சுவையான செய்திகள் - செதொ நு
23082023 புதன்
ஒரு நகைச்சுவை துணுக்கு
‘அழகான இந்தப்பெண்னை நம் பேரனுக்கு திருமணம் செய்யக் கேட்டுப்பார்க்கலாம்”
கொல்லேன்று சிரிக்கிறார்கள் குடும்பத்தினர்
காரணம் அவர் பெண்ணல்ல
செ நு செய்தி வாசிப்பாளர்
கற்பனை ,நகைசுவை என்ற நிலைகளைத் தாண்டி
இதெல்லாம் உண்மை என்ற நிலை நம் நாட்டிலேயே உருவாகி விட்டது
பஞ்சாப், ஓடியா மாநில தொலைகாட்சிகள் வரும் செ நு பெண்களுக்கு மாயா , சௌந்தர்யா , கௌரி என அழகிய பெயர்கள்
செய்தி வாசிப்பதோடு, நேயர்களின் வினாக்களுக்கும் விடை சொல்கிறார்கள்
இனிமேலும் செநு என்றால் ரோபோக்கள் , ரோபோ என்றால் கருப்பு நிற இரும்பு மனிதன் என்ற நினைப்பு வேண்டாம்
நீங்கள் போகும் அலுவலகத்தில் , வணிக இடத்தில் உங்களிடம் பேசுவது ஒரு செ நு படைப்பாக இருக்கலாம்
போகிற போக்கில் நான்காம் , ஐந்தாம் பாலாகவும் கணக்கிடப்படலாம்
தகவல் தொழில் நுட்ப அலுவலங்கள் பலவற்றில் வருகைப் பதிவு செய்ய செ நு பயன் படுகிறது
பணியாளர் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் வரத் தவறினால் தொலைபேசியில் அவரைத் தொடர்பு கொண்டு , பெயர் சொல்லி அழைத்து வராதது பற்றிக் கேட்டுப் பதிவு செய்கிறது
கைப்பேசியில் நாம் அழைக்கும் நபர் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டிருப்பார்
சிறிது நேரத்தில் அவர் பேசி முடித்ததும் உங்களுக்கு செய்தி வரும்
அந்த எண்ணை இப்பொழுது தொடர்பு கொள்ளலாம் என்று
இது செ நு பயன்பாட்டின் பயன்பாட்டுக்கு மிக எளிதான ஒரு எடுத்துக்காட்டு ட
இது போல் நாம் எதாவது ஒரு பொருள் பற்றிய தகல்களை இணையத்தில் தேடினால் சிறிது நேரம் சென்று அந்தப் பொருள் பற்றிய விளம்பரங்கள் நிறைய வந்து நம்மை திணற வைப்பதும் செ நு தான்
குப்பை இருக்கும் இடத்தை தேடி அடைந்து சுத்தம் செய்யும் விளக்குமாறு, துவைக்கும் வேலை முடிந்தவுடன் ஒலிக்கும் சலவை பொறி போன்ற பலவும் நம்மோடு ஒன்றி செ நு வுக்குப் பழக்கப் படுத்தி (அடிமையாக்கி ) சோம்பலை வளர்க்கின்றன
விளைவு ? 40 வயதில் நடக்க முடியவில்லை 50 வயதில் மாடிப்படி ஏற முடியவில்லை
இது செ நு வின் மற்றொரு முகம்
அதனாலென்ன . வணிக வளாகங்கள் போல் வீடுகளிலும் நகரும் படிக்கட்டுகள் தலை காட்டத் துவங்கி விட்டன
விரைவில் நகரும் தரைகள் வந்து நடையின் தேவையைக் குறைத்து விடும்
ஆனால் செ நு ஒன்றும் புதியதோ புதுமையானதோ அல்ல என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்
இத்தாலி நாட்டு அறிஞர் லியானர் டோடாவின்சி 5 நூற்றாண்டுகள் முன்பு உருவாக்கிய செயற்கை படை வீரன்தான் உலகின் முகல் ரோபோ எனப்படுகிறது ஆண்டு 1495 –
பண்டைய கிரேக்க புராணங்களில் செ நு பற்றி வருகிறதாம்
செ நு பற்றிய தொழில் நுட்பத் தகவல்கள், அதன் நன்மைகள் , தீமைகள் –குறிப்பாக மனித இனத்தை அடக்கியாண்டு அழிக்கும் நிலைய பற்றி –
எல்லாம் முன்பு சில பகுதகளில் ஒரளவு விளக்கமாகப் பார்த்தோம்
Lighter vein இல் சில செய்திகள் மட்டுமே இன்றைய பதிவு
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
(சிந்திக்கும் எந்திரங்கள் என்ற தலைப்பில் இன்றைய தி தந்தியில் வந்த பதிவை கருவாகக் கொண்டு எழுதியது –நன்றி )
23082023 புதன்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment