெருங்கிய நண்பர்
முனைவர் பட்டம் பெற்றவர்
கல்லூரி விரிவுரையாளர் , பேராசிரியர், முதல்வர் என பல நிலைகளில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்
தன் மத ஒழுக்கங்களை தவறாமல் கடைப்பிடிப்பவர்
அவருக்கு ஒரு சிறிய சாலை விபத்து
போக்கு வரத்து நிறைந்த சாலையில் இரு சக்கர வண்டி ஓட்டிக் கொண்டிருந்தவர் நிலை தவறி கீழே விழுந்து விட்டார்
இறைவன் அருளால் பெரிதாக அடிபடவில்லை . ஆனால் விழுந்த அதிர்ச்சியின் தாக்கம் பெரிதாக இருந்தது
உடனே அருகில் ஒரு சிறிய கூட்டம் கூடி விட்டது
ஒருவர் வண்டியை தூக்கி ஓரமாக நிறுத்தி , பூட்டி சாவியைக் கொண்டு வந்து கொடுத்தார்
இன்னும் இருவர் விழுந்தவரை மெதுவாகத் தூக்கி நிழலான ஒரு இடத்தில் உட்கார வைத்தனர்
முகத்தில் தண்ணீர் தெளித்தார் ஒருவர், இன்னொருவர் சோடா வாங்கிக் கொண்டு வந்தார்
அந்த வழியே போன தானி ஓட்டுனர் மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டுமா எனக் கேட்டு காத்து நிற்கிறார்
சற்று நேரத்தில் தெளிவு நிலைக்கு வந்த முனைவர் எழுந்து எல்லோருக்கும் தன் மனமார்ந்த் நன்றியைத் தெரிவித்தார்
அப்போது அவர் அறிந்த உண்மை அவரை வியப்பில் ஆழ்த்தியது
ஆம் உதவியவர்கள் அனைவரும் முன் பின் தெரியாதவர்கள்
அதற்கு மேல் வேறு மதம் சார்ந்தவர்கள்
மனிதம் , மனித நேயம் என்பது இன மத எல்லைகளைக் கடந்த ஒன்று என்பதை அந்த நேரத்தில் (தான்) உணர்ந்து கொண்ட அவர்
உணர்ச்சிப் பெருக்கோடு இதை என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்
இதற்கு நேர் எதிராக ஒரு நிகழ்வு அண்மையில்
மாநகராட்சிப் பகுதி
தெருவில் நடந்து போய்கொண்டிருந்த ஒரு பெண்ணை மாடு முட்டித்தள்ளி புரட்டி எடுக்கிறது
அருகில் இருந்தவர்கள் மாட்டை விரட்ட முயன்றும் முடியவில்லை என்கிறது தொலைக்காட்சி செய்தி
தெருவில் மாடுகள் திரிந்தால் மாட்டுகாரருக்கு தண்டம் விதிக்கப்படும் , என்றெல்லாம் அறிவிப்புகள்
அதோடு நானும் அதைப்பற்றி பெரிதாக சிந்திக்கவில்லை
ஆனால் அதை ஒட்டி வந்த வெறுப்புப் பதிவு , வெறுப்பில் ஊறிய பதிவு ஓன்று என்னை மீண்டும் சிந்திக்கத் தூண்டியது
அந்தப்பெண் அணிந்திருந்த மதம் சார்ந்த உடைதான் மாடு முட்டியதற்குக் காரணம் என்ற அவரின் பதிவைப் படித்த எனக்கு அதே உடைதான் மற்றவர்கள் வேடிக்கை பார்க்கவும் கைப்பேசியில் படம் எடுக்கவும் காரணமோ என எண்ணத் தோன்றியது
இது போன்ற நச்சு விதைகளை தூவும் பதிவுகளை முளைக்கு முன்பே அழித்து ஒழிக்க வேண்டும்
16082023 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment