Tuesday, 4 September 2018

நம் கடலூரை மீட்போமா!! 11




நம் மாவட்டத்திலிருந்து ஒரு பகுதியைப் பிரித்து புதிய வேப்பூர் மாவட்டம் அமையப் போவதாக செய்திகள் வந்துள்ளன

சிலர் இதற்கு வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருக்கின்றார்கள் 
.
இந்தப் பிரிவில் நான் காணும் நன்மைகள்
மாவட்டத் தலைநகர் ஆகும் வேப்பூர் ஒரு நல்ல நகராக உருவாகும் .
வேலை வாய்ப்புகள் பெருகும்
வணிகம் தொழில் சேவைகள் நன்கு வளரும்
புதிய மாவட்டம் அதற்கேற்ற துடிப்போடு எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடையும்

கடலூர் மாவட்டத்தின் பரப்பு குறைவதால் நிர்வாகத்திறன், கட்டுப்பாடு, வளர்ச்சி அதிகரிக்கலாம்

இப்படியெல்லாம் நம்புவோமே .
நம்பிக்கைதானே வாழ்க்கை

அண்மையில் கடலூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற திரு அன்புச் செல்வன் இ ஆ பா மக்கள் தன்னை எளிதில் அணுகலாம் என்று சொல்லியிருக்கிறார்

.காவல்துறை துறை போல் மாவட்ட நிர்வாகமும் கட்செவி (வாட்சாப்) எண்ணை அறிவித்தால்  பொதுமக்கள்  தொடர்பு கொள்ள முடியும்


இன்னும் மழைக்காலம் துவங்கவில்லை .
பெய்த ஓரிரு மழைக்கே பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேக்கம் ,கடைத்தெருவில் வெள்ளம், வாகனங்கள் சகதியில் சிக்கின
என்று செய்திகள் வந்திருக்கின்றன
வரும் மழைக்காலத்தை எதிர்கொள்ள மாவட்ட, நிர்வாகமும்  நகராட்சியும் செயலில் இறங்க வேண்டும்

கோண்டூரில் நெல்லிக்குப்பம் சாலையில் இருந்து ராம் நகர், சக்தி கணபதி நகர் இன்னும் பல நகர்களுக்கு செல்லும் இணைப்பு சாலையை சீர் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன

நல்ல செய்திதான்
ஆனால் சரியான மாற்று வழி இல்லாததால் மக்கள் பெரிதும் அவதிக்கு ஆளாகிறார்கள் .சாலையே இல்லாத பல மேடு பள்ளங்களைக் கடந்து போக வேண்டியிருக்கிறது .
ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரால்  பிரச்சினை மேலும் பெரிதாகிறது
சாலை சீர் செய்யும் பணியை விரைவில் நல்ல முறையில் செய்து முடிக்க அரசு ஆவன செய்ய வேண்டும்

இறைவன் நாடினால் மீண்டும் ச(சி)ந்திப்போம் 
  
Blog Address
sherfuddinp.blogspot.com

B.FB 05092018

No comments:

Post a Comment